ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முடிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
 
:எஞ்சியிருந்த படைப்பிரிவுகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தனித்தனியே சரணடைந்தன. மே 8ம் தேதி, [[டான்சிக்]] நகரம், [[சென் நசேர்]] துறைமுகம், [[கிரீஸ்|கிரேக்கத் தீவுகள்]], [[விஸ்துலா ஆறு|விஸ்துலா வடிநிலம்]] ஆகிய பகுதிகளிலிருந்த சரணடைந்தன. மே 13ம் தேதி சோவியத் படைகள் ஐரோப்பாவில் தங்கள் போர் நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டன. மே 16ம் தேதி கால்வாய் தீவுகளில் ஒன்றான அல்டெர்னியில் இருந்த ஜெர்மானியப்படைகள் சரணடைந்தன. மே 20ம் தேதி ஐரோப்பாவில் கடைசி சண்டையும் முடிவுக்கு வந்தது. நெதர்லாந்தின் தீவுகளில் ஒன்றான டெக்சல் தீவில் [[சியார்சியா (நாடு)|சியார்சியாவின்]] [[போர்க்கைதி]]களுக்கும் ஜெர்மானிய காவல்ப்படைகளுக்கும் ஏப்ரல் 5ம் தேதி முதல் நடைபெற்றுவந்த சண்டை முடிவுக்கு வந்தது. இத்துடன் ஐரோப்பாவில் அமைதி திரும்பியது.
[[File:Paradejack.jpg|right|thumb|250px|கைப்பற்றப்பட்ட ஜெர்மானியப் படைப்பிரிவுச் சின்னங்கள்]]
 
*'''டோனிட்சின் அரசு கலைப்பு''': ஜெர்மனியின் படைகள் மே 8ம் தேதி அதிகாரப்பூர்வமாக சரணடைந்திருந்தாலும் அதன் குடிசார் அரசாங்கம் சரணடையாமல் இருந்தது. டோனிட்ஸ் தலைமையிலான இந்த அரசு ஃபிளன்ஸ்பெர்க் அரசு என்றழைக்கப்பட்டது. மே 8ம் தேதிக்குப் பின் இரு வாரங்களுக்கு இதனை நேசநாட்டுப் படைகள் கண்டுகொள்ளவில்லை. படைகள் சரணடைந்து, அரசு சரணடையவில்லையெனில் பிற்காலத்தில் சட்ட சிக்கல்கள் உருவாகும் என்பதை நேசநாட்டுப் போர்த் தலைமையகம் உணர்ந்தது. 1918ல் [[முதல் உலகப் போர்|முதல் உலகப் போரில்]] இதே போன்று ஒரு நிலை உருவானதை பின்னாளில் ஹிட்லர் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார் (படைகள் துரோகம் செய்துவிட்டன, அரசு சரணடையவே இல்லையென்ற பிம்பத்தை உருவாக்கி). அதுபோல பிற்காலத்தில் மீண்டுமொரு நிலை உருவாகக் கூடாது என்று ஐசனாவர் கருதினார். இதனால் மே 23ம் தேதி டோனிட்சின் ஃபிளன்ஸ்பெர்க் அரசு அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டு அதன் அமைச்சர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
[[File:Germany occupation zones with border.jpg|right|thumb|300px|ஜெர்மனியின் நான்கு நேசநாட்டு ஆக்கிரமிப்புப் பகுதிகள்]]
 
*'''நேச நாட்டு வெற்றிப் பிரகடனம்''': ஜூன் 5ம் தேதி அமெரிக்கா, சோவியத் யூனியன், ஐக்கிய இராச்சியம், பிரான்சு ஆகிய நான்கு நாடுகளும் ”ஜெர்மனியின் தோல்வி மற்றும் நேச நாடுகள் ஜெர்மனி மீதான முழுப்பொறுப்பேற்பு”த் தீர்மானத்தில் கையெழுத்திட்டன. இத்துடன் அதிகாரக்பூர்வமாக நேச நாட்டு வெற்றி சாற்றப் பட்டது.