மத்தேயு நற்செய்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
சி சேர்க்கை
வரிசை 1:
[[படிமம்:Apostle Matthew on St.Isaac cathedral (SPb).jpg|thumbnail|250px|<center>புனித மத்தேயு,<br />புனித ஈசாக்கு தேவாலயம் பீட்டர்ஸ்பர்க்,[[இரசியா]]</br></center>]]
{{புதிய ஏற்பாடு நூல்கள்}}
'''மத்தேயு நற்செய்தி''' [[விவிலியம்|விவிலியத்தின்]] [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டிலுள்ள]] நான்கு [[நற்செய்திகள்|நற்செய்தி]] நூல்களில் முதலாவது நூலாகும்<ref>[http://en.wikipedia.org/wiki/Gospel_of_Matthew மத்தேயு]</ref>. இது [[இயேசு]]வின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் வழங்கிய போதனைகளையும் தொகுத்தளிக்கிறது. இந்நூல் புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ள முதல் நூல். மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் நீண்ட பெயர் '''மத்தேயு எழுதிய நற்செய்தி''', κατὰ Ματθαῖον εὐαγγέλιον (Kata Matthaion Euangelion = The Gospel according to Matthew) என்பதாகும்.
 
 
வரிசை 13:
 
 
[[இயேசு கிறித்து]] நிறுவிய [[இறையாட்சி]] <ref>[http://en.wikipedia.org/wiki/Kingdom_of_God விண்ணரசு - கடவுளின் ஆட்சி]</ref> பற்றிய நற்செய்தியைத் [[திருத்தூதர்]] மத்தேயு முதன்முதலில் எழுதினார் என்றும் அதனை அரமேய மொழியில் எழுதினார் என்றும் திருச்சபை மரபு கருதுகிறது. எனினும் இன்று நம்மிடையே இருக்கும் கிரேக்க மத்தேயு நற்செய்தி நூல் ஒரு மொழிபெயர்ப்பு நூலாகத் தோன்றவில்லை. இயேசுவைப் பின்பற்றிய ஒரு [[திருத்தூதர்]] தாமே நேரில் கண்ட, கேட்ட நிகழ்ச்சிகளை நூலாக வடித்திருக்கிறார் என்பதைவிட, அவரது வழிமரபில் வந்த சீடரோ, குழுவினரோ இதனைத் தொகுத்து எழுதியிருக்க வேண்டும் எனக் கொள்வதே சிறப்பு.
 
 
வரிசை 37:
 
 
கிரேக்க மொழி பேசும் யூதர் நிறைந்த அந்தியோக்கியா போன்ற நகரங்களில் யூதக் கிறித்தவர்களும் பிற இனத்துக் கிறித்தவர்களும் திருச்சபையில் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களுக்குள் பல சிக்கல்கள் இருந்தன. இது தவிர யூதக் கிறித்தவர்கள் பலர் மற்ற யூதர்களால் துன்புறுத்தப்பட்ட நிலையில் மனத் தளர்ச்சியடைந்து இருந்தனர். இயேசுதான் உண்மையான மெசியாவா என்ற ஐயப்பாடு அவர்கள் உள்ளத்தில் எழுந்தது. இச்சிக்கல்களுக்குத் தீர்வுகாண இந்நூல் எழுதப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. யூதர்கள் எதிர்பார்த்திருந்த [[மெசியா]] இயேசுதாம் என யூதக் கிறித்தவர்களுக்கு அழுத்தமாக இந்நூல்மத்தேயு நற்செய்தி கூறுகிறது. அவர் இறைமகன் என்பது வலியுறுத்தப்படுகிறது. அவருடைய வருகையில் இறையாட்சி இலங்குகிறது எனும் கருத்து சுட்டிக்காட்டப்படுகிறது.
 
 
வரிசை 85:
 
 
இறுதியாக, அதிகாரங்கள் 26-28இல். இயேசுவின் சாவும் உயிர்த்தெழுதலும் விளக்கம் பெறுகின்றன. மாற்கு நற்செய்தி, இயேசுவின் கல்லறை வெறுமையாக இருந்தது என்ற செய்தியோடு முடிந்தது. ஆனால், மத்தேயு நற்செய்தியில், உயிர்த்தெழுந்த இயேசு கலிலேயாவில் தோன்றிய செய்தி சேர்க்கப்பட்டுள்ளது. அப்போதுஇறுதி முறையாகத் தோன்றிய இயேசு, தம் சீடர்களிடம் தம் நற்செய்தியை உலகெங்கும் சென்று அறிவிக்குமாறு பணிக்கின்றார் (மத் 28:16-20).
 
 
வரிசை 160:
| 53 - 61
|}
 
==மத்தேயு நற்செய்தியின் இறையியல்==
 
 
மத்தேயு நற்செய்தியின்படி, இயேசு அறிவித்த போதனையின் மையக் கருத்து '''விண்ணரசு''' (கடவுளின் ஆட்சி) ஆகும். கடவுள்தாம் படைப்புலகு அனைத்தையும் ஆண்டு வழிநடத்துபவர் என்னும் உண்மையை அனைவரும் ஏற்று, அந்த நம்பிக்கைக்கு ஏற்பத் தம் வாழ்க்கையைச் சீர்படுத்திக் கொள்வதைக் குறிப்பதே '''கடவுளின் ஆட்சி'''யாகும். இந்தக் கடவுளின் ஆட்சியைத்தான் மத்தேயு '''விண்ணரசு''' என்று குறிப்பிடுகிறார். யூதர்கள் கடவுளின் பெயரை வெளிப்படையாக உரைப்பதில்லை; மாறாக கடவுளின் உறைவிடமாகிய விண்ணகம் சில வேளைகளில் கடவுளையே குறிக்கும். இவ்வாறு, '''விண்ணரசு''' என்று மத்தேயு கூறுவது உண்மையிலே '''கடவுளின் அரசு''', '''இறையாட்சி''', '''கடவுளின் ஆட்சி''' என்றே பொருள்படும்.
 
 
மத்தேயுவில் காணும் போதனைப்படி, விண்ணரசின் முழுமை இன்னும் வரவில்லை என்பது உண்மையே. ஆகவேதான், இயேசுவின் சீடர் ''உமது ஆட்சி வருக'' (மத் 6:10) என்று இறைவேண்டல் செய்கிறார்கள். எனினும், கடவுளின் ஆட்சியானது ஏற்கெனவே தொடங்கிவிட்டது. அந்த ஆட்சியின் முன்சுவையாக, தொடக்கமாக இருப்பவர் இயேசு. அவர் மக்களுக்கு நலமளிப்பதில் ஈடுபட்டார்; உவமைகள் வழி இறையாட்சியின் பண்புகளை விளக்கினார்; குறிப்பாக, தம் சாவு மற்றும் உயிர்த்தெழுதல் வழியாக இறையாட்சியின் உண்மையை நிலைநிறுத்தினார்.
 
 
இறையாட்சி அல்லது விண்ணரசு பற்றிய இந்த இரு கூறுகளையும் மத்தேயு நற்செய்தியில் காண்கின்றோம். ஏற்கெனவே இயேசுவோடு தொடங்கிவிட்ட இந்த ஆட்சி இன்னும் தன் முழுமையை எய்தவில்லை. இந்த முழுமையை மத்தேயு நற்செய்தி விவரிக்கிறது (காண்க: மத். அதிகாரங்கள் 24, 25). இறையாட்சியின் நிறைவை எதிர்பார்த்து மனிதர் ''விழிப்பாக'' இருக்க வேண்டும் என்று மத்தேயு நற்செய்தி கூறுகிறது (காண்க: மத். 24:42; 25:13).
 
மத்தேயு, ''சிறியோர்'' மட்டில் நாம் காட்ட வேண்டிய அன்பையும் கரிசனையையும் மிகவும் வலியுறுத்துகிறார் (மத் 10:42). இயேசுவின் சீடர்களும் ''சிறியோராக'' மாற வேண்டும். ஏன், மக்களினத்தார் அனைவருக்கும் கடவுள் தீர்ப்பு வழங்கும்போது, அவர்கள் ''சிறியோர்'' மட்டில் அன்புகாட்டினரா என்பதை அளவீடாகக் கொண்டே தீர்ப்பு வழங்குவார் என மத்தேயு நற்செய்தி காட்டுகிறது (மத் 25:31-46).
 
==மத்தேயு நற்செய்தியில் இயேசுவுக்கு வழங்கப்படும் பெயர்கள்==
 
இயேசுவின் வேர்கள் இசுரயேலின் வரலாற்றிலும் அதன் திருநூல்களிலும் காணக்கிடக்கின்றன என்பதை நிலைநாட்டியபின், இயேசுவுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்த சிறப்புப் பெயர்களுக்கு யூத மரபின் அடிப்படையில் விளக்கம் தருகிறார் மத்தேயு.
 
 
எடுத்துக்காட்டாக, மத்தேயு நற்செய்தியின் தொடக்கத்தையும் முடிவையும் எடுத்துக்கொண்டால், மத் 1:23இல் இயேசு '''இம்மானுவேல்''' என்று அடையாளம் காட்டப்படுகிறார். இந்த எபிரேயச் சொல்லுக்குக் ''கடவுள் நம்மோடு இருக்கிறார்'' என்பது பொருள். நூலின் இறுதியில், உயிர்த்தெழுந்த இயேசு, "இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என வாக்களிக்கிறார் (மத் 28:20). இவ்வாறு, இயேசு கடவுளின் உடனிருப்பாக மனிதரிடையே வந்தார் என்பதோடு, அவரது உடனிருப்பும் எக்காலத்திற்கும் தொடரும் என்னும் உண்மையை மத்தேயு நற்செய்தி வழங்குகிறது.
 
 
மத்தேயுவில் இயேசுவுக்கு வழங்கப்படும் இன்னொரு பெயர் '''கடவுளின் மகன்''' (காண்க: மத் 2:15). இங்குப் [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டு]] நூலாகிய [[ஓசேயா (நூல்)|ஓசேயாவிலிருந்து]] 11:1 மேற்கோளாகக் காட்டப்படுகிறது. அதில் ''இசுரயேல்'' கடவுளின் மகன் என அழைக்கப்படுகிறது. அதுபோல, இயேசு '''தாவீதின் மகன்''' என அழைக்கப்படுகிறார். முற்காலத்தில் தாவீதுக்கு மகனாயிருந்த சாலமோனைப் போல, ஏன் அவரைவிடவும் மேலாக, இயேசு ஞானத்தைப் போதிப்பவராகவும் குணமளிப்பவராகவும் வந்தார். எனவே, அவர் '''தாவீதின் மகன்'''தான்.
 
 
இயேசுவுக்கு மத்தேயு வழங்கும் இன்னொரு பெயர் '''கடவுளின் ஊழியன்''' என்பதாகும். மனிதர்களின் துன்பங்களைத் தம்மேல் சுமந்துகொண்டு (காண்க: மத் 8:17; 12:18-21), முற்காலத்தில் எசாயா இறைவாக்கினர் விவரித்த ''கடவுளின் ஊழியனைப்'' போல இயேசுவும் இறை விருப்பத்தை நிறைவேற்றினார் (காண்க: எசா 53:4; 42:1-4).
 
 
மத்தேயு நற்செய்தி இயேசுவுக்குக் '''கடவுளின் ஞானம்''' என்னும் பெயரையும் வழங்குகிறது (காண்க: மத் 11:19, 25-30). இயேசு கடவுளின் ஞானத்தை மக்களுக்கு அறிவித்தவர் ஆதலால் இறைவாக்குகளும் திருச்சட்டமும் உண்மையிலேயே எதில் அடங்கியுள்ளன என்று அதிகாரத்தோடு போதித்தார் (காண்க: மத் 7:12; 22:34-40).
 
 
இயேசு யூத சமயத் திருச்சட்டத்தை நிறைவேற்ற வந்தாரே ஒழிய, அதை அழிப்பதற்கல்ல (மத் 5:17). எனவே இயேசு வழங்கியதாக ஐந்து பேருரைகளை மத்தேயு அமைத்துள்ளார். அந்த உரைகளில் இயேசுவின் போதனை அடங்கியுள்ளது. அந்தப் போதனைகளிலிருந்து பெறப்படும் வாழ்க்கை நெறியும் தரப்படுகிறது.
 
 
எனவே, மத்தேயு நற்செய்தியிலிருந்து '''இயேசுவின் வழியாகக் கடவுள் நம்மோடு இருக்கிறார்''' (மத் 1:23; 28:20) என்னும் உறுதியைப் பெறுகிறோம். இயேசுவின் திருச்சபை, கடவுளின் மக்களை உள்ளடக்கும் அவையாக, குழுவாக உள்ளது எனவும் அறிகிறோம் (மத் 21:33-46).
 
 
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மத்தேயு_நற்செய்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது