ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முடிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
 
==முக்கிய நிகழ்வுகளின் காலவரிசை==
*'''[[முசோலினி]]யின் மரணம்''' ஏப்ரல் 27, 1945ல் நேசநாட்டுப் படைகள் [[மிலான்]] நகரை சுற்றி வளைத்தன. அங்கிருந்து [[சுவிட்சர்லாந்து]]க்கு தப்ப முயன்ற [[இத்தாலி]] நாட்டு சர்வாதிகாரி முசோலினி இத்தாலிய [[பாசிசம்|பாசிச]] எதிர்ப்புப் படையினரிடம் சிக்கினார். அவர்கள் அவரைக் கொன்று அவரது உடலை மிலானமிலான் நகரின் முக்கிய சதுக்கங்களின் ஒன்றில் தொங்க விட்டனர். ஏப்ரல் 29ம் தேதி எஞ்சியிருந்த இத்தாலிய பாசிச படைகள் சரணடைந்தன.
[[File:Stars & Stripes & Hitler Dead2.jpg|left|thumb|250px|ஹிட்லரின் மரணத்தை அறிவிக்கிறது அமெரிக்க படை இதழான ஸ்டார்ஸ் அண்ட் ஸ்டிரைப்ஸ்]]
*'''[[ஹிட்லர்|ஹிட்லரின்]] தற்கொலை''': ஏப்ரல் 30ல் [[பெர்லின் முற்றுகை|முற்றுகையிடப்பட்ட]] [[பெர்லின்]] நகரில் ஹிட்லர் தனது [[பியூரர் பதுங்கு அறை|பதுங்கு அறையில்]] தற்கொலை செய்து கொண்டார். அவருடன் அவரது மனைவி [[இவா பிரான்|இவா பிரானும்]] தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது உயிலில் தனக்குப்பின் அட்மைரல் [[கார்ல் டோனிட்ஸ்]] நாசி ஜெர்மனியின் குடியரசுத் தலைவராக வேண்டுமென்றும் [[ஜோசப் கோயபெல்ஸ்]] வேந்தராக வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் மே 1ம் தேதி கோயபெல்சும் தற்கொலை செய்து கொண்டதால், டோனிட்ஸ் மட்டும் ஜெர்மனியின் புதிய தலைவரானார்.
வரிசை 27:
:வேறு வழியின்றி மே 7ம் தேதி அதிகாலை 2.41 மணிக்கு டோனிட்சின் உத்தரவின் பேரில் யோட்ல் நிபந்தனையற்ற சரணடைவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த நிகழ்ச்சி [[பிரான்சு|பிரான்சின்]] ரெய்ம்சு நகரில் அமைந்திருந்த நேச நாட்டு ஐரோப்பிய போர்த் தளபதியின் தலைமையகத்தில் நடைபெற்றது. மறுநாள் இதே போன்று மற்றொரு சரணடைவு நிகழ்ச்சி பெர்லின் நகரில் நடைபெற்றது. ஜெர்மானியத் தளபதி [[வில்லெம் கெய்ட்டெல்]] சோவியத் தளபதி மார்ஷல் கிரகோரி சூக்கோவின் முன்னிலையில் சரணடைவு ஒப்பந்ததித்தில் கையெழுத்திட்டார். போர் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அனைத்து ஜெர்மானியப் படைகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
[[File:Notice of end of war against German Soldier.jpg|left|thumb|250px|ஐரோப்பாவில் வெற்றி நாள் வாழ்த்துச் செய்தி]]
*'''ஐரோப்பாவில் வெற்றி''': ஜெர்மனி சரணடைந்த செய்தி பரவி [[அமெரிக்கா]]விலும், [[மேற்கு ஐரோப்பா]]விலும் மே 8ம் தேதி கொண்டாட்டங்கள் தொடங்கின. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் ”வி. ஈ தினம்“ (VE Day - Victory in Europe Day) என்று கொண்டாடப்படுகிறது. சோவியத் யூனியனிலும், [[கிழக்கு ஐரோப்ப்பா|கிழக்கு ஐரோப்பிய]] நாடுகளிலும் மே 9 ம் தேதி வி. ஈ தினம் என்று கொண்டாடப்படுகிறது. (கிழக்கிற்கும் மேற்கிற்கும் உள்ள கால வித்தியாசக் காரணத்தாலகாரணத்தால்)
 
*'''போர் நிறுத்தம்''' ஐரோப்பாவில் எஞ்சியிருந்த ஜெர்மானியப் படைகளில் பெரும்பாலானவை தங்கள் போர்த் தலைமையகத்தின் போர் நிறுத்த ஒப்பந்ததை ஏற்றுக் கொண்டன. ஆனால சில படைப்பிரிவுகள் மட்டும் அதனை ஒப்புக்கொள்ளவில்லை. ஆர்மி குரூப் மத்தியின் தளபதி ஃபெர்டினான்ட் ஷோர்னர் இந்த சரணடைவு உத்தரவை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார் (ஹிடலரின் உயிலின்படி ஜெர்மானியப் படைகளின் முதன்மைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார் ஷோர்னர்). இதனால் சோவியத் படைகள் அவரது படைப்பிரிவை அழிக்க பிராக் தாக்குதல் நடவடிக்கையைத் தொடங்கின. இதனால் அச்சம் கொண்டு அவர் [[ஆஸ்திரியா]] நாட்டுக்கு தப்பிவிட்டார். மே 11ம் தேதி ஆர்மி குரூப் மத்தி சோவியத் படைகளிடம் சரணடைந்தது.