அசோக் கெலட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உ.சே
வரிசை 36:
 
==அரசியல் வாழ்வு==
இளமை முதலே அரசியலில் ஈடுபாடு கொண்ட கெலட் 1980-84 காலத்தில் [[ஏழாவது மக்களவைக்குமக்களவை]]க்கு ஜோத்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து [[எட்டாவது மக்களவை]] (1984–1989),[[பத்தாவது மக்களவை]] (1991–1996), [[பதினொன்றாவது மக்களவை]] (1996–1998), [[பனிரெண்டாவது மக்களவை]] (1998–1999)களில் அத்தொகுதியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999ஆம் ஆண்டு ஜோத்பூரின் சர்தார்புரா சட்டப் பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதே தொகுதியிலிருந்து 2003ஆம் ஆண்டு தேர்தலிலும் 2008ஆம் ஆண்டு தேர்தலிலும் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார்.
===நடுவண் அரசியல்===
[[இந்திரா காந்தி]], [[ராஜீவ் காந்தி]] மற்றும் [[பி. வி. நரசிம்மராவ்]] ஆய அமைச்சுகளில் கெலட் பணியாற்றியுள்ளார்.1982ஆம் ஆண்டில் சுற்றுலா வளர்ச்சி மற்றும் உள்நாட்டு விமானத்துறை துணை அமைச்சராகவும்,பின்னர் விளையாட்டுத்துறை துணை அமைச்சராகவும்
பணியாற்றி உள்ளார். 1985ஆம் ஆண்டு சுற்றுலா வளர்ச்சி மற்றும் உள்நாட்டு விமானத்துறை இணை அமைச்சராக பதவி உயர்வு பெற்றார். பின்னர் நெசவுத்துறை தனிப்பொறுப்புடன் இணைஅமைச்சராக பணியாற்றினார்.
 
1994ஆம் ஆண்டு முதல் 1999 வரை இராசத்தான் பிரதேச காங்கிரசின் தலைவராக கட்சிப்பணி ஆற்றினார்.2004ஆம் ஆண்டு முதல் அனைத்திந்திய காங்கிரசின் பொதுச்செயலராக நியமிக்கப்பட்டார்.பிப்ரவரி 2009 வரை இந்தப் பதவியில் நீடித்தார்.[[இமாச்சலப் பிரதேசம்]] மற்றும் [[சத்தீசுக்கர்]] மாநில காங்கிரசு நடவடிக்கைக்களின் மேற்பார்வையாளராக இருந்தார்.
 
===மாநில முதல்வராக===
1998ஆம் ஆண்டு முதன்முறையாக இராசத்தான் மாநில முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.2003ஆம் ஆண்டு வரை ஐந்தாண்டுகள் ஆட்சியில் பஞ்ச நிவாரணம்,மின்னாற்றல் உற்பத்தி,கட்டுமான வளர்ச்சி,வேலைவாய்ப்பு பெருக்கம் ஆகியவற்றில் முனைப்பாகச் செயல்பட்டார்.
 
ஆயினும் 2003ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரசு தோல்வியைத் தழுவியது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைக் கைப்பற்றி வசுந்தரா ராஜே சிந்தியா முதல்வராகப் பொறுப்பேற்றார். இருப்பினும் அவரது ஆட்சி பிற்பட்ட வகுப்பினர் குஜ்ஜர்களுக்கு சரியான தீர்வு காணாத நிலையில் 2008ஆம் ஆண்டு நடந்த பேரவைத் தேர்தல்களில் மீண்டும் காங்கிரசு வெற்றிப் பெற்றது.
 
அசோக் கெலட் 13 திசம்பர் 2008 அன்று இரண்டாம் முறையாக இராசத்தான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
 
{{S-start}}
{{Succession box|
before=[[பைரோன்சிங் சேகாவத்]]|
title=[[இராசத்தான்]] [[முதலமைச்சர்]]|
years=1998—2003|
after=[[வசுந்தரா ராஜே சிந்தியா]]
}}
{{End box}}
 
{{S-start}}
{{Succession box|
before=[[வசுந்தரா ராஜே சிந்தியா]]|
title=[[இராசத்தான்]] [[முதலமைச்சர்]]|
years=2008—நடப்பு|
after=[[Incumbent]]
}}
{{End box}}
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளியிணைப்புகள்==
*All About Mr. Ashok Gehlot, Chief Minister, Rajasthan, INDIA Website : [http://www.cmo.rajasthan.gov.in www.cmo.rajasthan.gov.in]
*Ashok Gehlot on TOI Ashok Gehlot took everyone by surprise earlier this month when he decided to clamp down on Pravin Togadia of the VHP. The firebrand Hindutva leader was arrested for distributing trishuls and making inflammatory speeches. In a conversation with Neelabh Mishra, the chief minister defends his government’s action: [http://timesofindia.indiatimes.com/articleshow/45083119.cms]
*Ashok Gehlot on ZEE TV (RU-BA-RU)[http://www.google.com/imgres?imgurl=http://www.rajeevshukla.com/Video/VideoImage/P09-Ru-Ba-Ru-Ashok%2520Gehlot%2520-415x312-PK.jpg&imgrefurl=http://www.rajeevshukla.com/VideoLib.aspx%3Fi%3D107&h=312&w=415&sz=135&tbnid=sBFv842oD7Nc-M::&tbnh=94&tbnw=125&prev=/images%3Fq%3Dashok%2Bgehlot&hl=en&usg=__VyDZjkDbpuYeZ4iiMT6F7ShfAV0=&sa=X&oi=image_result&resnum=2&ct=image&cd=1]
*[http://www.rediff.com/election/1999/aug/30gehlot.htm]
*Ashok Gehlot Details- http://rajassembly.nic.in/ashok-gehlot.htm
 
 
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதிகள்]]
[[Category:1951 பிறப்புகள்]]
[[Category:வாழும் நபர்கள்]]
[[Category:இராசத்தான் அரசியல்வாதிகள்]]
 
[[bn:অশোক গহলোত]]
[[hi:अशोक गहलोत]]
[[mr:अशोक गेहलोत]]
[[te:అశోక్ గెహ్లాట్]]
"https://ta.wikipedia.org/wiki/அசோக்_கெலட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது