"நுகர்வு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

32 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு: th:การบริโภค)
==ஆய்வுகள்==
 
நுகர்வு பற்றிய ஆய்வுகள், சமூகமும், தனியாட்களும் (தனி நபர்களும்) எவ்வாறு, ஏன் பண்டங்களையும், சேவைகளையும் நுகர்கிறார்கள் என்றும், எப்படி இது சமூக மற்றும் மனிதத் தொடர்புகளைப் பாதிக்கிறது என்பதையும் அறிய முயல்கின்றன. இன்றைய ஆய்வுகள், பொருள் விளக்கம், அடையாள உருவாக்கத்தில் நுகர்வின் பங்கு, [[நுகர்வோர் சமூகம்]] ஆகியவை தொடர்பில் கவனம் செலுத்துகின்றன. முன்பு, [[உற்பத்தி]], அதனைச் சூழவுள்ள [[அரசியல்]], பொருளாதார விடயங்களோடு ஒப்பிடுகையில், நுகர்வு என்பது முக்கியமற்ற ஒன்றாகவே நோக்கப்பட்டது. நுகர்வோர் சமூகத்தின் வளர்ச்சியும், சந்தையில் வளர்ந்துவரும் நுகர்வோர் சக்தியும், [[சந்தைப்படுத்தல்]], [[விளம்பரம்]] செய்தல், நெறிமுறைசார் நுகர்வின் (ethical consumption) வளர்ச்சி, போன்றவையும், நுகர்வை, நவீன வாழ்க்கை முறையின் முக்கிய விடயமாக ஏற்றுக்கொள்ள வைத்துள்ளன. நுகர்வு சார்ந்த [[சமூகவியல்]], வெப்லென் (Veblen) என்பாரின் ''கவனத்தை ஈர்க்கும்'' நுகர்வு பற்றிய ஆரம்பகால ஆக்கத்தைக் கடந்து வெகுதூரம் முன்னேறிவிட்டது. உற்பத்தியாளர்களாலும், சமூக நிலைமைகளாலும் பாதிக்கப்படுபவர்களாக [[நுகர்வோர்|நுகர்வோரை]] நோக்கும் அணுகுமுறை வளர்ந்து வருவதனால், இன்றைய கோட்பாடுகள், நுகர்வைக் கட்டுப்படுத்தும் பொருளாதார, [[பண்பாடு|பண்பாட்டுக்]] காரணிகளைப் பற்றி ஆராய்கின்றன.
 
 
741

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/645754" இருந்து மீள்விக்கப்பட்டது