"தேவநாகரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

104 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{brahmic}}
 
'''தேவநாகரி (Devanagari)''' (देवनागरी) என்பது [[சமஸ்கிருதம்]], [[ஹிந்தி மொழி|ஹிந்தி]], [[மராட்டி மொழி|மராட்டி]], [[காஷ்மீரி மொழி|காஷ்மீரி]], [[சிந்தி மொழி|சிந்தி]] போன்ற இந்திய மொழிகளையும், [[நேபாளி மொழி|நேபாளி]]யையும் எழுதப் பயன்படுத்தும் ஒரு [[எழுத்து முறைமை]]யாகும். தேவநாகரி [[அபுகிடா]] என்று அழைக்கப்படும் [[எழுத்து முறைமை]] வகையைச் சேர்ந்தது. [[அபுகிடா]] என்பது ஒவ்வொரு மெய்யெழுத்தும் உள்ளார்ந்த உயிரெழுத்தொன்றைக் (இங்கே "அ") கொண்டிருக்கும், வேறு குறியீடுகளைச் சேர்ப்பதன் மூலம் இதனை மாற்றிக்கொள்ள முடியும். தேவநாகரி, கி.மு 500 வாக்கில் புழக்கத்துக்கு வந்த [[பிராமி அரிச்சுவடி|பிராமி]]யின் வாரிசாகக் கருதப்படுகின்றது. பிராமி எழுத்துக்கள் கிழக்கு [[அராமைக்அரமேய மொழி]] [[அரிச்சுவடி]] போன்ற செமிட்டிக் எழுத்துக்களிலிருந்து உருவானதாகப் பெரும்பாலான அறிஞர்கள் கருதுகின்றார்கள். [[கி.மு 2600]] ஆண்டுகள் வரையாவது பழமையான [[சிந்து வெளிசமவெளி]] எழுத்துக்களிலிருந்து தோன்றியிருக்கக்கூடுமென்ற அதிகம் ஏற்றுக்கொள்ளப்படாத கருத்தும் உண்டு. [[பிராமிக் குடும்பம்|பிராமிக் குடும்பத்தை]]ச் சேர்ந்த வேறு எழுத்துக்களையும் ஏனைய பல இந்திய மொழிகள் பயன்படுத்துகின்றன.
 
தேவநாகரி என்னும் சொல், கடவுள் என்பதைக் குறிக்கும் சமஸ்கிருதச் சொல்லான "தேவ" என்பதும், நகரம் என்பதைக் குறிக்கும் "நாகரி" என்பதும் சேர்ந்து உருவானது. இச் சொல், கடவுளின் நகரத்தின் எழுத்து என்ற பொருள்படும்.
தேவநாகரி இடமிருந்து வலமாக எழுதப்படுகின்றது. சமஸ்கிருதத்தில் சொற்கள், மேற்கோடு முறியாமல் இடைவெளியின்றி எழுதப்படுகின்றன. இதற்குச் சில விதிவிலக்குகளும் உண்டு. நவீன மொழிகளில் சொற்கள் தனித்தனியாக எழுதப்படுகின்றன. தேவநாகரியில் ஆங்கிலத்திலிருப்பது போல் பெரிய, சிறிய எழுத்து வேறுபாடுகள் கிடையாது.
 
சமஸ்கிருத எழுத்துக்கூட்டல் [[phonetics|phoneticஒலிப்பியல்]] முறை ஆனாலும் வரலாற்று மாற்றங்களினால் தேவநாகரியிலெழுதப்படும் நவீன மொழிகள் ஓரளவு மட்டுமே ஒலிப்பியல் [[phonetics|phonetic]]முறைமையைக் கொண்டுள்ளது. அதாவது தேவநாகரியில் எழுதப்படும் சொற்கள் ஒரு வழியாக மட்டுமே உச்சரிக்கப்படமுடியுமாயினும், எல்லா உச்சரிப்புக்களையும் அச்சொட்டாக எழுத முடியாது. தேவநாகரி 34 [[மெய்யெழுத்து]]க்களையும் (வியாஞ்சன்வியஞ்சன்), 12 [[உயிரெழுத்து]]க்களையும் (ஸ்வார்ஸ்வர்) கொண்டுள்ளது.
 
பின்வரும் அட்டவணைகளிலுள்ள transliterations பிரபல [[National Library at Calcutta romanization]] முறையைப் பின்பற்றியுள்ளது. [[ITRANS குறியீடு]] [http://www.aczone.com/itrans/#itransencoding] தேவநாகரியை ஆங்கிலத்துக்கு மாற்றுவதற்கான ஒரு lossless transliteration முறையாகும். இது [[Usenet]] இல் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. ITRANS முறையில் தேவநாகரி என்னும் சொல் "devanaagarii" என எழுதப்படும்.
29

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/645842" இருந்து மீள்விக்கப்பட்டது