"பெங்களூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

302 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
r2.5.2) (தானியங்கிஇணைப்பு: hif:Bangalore; cosmetic changes
சி (தானியங்கி: இல்லாத பக்கத்துக்கான சுட்டியைத் (daviscup.com) திருத்துதல்)
சி (r2.5.2) (தானியங்கிஇணைப்பு: hif:Bangalore; cosmetic changes)
 
 
சொல்வழக்கு கதையாக இருந்தாலும் கூட பிரபலமான பழைய சம்பவம் ஒன்று இவ்வாறு நினைவு கூர்கிறது: 11 ஆம் நூற்றாண்டின் [[ஹோய்சலா|ஹோய்சாலா]] அரசரான [[இரண்டாம் வீர பல்லாலா|இரண்டாம் வீர பல்லாலர்]], வேட்டையாட சென்ற போது காட்டில் வந்த வழியை மறந்து விட்டார். பசியிலும் களைப்பிலும் இருந்த போது, ஒரு ஏழை கிழவியை அவர் சந்தித்தார். அந்த கிழவி அவருக்கு அவித்த பயிறு பரிமாறினார். ராஜா நன்றியுடன் "பென்ட-கால்-உரு" ({{lang-kn|ಬೆಂದಕಾಳೂರು}}) (வார்த்தை அர்த்தத்தில், "அவித்த பீன்ஸ்களின் நகரம்") என்று அந்த இடத்திற்கு பெயரிட்டார். அது இறுதியில் "பெங்களூரு" என்று ஆனது.<ref name="Bendakaaluru">{{cite web|url=http://www.deccanherald.com/archives/Oct302006/index20581420061029.asp|title=Many miles to go from Bangalore to Bengaluru|author=Vijesh Kamath|publisher=Deccan Herald|accessdate=2007-07-02}}</ref><ref name="gandubhoomi"></ref>
 
 
[[தென் இந்தியா|தென்னிந்திய]] மாநிலமான கர்நாடகாவின் தென்கிழக்கில் பெங்களூரு அமைந்துள்ளது.
இது மைசூர் பீடபூமியின் (இருதய பகுதியில் [[கேம்பிரியன் காலத்திற்கு முந்தைய.|கேம்பிரியனுக்கு முந்தைய]] பரந்த தக்காண பீடபூமியின் ஒரு பகுதி) 920 மீ (3,018 அடி) சராசரி உயரத்தில் அமைந்துள்ளது.
இது {{coord|12.97|N|77.56|E|}} 741 கிமீ² (286 [[மைல்]]²).<ref name="area"></ref> பரப்பளவில் அமைந்துள்ளது. பெங்களூரு நகரத்தின் பெரும் பகுதி கர்நாடகாவின் [[பெங்களூரு நகர்ப்பகுதி|பெங்களூரு நகர]] மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுற்றியிருக்கும் கிராமப் பகுதிகள் [[பெங்களூரு கிராமப்பகுதி|பெங்களூரு கிராம]] மாவட்டத்தின் ஒரு பகுதியாகும்.
பழைய பெங்களூரு கிராம மாவட்டத்தில் இருந்து ராமநகரா என்னும் புதிய மாவட்டத்தை கர்நாடகா அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கிறது.
 
அதிக உயரமான இடத்தில் அமைந்திருக்கும் காரணத்தால், பெங்களூரு ஆண்டுமுழுவதும் பெரும்பாலும் ரம்மியமான காலநிலையையே கொண்டிருக்கிறது, ஆயினும் அவ்வப்போதான வெப்ப அலைகள் கோடையில் அசவுகரியத்தை உண்டுபண்ணத்தக்கனவாக இருக்கின்றன.<ref name="hightemp">{{cite web|url=http://www.hindu.com/2005/05/18/stories/2005051818670300.htm|publisher=The Hindu|title=
Rise in temperature `unusual' for Bangalore|accessdate=2007-07-02}}</ref> ஜனவரி மாதம் மிகவும் குளிர்ந்த மாதமாக இருக்கிறது.சராசரி குறைந்த வெப்பநிலை 15.1&nbsp;°C ஆக இருக்கும். ஏப்ரல் மாதம் மிகவும் வெப்பமான மாதமாக இருக்கிறது. சராசரி உயர்ந்த வெப்பநிலையாக 33.6&nbsp;°C இருக்கும். <ref name="metrain">{{cite web|url=http://www.imd.ernet.in/section/climate/bangalore1.htm|title=Bangalore|publisher=Government of India|accessdate=2007-02-07}}</ref> பெங்களூரில் மிக அதிகமாகப் பதிவான வெப்பநிலை 38.9°[[செல்சியஸ்|C]] ஆகும். மிகவும் குறைந்தபட்சமாக 7.8&nbsp;°C (1884 ஜனவரி) பதிவாகியிருக்கிறது.<ref name="hightem">{{cite web|url=http://www.hindu.com/2006/05/10/stories/2006051022920300.htm|work=Online Edition of The Hindu, dated 2006-05-10|title=Set up rain gauges in areas prone to flooding|author=Vidyashree Amaresh|accessdate=2007-12-22}}</ref><ref name="lowtem">{{cite web|url=http://www.deccanherald.com/Archives/Dec172006/city115220061217.asp|work=Online Edition of The Deccan Herald, dated 2006-12-17|title=B’lore weather back again|author=Ashwini Y.S.|accessdate=2007-12-22}}</ref> குளிர்கால வெப்பநிலைகள் அபூர்வமாகத் தான் 12&nbsp;°C க்கு கீழ் சரியும். கோடை வெப்பநிலைகள் அபூர்வமாகத் தான் 36-37&nbsp;°C (100&nbsp;°F) க்கு அதிகமாக இருக்கும்.
வடகிழக்கு மற்றும் தென்மேற்கு [[பருவக்காற்று]] இரண்டில் இருந்தும் பெங்களூரு மழைப்பொழிவைப் பெறுகிறது. செப்டம்பர், அக்டோபர் மற்றும் ஆகஸ்டு ஆகியவை முறையே மிகவும் மழைப்பொழிவு மிகுந்த காலங்களாகும்.<ref name="metrain"></ref> ஓரளவு அடிக்கடி நிகழும் [[இடிமழை|இடிமின்னலுடனான புயல்]] மழையால் கோடை வெப்பம் சரிக்கட்டப்படுகிறது. இது மின்துண்டிப்பு மற்றும் உள்ளூர் வெள்ளப்போக்கிற்கும் அவ்வப்போது காரணமாகிறது.
24 மணி நேர காலத்தில் {{convert|179|mm|in}} பதிவான மிக அதிக மழைப்பொழிவு அக்டோபர் 1, 1997 அன்று பதிவானது.<ref name="rainmax">{{cite web|url=http://www.flonnet.com/fl2223/stories/20051118005402400.htm|work=The Frontline|date=2005-11-05|title=Bangalore's woes|author=Ravi Sharma|accessdate=2008-02-05}}</ref>
 
 
நகரின் திட்டமிடப்படாத வளர்ச்சியானது பெரும் போக்குவரத்து நெருக்கடியில் விளைந்தது. [[மேம்பாலம்|மேற்பால]] அமைப்பு கட்டுவதன் மூலமும் ஒருவழிப்பாதைகள் மூலமும் இந்த பிரச்சினையைத் தீர்க்க மாநகராட்சி முனைந்தது.
சில மேற்பாலங்களும் ஒருவழிப் பாதைகளும் போக்குவரத்து நெருக்கடியான சூழலை ஓரளவுக்குக் குறைக்க உதவினாலும் நகர போக்குவரத்தின் அபரிமிதமான வளர்ச்சிக்கு அவற்றால் ஈடு கொடுக்க முடியவில்லை.<ref name="bees"></ref> 2005 ஆம் ஆண்டில் [[இந்திய அரசு|மத்திய அரசு]] மற்றும் மாநில அரசு இரண்டும் தங்களது வருடாந்திர நிதி ஒதுக்கீட்டில் பெங்களூரின் உள்கட்டுமான மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க தொகையை ஒதுக்கின.<ref name="budget">"[http://autofeed.msn.co.in/pandorav3/output/News/7e1bf015-99c9-49ff-8670-f6d3c44a689c.aspx நிதி ஒதுக்கீடு பெருநகர வளர்ச்சியைத் தூண்டும்: பிரதமர்]". MSN India. 2006Microsoft India. 12 பிப்ரவரி 2006.</ref> நகர வளர்ச்சித் திட்டங்களை வடிவமைப்பதிலும் செயல்படுத்துவதிலும் [[பெங்களூரு வளர்ச்சி வாரியம்|பெங்களூரு வளர்ச்சி கழகம்]] (BDA) மற்றும் [[பெங்களூரு திட்டப் பணி படை|பெங்களூரு திட்ட பணிப் படை]] (BATF) ஆகியவற்றுடன் இணைந்து பெங்களூரு மகாநகர பாலிகே செயல்படுகிறது.
ஒரு நாளைக்கு 3,000 டன்கள் [[கழிவு|திடக்கழிவினை]] பெங்களூரு உருவாக்குகிறது. இதில் 1,139 டன்கள் சேகரிக்கப்பட்டு கர்நாடகா கழிவுர மேம்பாட்டு வாரியம் போன்ற [[கழிவுரம்|கழிவுர]] பிரிவுகளுக்கு அனுப்பப்படுகின்றன.
எஞ்சிய திடக் கழிவுகள் [[முனிசிபாலிட்டி|நகராட்சி]]யால் திறந்த வெளிகளிலோ அல்லது நகருக்கு வெளியே சாலையோரங்களிலோ கொட்டப்படுகின்றன.<ref name="solidwaste">van Beukering, Sehker, et al.[http://web.archive.org/web/20060304102415/http://www.iied.org/pubs/pdf/full/8113IIED.pdf "Analysing Urban Solid Waste..."]. சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டிற்கான சர்வதேச நிறுவனம்2006மார்ச் 1999.</ref>
 
போக்குவரத்து காவல்துறை, நகர ஆயுதப்படை காவல்துறை, மத்திய குற்றவியல் பிரிவு மற்றும் நகர குற்றவியல் ஆவணப் பிரிவு உள்ளிட்ட ஆறு புவியியல் மண்டலங்களை பெங்களூரு நகர காவல்துறை (BCP) கொண்டுள்ளது. அத்துடன் இரண்டு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்பட 86 காவல் நிலையங்களையும் இயக்குகிறது.<ref name="bcp">http://www.bcp.gov.in/english/index.htm </ref> கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் என்கிற வகையில் கர்நாடகா உயர்நீதி மன்றம், கர்நாடகா சட்டமன்றம் மற்றும் கர்நாடக ஆளுநர் இல்லம் ஆகிய முக்கிய மாநில அரசாங்க அமைப்புகளின் இருப்பிடங்கள் பெங்களூரில் அமைந்துள்ளன. இந்திய [[நாடாளுமன்றம்|நாடாளுமன்ற]]த்தின் [[கீழ் சபை|கீழ் அவை]]யான [[மக்கள் அவை|மக்கள் அவை]]க்கு மூன்று உறுப்பினர்களையும், கர்நாடகா சட்ட மன்றத்திற்கு 28 உறுப்பினர்களையும் பெங்களூரு பங்களிப்பு செய்கிறது.<ref>{{cite web|url=http://www.delimitation-india.com/Final_Publications/Karnataka/Final%20Notification%20&%20Order%20with%20Table%20A%20&%20B%20_Eng_.pdf |title=Final Notification and Order|publisher=Delimitation Commission of India|date=2007-07-02 | accessdate=2007-10-17|format=PDF}}</ref>
 
 
பல [[பொதுத் துறை நடத்துவது|பொதுத் துறை நிறுவனங்களின்]] தலைமையகங்கள் பெங்களூரில் அமைந்துள்ளன.
1972 ஜூன் மாதத்தில், விண்வெளித் துறையின் கீழ் [[இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்|இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்]] (ISRO) உருவாக்கப்பட்டு அதன் தலைமையகம் இந்நகரில் அமைந்தது.
 
இன்போசிஸ் மற்றும் விப்ரோ ஆகிய இந்தியாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய மென்பொருள் நிறுவனங்கள் தங்களது தலைமையகங்களை பெங்களூரில் கொண்டுள்ளன. நகரில் அமைந்துள்ள ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் காரணமாக பெங்களூரு ''இந்தியாவின் சிலிகான் பள்ளத்தாக்கு'' என்று அழைக்கப்படுகிறது. இவை இந்தியாவின்{{INRConvert|144214|c|0|nolink=yes}}2006-07 தகவல்தொழில்நுட்ப சேவை ஏற்றுமதியில் 33% பங்களிப்பு செய்தன.<ref name="Nasscom">{{cite web|url=http://www.business-standard.com/common/storypage_c.php?leftnm=10&autono=299725 |title=
 
 
''ஆட்டோக்கள்'' என்றழைக்கப்படும் மூன்று சக்கர, கருப்பு மற்றும் மஞ்சள் நிற தானியங்கி மூவுருளி உந்து போக்குவரத்துக்கு பிரபலமானதாகும்.<ref name="auto">{{cite web|url=http://www.hindu.com/2006/12/15/stories/2006121520050300.htm|work=Online Edition of The Hindu, dated 2006-12-15|title=Stir leaves hundreds stranded|accessdate=2007-10-17}}</ref>]] மீட்டர் பொருத்தப்பட்டுள்ள இவை மூன்று பயணிகள் வரை சுமந்து செல்லும். சற்று கூடுதல் கட்டணத்தில் வாடகை மகிழுந்து சேவைகளும் உண்டு.<ref name="auto"></ref>
 
 
பெங்களூரு பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (BMTC) மூலம் இயக்கப்படும் பேருந்துகளும் நகரில் பொதுப் போக்குவரத்துக்கான ஒரு வழியாக இருக்கின்றது.<ref name="bus">{{cite web|url=http://www.deccanherald.com/Content/Jun202007/city200706208444.asp|title=Loyalty may pay for Volvo commuters!|author=S Praveen Dhaneshkar|work=Online Edition of The Deccan Herald, dated 2007-06-20|accessdate=2007-04-10}}</ref> பயணிகள் இந்த பேருந்துகளில் பயணிக்கும் போது டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். அடிக்கடி பயணம் செய்யும் பயணிகளுக்கு பேருந்து முன் அனுமதிச் சீட்டு வசதியையும் போக்குவரத்துக் கழகம் வழங்குகிறது. முக்கிய தடங்களில் குளிரூட்டப்பட்ட, சிவப்பு வண்ண வால்வோ பேருந்துகளையும் இப்போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது.<ref name="bus"></ref> பெங்களூரை கர்நாடகாவின் பிற பகுதிகள் மற்றும் பிற மாநிலங்களுடன் இணைக்கும் வகையில் [[கர்நாடகா மாநில சாலைப் போக்குவரத்து கார்பரேஷன்|கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம்]] 6,600 பேருந்துகளை 5,700 கால அட்டவணை நேரங்களில் இயக்கி வருகிறது.<ref>{{cite web|url=http://www.ksrtc.in|work=Official webpage of the Karnataka State Road Transport Corporation|title=Highlights|accessdate=2009-04-07}}</ref>
 
 
 
நகரத்தின் பன்முகக் கலாச்சார இயல்பால் பிற மாநிலங்களில் இருந்து மக்கள் பெங்களூரு வந்து குடியேறுகின்றனர்.<ref name="kannadapop">[http://www.hindu.com/2004/07/23/stories/2004072310610400.htm "கன்னடர்களுக்கு அனைத்து ஆதரவுக்கும் உறுதி"]. தி ஹிந்து. 23 ஜூலை 2004.</ref> நகரின் மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 14.3% இருக்கிறார்கள்.
[[கன்னடா|கன்னடம்]] மற்றும் [[ஆங்கில மொழி|ஆங்கிலம்]] தவிர [[தமிழ் மொழி|தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] மற்றும் [[இந்தி|இந்தி]] ஆகியவை நகரில் பேசப்படும் பிற முக்கிய மொழிகளாக உள்ளன.<ref name="otherlanguages">[http://www.karnataka.com/tourism/bangalore/facts.html கர்நாடகா.காம் அளிக்கும் "பெங்களூரு உண்மைகள்"].</ref> 2001 இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, பெங்களூரு மக்கள்தொகையில் 79.37% பேர் [[இந்து]] மதத்தைச் சேர்ந்தவர்கள். இது ஏறக்குறைய [[இந்தியாவின் மக்கள்தொகையியல்|தேசிய சராசரி]]யை ஒட்டி இருக்கிறது.<ref name="GISData">[http://www.censusindiamaps.net/page/Religion_WhizMap1/housemap.htm "சென்சஸ் GIS வீட்டுநிலை"]. censusindiamaps.net. 2006</ref> [[முஸ்லீம்]]கள் மக்கள்தொகையில் 13.37% பேர் இருக்கிறார்கள். இதுவும் ஏறக்குறைய தேசிய சராசரி அளவை ஒட்டியே உள்ளது. [[கிறிஸ்தவர்|கிறிஸ்தவ]] மற்றும் சமண மதத்தவர்கள் மக்கள்தொகையில் முறையே 5.79% மற்றும் 1.05% இருக்கிறார்கள். இது இம்மதங்களின் தேசிய சராசரிகளை விட இருமடங்காகும்.
[[ஆங்கிலோ இந்தியர்கள்|ஆங்கிலோ இந்தியர்களும்]] நகரில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையிலுள்ள பிரிவினராக உள்ளனர். பெங்களூரு மக்கள்தொகையில் பெண்கள் 47.5% உள்ளனர். மும்பைக்கு பிறகு இந்திய பெருநகரங்களில் பெங்களூரு தான் இரண்டாவது பெரிய எழுத்தறிவு விகிதம் (83%) கொண்ட நகரமாய் உள்ளது. பெங்களூரு மக்கள்தொகையில் சுமார் 10% சேரிகளில்<ref name="indiancityslums">{{cite web |url=http://www.censusindia.gov.in/|title= "Total Population, Slum Population..." |archiveurl=http://web.archive.org/web/20070806121833/http://www.censusindia.net/results/slum/slum2.html |archivedate=2007-08-06}}. இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு, 2001.</ref> வாழ்கிறார்கள். மும்பையுடனும் மற்றும் [[நைரோபி]] போன்ற வளரும் நாடுகளின் பிற நகரங்களுடனும் ஒப்பிடுகையில் இது குறைந்த அளவேயாகும்.<ref name="slumpop2">வாரா, ரஸ்னா. [http://www.globalpolicy.org/socecon/develop/2003/1006slums.htm "சேரிகள் நகரங்களின் இதயத்துடிப்பு"]. 6 அக்டோபர் 2003</ref> இந்தியாவின் 35 பெரிய நகரங்களில் பதிவாகும் மொத்த குற்றங்களில் பெங்களூரு 9.2% பங்களிப்பை கொண்டிருப்பதாக 2004 [[NCRB|தேசிய குற்றப் பதிவுகள்]] கழகம் சுட்டிக் காட்டுகிறது. டெல்லி மற்றும் மும்பை முறையே 15.7% மற்றும் 9.5% பங்களிக்கின்றன.<ref name="NCRB">{{PDFlink|[http://ncrb.nic.in/crime2004/cii-2004/CHAP2.pdf "Crime in Mega Cities"]|159&nbsp;KB}}. தேசிய குற்ற ஆவணப் பிரிவு.</ref>
{{clear}}
 
 
சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில், இளம் குழந்தைகளுக்கான பள்ளிகள் மாற்றம் கண்டுள்ளன.<ref name="kinder">{{cite web|url=http://timesofindia.indiatimes.com/articleshow/122968.cms|work=Online Edition of The Times of India, dated 2003-08-09|title=Bangalore a hot destination for foreign students|accessdate=2007-10-16}}</ref> [[இடைநிலைக் கல்வி பள்ளி இறுதித் தேர்வு சான்றிதழ்|இடைநிலைக் கல்வி பள்ளி இறுதித் தேர்வு சான்றிதழ்]] (எஸ்எஸ்எல்சி), [[இடைநிலைக் கல்விக்கான இந்திய சான்றிதழ்]] மற்றும் [[இடைநிலைக் கல்விக்கான மைய வாரியம்]] போன்ற கல்வி வாரியங்கள் ஏதேனும் ஒன்றின் கீழ் ஆரம்ப கல்வி மற்றும் இடைநிலைக் கல்வியை வழங்கும் பல்வேறு பள்ளிகள் பெங்களூரில் உள்ளன.<ref name="boards">{{cite web|url=http://www.deccanherald.com/Archives/july012004/edu2.asp|work=Online Edition of The Deccan Herald, dated 2004-07-01|title=Broad choice of Class X boards|accessdate=2007-10-16}}</ref> பெங்களூரு பள்ளிகள் அரசுப் பள்ளிகளாகவோ அல்லது தனியார் பள்ளிகளாகவோ (அரசு உதவி பெறும் மற்றும் பெறாத பள்ளிகள்) உள்ளன.<ref name="aid">{{cite web|url=http://timesofindia.indiatimes.com/articleshow/682256.cms|title=Trimester system in all Karnataka schools from 1 June|work=Online Edition of The Times of India, dated 2004-05-18|accessdate=2007-10-16}}</ref> தங்களது இடைநிலைக் கல்வியை முடித்த பிறகு, மாணவர்கள் பொதுவாக பல்கலைக்கு முந்தைய பியுசி படிப்பை [[லிபரல் ஆர்ட்ஸ்|கலை]], [[காமர்ஸ்|வணிகம்]] அல்லது [[அறிவியல்]] ஆகிய மூன்று ''பிரிவுகளில்'' ஒன்றில் மேற்கொள்கிறார்கள்.<ref name="streams">{{cite web|url=http://www.hindu.com/2006/05/16/stories/2006051618850300.htm|title= Students, parents throng PU colleges in city|work=Online Edition of The Hindu, dated 2006-05-16|publisher=© 2006, The Hindu|accessdate=2007-10-16}}</ref> தேவையான படிப்பை முடித்தபிறகு, பல்கலைக்கழகங்களில் பொது அல்லது தொழில்நுட்ப படிப்புகளில் மாணவர்கள் பதிவு செய்து படிப்பைத் தொடரலாம்.
1964 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பெங்களூரு பல்கலைக்கழகம் சுமார் 500 கல்லூரிகளுக்கு இணைப்புத் தொடர்பு வழங்குகிறது. மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 300,000 க்கும் அதிகமாக இருக்கிறது.
பெங்களூருக்கு உள்ளேயே இந்த பல்கலைக்கழகம் ஞானபாரதி மற்றும் மத்திய கல்லூரி என இரண்டு வளாகங்களைக் கொண்டுள்ளது.<ref name="univ">{{cite web|url=http://timesofindia.indiatimes.com/articleshow/1114542.cms|title=BU overloaded, wants to split|work=Online Edition of The Times of India, dated 2007-01-09|accessdate=2007-10-16}}</ref>
 
 
1909 ஆம் ஆண்டில் பெங்களூரில் நிறுவப்பட்ட [[இன்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்|இந்திய அறிவியல் நிறுவனம்]] தான் இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் படிப்புக்கான முதன்மை நிறுவனமாகும்.<ref name="blredu">{{cite web|url=http://www.hinduonnet.com/fline/fl2317/stories/20060908002809900.htm|work=Online Edition of the Hindu, dated 2006-09-08|title=Hub of research|author=Parvathi Menon and Ravi Sharma|accessdate=2007-10-16}}</ref> [[இந்தியா பல்கலைக்கழகத்தின் தேசிய சட்ட பள்ளி|இந்திய பல்கலைக்கழக தேசிய சட்டப் பள்ளி]] (NLSIU), [[இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட், பெங்களூரு|இந்திய மேலாண்மை நிறுவனம், பெங்களூரு]] (ஐஐஎம்-பி) மற்றும் [[இந்திய புள்ளியியல் நிறுவனம்|இந்திய புள்ளியியல் ஆய்வு நிறுவனம்]] ஆகிய தேசியப் புகழ்பெற்ற நிறுவனங்களும் பெங்களூரில் அமைந்துள்ளன. இந்தியாவின் முதன்மையான மனநல சுகாதார நிறுவனமும் பெங்களூரில் தான் அமைந்துள்ளது.<ref name="blredu"></ref> முதன்மையான மனநல சுகாதார நிறுவனமான [[NIMHANS|மனநல சுகாதாரம் மற்றும் நரம்பியல் அறிவியலுக்கான தேசிய நிறுவனம்]] (NIMHANS) பெங்களூரில் அமைந்துள்ளது.
 
== ஊடகங்கள் ==
 
 
முதல் அச்சகம் பெங்களூரில் 1840 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது.<ref name="ppr">{{cite web|url=http://books.google.com/books?id=SB3_VodABdIC&pg=PA54&lpg=PA54&dq=1840+printing+press+bangalore&source=web&ots=uNZGhgyiaC&sig=FcVm_5QykIKNsXVvt7YoeYTc1CA|title=Assimilation: A Study of North Indians in Bangalore|author=Vijaya B. Punekar|accessdate=2007-10-04}}</ref> 1859 ஆம் ஆண்டில் ''பெங்களூரு ஹெரால்டு'' பத்திரிகை பெங்களூரில்<ref name="newshist">{{cite web|url=http://www.google.co.in/books?id=XQgiAAAAMAAJ&dq=Bangalore+Herald+1859&q=1859&pgis=1#search|author= M. Fazlul Hasan|publisher=Historical Publications|title=Bangalore Through the Centuries|accessdate=2007-10-07}}</ref> வெளியிடப்படும் முதல் வாரமிருமுறை ஆங்கில இதழாக வெளியானது. 1860 ஆம் ஆண்டில் ''மைசூர் விருட்டினா போதினி'' பெங்களூரில் விற்பனையாகும் முதல் கன்னட செய்தித்தாளானது.<ref name="ppr"></ref> தற்போது ''விஜய கர்நாடகா'' மற்றும் ''[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]'' ஆகியவை தான் முறையே கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் பெங்களூரில் மிக அதிக அளவில் விற்பனையாகும் பத்திரிகைகளாக இருக்கின்றன. இவற்றுக்கு நெருக்கமாக ''பிரஜாவாணி'' மற்றும் ''டெக்கான் ஹெரால்டு'' ஆகியவை வருகின்றன. <ref name="vke">{{cite web|url=http://economictimes.indiatimes.com/articleshow/2190334.cms|work=Online Edition of The Economic Times, dated 2006-10-18|title=Double dhamaka|author=Preiti Sharma|accessdate=2007-10-07}}</ref><ref name="toidh">{{cite web|url=http://www.telegraphindia.com/1061119/asp/look/story_7016875.asp|work=Online Edition of The Telegraph, dated 2006-11-19|author=Shuma Raha|title=Battleground Bangalore|accessdate=2007-10-07}}</ref>
 
 
 
 
நவம்பர் 1, 1981 அன்று [[தூர்தர்ஷன்]] தனது ஒளிபரப்பு மையத்தை இங்கு நிறுவி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் துவங்கியது. <ref name="dd">{{cite web|url=http://www.pibbng.kar.nic.in/media.htm|work=Online webpage of the Press Information Bureau|title=Doordarshan, Bangalore|accessdate=2007-10-07}}</ref> தூர்தர்ஷனின் பெங்களூரு அலுவலகத்தில் 1983 ஆம் ஆண்டில் ஒரு தயாரிப்பு மையம் நிறுவப்பட்டது. இதனையடுத்து 19 நவம்பர் 1983 முதல் கன்னடத்தில் ஒரு செய்தி நிகழ்ச்சியை அறிமுகப்படுத்த முடிந்தது.<ref name="dd"></ref> 15, ஆகஸ்டு 1991 அன்று தூர்தர்ஷன் கன்னட செயற்கைக்கோள் சேனல் ஒன்றையும் துவக்கியது. அது இப்போது டிடி சந்தனா என்று பெயரிடப்பட்டுள்ளது.<ref name="dd"></ref> 1991 செப்டம்பர் மாதத்தில் ஸ்டார் டிவியின் சேனல்கள் ஒளிபரப்பைத் துவக்கியபோது தனியார் செய்தித் தொலைக்காட்சிகள் பெங்களூரில் கால்பதித்தன.<ref name="startv">{{cite web|url=http://thehindujobs.com/thehindu/2001/07/29/stories/13290695.htm|work=Online Edition of The Hindu, dated 2001-07-29|title=Tune in to quality|author=Sevanti Ninan|accessdate=2007-10-08}}</ref> பெங்களூரில் பார்க்க முடிகிற செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை சென்ற வருடங்களில் மிகுந்த வளர்ச்சி கண்டிருந்தாலும்<ref name="chan">{{cite web|url=http://mib.nic.in/informationb/CODES/Consolidatedchannels310707.htm|work=Online webpage of the Ministry of Information and Broadcasting, Government of India|title=Consolidated list of channels allowed to be carried by Cable operators/Multi system operators/DTH licensees in India|accessdate=2007-10-04}}</ref>, இந்த வளர்ச்சி தொலைக்காட்சி அலைவரிசை விநியோகஸ்தர்கள் இடையே அவ்வப்போது மோதல்களுக்கும் இட்டுச் செல்கிறது.<ref name="cabo">{{cite web|url=http://timesofindia.indiatimes.com/articleshow/781475.cms|work=Online Edition of The Times of India, dated 2004-07-17|title=Rage against cable operators|accessdate=2007-10-08}}</ref>
 
பெங்களூரில் துவங்கிய முதல் [[இணைய சேவை வழங்குனர்|இணைய சேவை வழங்குநர்]] பெங்களூரு STPI ஆகும். இந்நிறுவனம் 1990களின் ஆரம்பத்திலேயே இணைய சேவைகளை வழங்கத் துவங்கியிருந்தது.<ref name="stpint">{{cite web|url=http://www.iimahd.ernet.in/publications/data/2006-05-02rbasant.pdf|title=Bangalore Cluster: Evolution, Growth and Challengers|author=Rakesh Basant|accessdate=2007-10-08|format=PDF}}</ref> ஆயினும் இந்த இணைய சேவை பெருநிறுவனங்களுக்கு மட்டுமே அதிகம் பயன்பட்டதாய் இருந்தது.
 
{{இந்தியத் தலைநகரங்கள்}}
 
[[பகுப்பு:கர்நாடகம் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:இந்தியத் தலைநகரங்கள்]]
[[he:בנגלור]]
[[hi:बंगलोर]]
[[hif:Bangalore]]
[[hr:Bangalore]]
[[hu:Bengaluru]]
44,099

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/646558" இருந்து மீள்விக்கப்பட்டது