ஆ. ராசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
undue
வரிசை 32:
==2 ஆம் தலைமுறை அலைவரிசை ("2ஜி' ஸ்பெக்ட்ரம்) முறைகேடு==
 
2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளிவந்த மத்திய தணிக்கை அதிகாரி அறிக்கையில் "2 ஆம் தலைமுறை அலைவரிசை" ஓதுக்கீடு செய்ததில் பிரதமர், சட்ட அமைச்சகம், நிதி அமைச்சகம் ஆகியவற்றின் அறிவுரைகள் மீறப்பட்டுள்ளன என்றும் பகிரங்கமாக ஏலம் விடாததால் மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இத்தகைய மிகபெரும் முறைகேடு வெளியான பின்னும் இவருக்கு தி.மு.க வின் தலைவரும் தமிழக முதல்வருமான [[கருணாநிதி|கருணாநிதியின்]] அதரவு பெருமளவு உள்ளது, இதனால் அமைச்சர் பதவியில் இருந்து விலக மறுத்தார். இந்த அறிக்கையை ஆ. ராசா மறுத்தாலும், எதிர் கட்சிகளின் தீவிர முயற்சியால் இவர் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலக நேரிட்டது<ref>http://www.dailythanthi.com/article.asp?NewsID=607663&disdate=11/17/2010 </ref>.
 
==நீரா ராடியா==
 
வைஷ்ணவி கார்பரேட் கம்யூனிகேஷன்ஸ் என்ற பத்திரிகைத் தொடர்பு மற்றும் ஆலோசனை நிறுவனத்தை நடத்துபவர் நீரா ராடியா. டெல்லியில் பல்வேறு பெரிய நிறுவனங்களுக்கு ஆலோசகராகச் செயல்படுகிறார். அதற்காக அவர்களிடம் ஆலோசனைக் கட்டணம் பெறுகிறார்.
 
அவருடைய வாடிக்கையாளரான டாடா குழுமத்தின் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்துக்கு அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பலன் கிட்டுவதற்காக தொலைத் தகவல் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ. ராசாவுடன் பேசியிருப்பதையும், தான் கூறிய ஆலோசனைகளுக்காக ரூ.60 கோடியைக் கட்டணமாகப் பெற்றுக்கொண்டதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.நீரா ராடியாவுக்கு மத்தியில் உள்ள மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோருடன் நல்ல பரிச்சயம் இருக்கிறது. பிரபல நிறுவனங்களுக்குத் தொழில் வளர்ச்சிக்காக அவர் ஆலோசகராகச் செயல்படுகிறார். அத்துடன் அவர்களுடைய செயல்பாடுகளுக்கு ஏதேனும் இடையூறு இருந்தால் அவற்றைக் களையவும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களையோ அதிகாரிகளையோ சந்தித்து ஆவன செய்கிறார். இந்தச் சேவைக்காக அவருக்கு கோடிக்கணக்கில் கட்டணம் தரப்படுகிறது. நீரா ராடியா பிரிட்டிஷ் நாட்டு பாஸ்போர்டும் வைத்துள்ளார்.
 
அவருடைய உயர் வட்டார பழக்கங்களையும் வருவாய் பெறக்கூடிய வாய்ப்புகளையும் உற்றுக் கவனித்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், அவரைப் பற்றி மேலும் தகவல்களைத் திரட்ட 2009 நவம்பரில் அவருடைய தொலைபேசி உரையாடலை அவருக்குத் தெரியாமலே பதிவு செய்ய ஆரம்பித்தனர். அவருக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் ஆகியோருக்குள்ள நெருக்கம் அந்த உரையாடல் பதிவு மூலம் உறுதிப்பட்டிருக்கிறது.<ref>http://www.envazhi.com/?p=21902</ref>
 
== ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு.. ஒரு மீள் பார்வை...==
செல்போன் சேவை அளிக்க வகை செய்யும் 2ஜி அலைக்கற்றை உரிமங்கள் பல்வேறு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டன. மொத்தம் 130 நிறுவனங்களுக்கு முதலில் வருபவர்களுக்கு முதலில் ஒதுக்கீடு எனும் அடிப்படையில் உரிமங்கள் தரப்பட்டன.இதில் பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என புகார் எழுந்தது. போலியான நிறுவனங்கள், அடிப்படை விதிகளைக் கூட பூர்த்தி செய்யாத நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.
 
இதுபற்றி மத்திய கணக்கு தணிக்கை தலைமை அதிகாரி விசாரணை நடத்தி மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான உரிமம் பெற்ற நிறுவனங்களில் சில, அந்த உரிமத்தை கூடுதல் தொகைக்கு வேறு நிறுவனங்களுக்கு விற்று லாபம் சம்பாதித்தாகவும் தெரிய வந்து உள்ளது.தகுதியற்ற பல நிறுவனங்கள் லைசென்சு பெற்றதாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டது. இதனால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.<ref>http://www.viraivu.com/2010/11/29/6110/</ref>
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆ._ராசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது