குத்துவிளக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
== குத்துவிளக்கின் தத்துவம் ==
குத்து விளக்கு தெய்வீகமானது.தெய்வ அம்சம் பொருந்தியது என்பர். இந்துக்களும் தமிழர்களும் மங்களத்தைக் குறிக்கும் தத்துவமாக இதனைக் கொள்வர்.இதன் அடிப்பாகம் பிரம்ம அம்சம் என்றும், நீண்ட நடுப்பகுதி மகாவிஷ்ணு அம்சம், மேற்பகுதி சிவ அம்சம் எனவும் கூறப்படுகிறது. விளக்கில் ஊற்றும் நெய் – நாதம், திரி – பிந்து, சுடர் – அலை மகள், சுடர் – கலை மகள், தீ - மலை மகள். இப்படி அனைத்தும் சேர்ந்ததே குத்து விளக்கு என்பர்.இந்த விளக்கை நன்கு மஞ்சள் தடவி, குங்குமமிட்டு, பூச்சுற்றி அலங்காரம் செய்ய வேண்டும் என்பது வழக்காகும்.
 
விளக்கின் சுடர் ஒளி சிவத்தின் வடிவமாகும் என்றும் கூறுவர். அச்சிவம் ஞாயிறிலும் திங்களிலும் செந்தீயிலும் கலந்து நின்று உலகம் இயங்கப்பொருட்டு விளக்கந் தருகிறது. சிவபெருமானை இவ்மூன்றிலும் கண்ட நம் சான்றோர் இவ்வழிபாட்டை பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னே விதித்தனர்.
 
==தயாரிக்கப் பயன்படும் பொருட்கள்==
[[பித்தளை|பித்தளையே]] குத்து விளக்குத் தயாரிப்பில் பயன்படும் மரபுவழியான உலோகமாகும். இவ்வுலோகம் வேண்டிய வடிவங்களில் தயாரிக்கப்பட்ட அச்சுக்களில் உருக்கி வார்க்கப்பட்டுப் பின்னர் அதனை வெளியில் எடுத்துக் கண்ணுக்குத் தெரியக் கூடிய பகுதிகள் மினுக்கம் செய்யப் படுகின்றன. சுலபமாக உருக்கி வார்க்கக் கூடிய தன்மையும், [[தங்கம்|தங்கத்தை]] ஒத்த அதன் [[நிறம்|நிறமும்]] இவ்வுலோகம் விரும்பப் படுவதற்கான காரணங்களாகும். இக் காலத்தில் [[துருவேறா உருக்கு|துருவேறா உருக்கையும்]] குத்து விளக்குகள் செய்வதற்குப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் பெரும்பாலும் சிறிய விளக்குகளே இவ்வாறு செய்யப்படுகின்றன. இவ்வுலோகத்தைப் பயன்படுத்தும் போது, உருக்குத் தகடுகளையே பயன்படுத்துவது வழக்கம். இத்தகைய விளக்குகள் [[விலை]] குறைவானவையாக இருந்தாலும் தோற்றத்தில் பித்தளை விளக்குகளுக்கு இணையாகா.
"https://ta.wikipedia.org/wiki/குத்துவிளக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது