கலாத்தியருக்கு எழுதிய திருமுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கலாத்தியர் (நூல்)
சி சேர்க்கை
வரிசை 45:
 
*கலா 2:11-14 -- அந்தியோக்கியாவில் பவுல் பேதுருவைக் கடிந்துகொண்ட செய்தி குறிக்கப்படுகிறது. யாக்கோபின் ஆள்கள் யூத பழக்கங்களை ஆதரித்தவர்கள். அவர்கள் வருமுன் பேதுரு பிற இனத்தாரோடு உணவருந்தியதுண்டு. ஆனால் யூத ஆதரவாளர்களைக் கண்டு அஞ்சிய பேதுரு பிற இனத்தாரோடு உணவருந்தியதை நிறுத்திவிட்டார். இது ஒரு வெளிவேடம் என்று பவுல் பேதுருவைக் கடிந்துகொண்டார்: "நான் பேதுருவை நேருக்கு நேராய் எதிர்த்தேன்" என்று பவுல் கூறுகிறார் (கலா 2:11).
 
*'''அதிகாரம் 3''':
 
*கலா 3:1-5 -- இயேசுவிடத்தில் நாம் கொள்கின்ற நம்பிக்கையே நம்மைக் கடவுளுக்கு ஏற்புடையோர் ஆக்கும். இவ்வாறு நம்புவோருக்குக்க் கடவுளின் தூய ஆவி கொடையாக வழங்கப்படுகிறது.
 
*கலா 3:6-20 --- யூதருக்கு வழங்கப்பட்ட சட்டத்தின் வெளி ஆசாரம் என்பது நமக்குக் கடவுளின் ஆசியைப் பெற்றுத் தராது.
 
*கலா 3:15-20 -- கடவுள் ஆபிரகாம் வழியாக மனுக்குலம் முழுவதற்கும் தம் வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
 
*கலா 3:27-28 -- "கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்துகொண்டீர்கள். இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகளளென்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்"
 
'''அதிகாரம் 4''':
 
*கலா 4:4-7 -- "பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் தந்தையால் அனுப்பப்பட்ட" இயேசு நம்மைக் கடவுளின் பிள்ளைகளாக்கியுள்ளார். நம் உள்ளங்களில் கடவுளின் ஆவி பொழியப்பட்டுள்ளதால் நாம் கடவுளை ''அப்பா, தந்தையே'' என்று உரிமையோடு அழைக்கலாம்.
 
'''அதிகாரம் 5''':
 
*கலா 5:1-15 -- கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து நமக்கு உரிமை வாழ்வு அளித்துள்ளார். உரிமை வாழ்வைப் பெற்றுள்ள நாம் அன்புக் கட்டளையைக் கடைப்பிடிப்பதன் வழியாகப் பேரின்பத்துக்கு அழைக்கப்படுகிறோம்.
 
*கலா 5:16-20 -- ஊனியல்பு நம்மைப் பாவத்திற்கு இழுத்தாலும், நாம் கடவுளின் ஆவியால் வழிநடத்தப்படுகிறோம். தூய ஆவியின் கனிகள் கீழ்வருவன:
- அன்பு
- மகிழ்ச்சி
- அமைதி
- பொறுமை
- பரிவு
- நன்னயம்
- நம்பிக்கை
- கனிவு
- தன்னடக்கம்.
 
*கலா 5:9 -- "நன்மை செய்வதில் மனம்தளராதிருப்போமாக!"
 
'''அதிகாரம் 6''':
 
*கலா 6:15 -- "விருத்தசேதனம் செய்துகொள்வதும் செய்து கொள்ளாமல் இருப்பதும் ஒன்றே. புதிய படைப்பாவதே இன்றியமையாதது."
 
==கலாத்தியர் திருமுகத்திலிருந்து ஒரு பகுதி==
"https://ta.wikipedia.org/wiki/கலாத்தியருக்கு_எழுதிய_திருமுகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது