சுதேசி இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: சுதேசி இயக்கம் என்பது அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு இயக்...)
 
No edit summary
சுதேசி இயக்கம் என்பது அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு இயக்கம் ஆகும். இந்திய சுதந்திர போராட்டம் நடந்து கொண்டிருந்த போது இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றான இந்திய தேசிய காங்கிரஸ் ஆங்கில ஆட்சியின்பால் கொண்ட அதிருப்தியின் காரணமாக, இவ்வியக்கத்தைச் சேர்ந்த பலர் வெறும் விண்ணப்பங்களையும் வேண்டுகோள்களையும் அரசுக்குச் சமர்ப்பிப்பதால் பெரிய மாறுதல் எவையும் ஏற்படப் போவதில்லையென்றும், இதர பல நேரடி நடவடிக்கைளில் ஈடுபட்டுப் போராடுதல் அவசியம் என்றும் கருதிக்கொண்டிருந்தார்கள்.அவ்வெண்ண எழுச்சியின் பிரதிபலிப்பாக 1906-ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் சுயராஜ்யம், சுதேசி, தேசியக்கல்வி, அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுவே சுதேசி இயக்கம் தோன்றுவதற்கு காரணமான முதல் வித்து ஆகும்.
வ.வு சிதம்பரனார் அவர்களின் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்ட சுதேசி கப்பல் நிறுவனம் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது. சுதேசி கப்பல் நிறுவனம் சுதேசி இயக்கத்தின் ஒரு படிக்கல் ஆகும். அந்நிறுவனம் தொடங்கும் பொருட்டு தமிழ் நாட்டிலுள்ள ஏராளம் பெண்கள் தங்கள் நகைகளை அடகு வைத்தும் சொந்த பணத்தைக் கொடுத்தும் பங்குகள் வாங்கி உதவியுள்ளனர்.6 சுதேசி கப்பல் நிறுவனம் ‘’காலியா’’ ‘’லாவோ’’ என்னும் பெயருடைய இரு கப்பல்களை வாங்கியது. இம்முயற்சியில் வெற்றி பெற்ற வீரர் சிதம்பரனாரை இந்தியாவிலுள்ள தேசிய பத்திரிக்கைகளெல்லாம் பாராட்டின. பாரதியாரின் ‘’இந்தியா’’ பத்திரிக்கையிலே ‘’வந்தேமாதரம்’’ எனும் மந்திரச் சொல் பொறித்த கொடியுடன் ‘காலியா’ ‘லாவோ’ கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்தை அணுகுவது போலவும், ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கூடி ‘வீர சிதம்பரம் வாழ்க’ எனக் கோஷித்து கப்பல்களை வரவேற்பது போலவும் கார்ட்டூன் பிரசுரிக்கப்பட்டது. இச்செய்தி பெண்களும் இவ்வியக்கத்தில் ஈடுபட்டுள்ளதைச் சுட்டிக் காட்டுவதாக உள்ளது.
28

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/648412" இருந்து மீள்விக்கப்பட்டது