சுதேசி இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,450 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
என்று அடுக்கடுக்காக அவர் நடத்திய போராட்டங்களில் முக்கியமான ஒன்று சுதேசி இயக்கம்.
 
பொதுமக்கள் அந்நிய நாட்டுப் பொருள்களை வாங்கக் கூடாது, அந்நியத் துணிகளைப் பகிஷ்கரிக்க வேண்டும். உள்நாட்டின் உற்பத்திப் பொருள்களையே வாங்கி உபயோகிக்க வேண்டும் என்பது அண்ணல் காந்தியடிகளால் உருவாக்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் உன்னத நோக்கம். அன்று இந்தியா முழுவதும் சுதேசி இயக்கம் பரவியது. நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் பொதுமக்களும் காங்கிரஸ்காரர்களும், தங்கள் வீட்டில் இருந்த அந்நிய நாட்டுத் துணிகளை வீதியிலே கொண்டு வந்து போட்டுக் கொளுத்தினார்கள். அப்போது தமிழகத்திலும் அந்தப் போராட்டம் வெகுஜன இயக்கமாக வீறுகொண்டு எழுந்தது. ஆனால், சுதேசி இயக்கம் தமிழ்நாட்டில் பெருத்த ஆதரவை பெறவில்லை என பிரிட்டிஷ் அரசின் அறிக்கைகள் கூறின. இந்த அறிக்கைகளுக்கு மாறாக சுதேசி இயக்கத்திற்கு மக்கள் ஆதரவு இருந்ததாக அதே பிரிட்டிஷ் அரசின் ரகசிய அறிக்கைகள் கூறின. குடிசைத் தொழில்களையும், கதர் துணியையும் ஊக்குவிக்கும் இயக்கமாக மட்டுமே சுதேசி இயக்கம் பலரால் பார்க்கப்படுகிறது. ஆனால், தூத்துக்குடியில் ஒரு நவீன தொழில் முயற்சியையும் (சுதேசி கப்பல் கம்பெனி), சுதேசி பண்டகசாலையையும் இந்த இயக்கம் ஏற்படுத்தியது. அதைப்போல திருநெல்வேலி, தூத்துக்குடியில் மக்கள் இயக்கங்களை உருவாக்கியது.
 
இந்தியா முழுவதும் சுதேசி இயக்கம் என்றால் அந்நிய நாட்டுப் பொருள்களை பகிஷ்கரிப்பது - அதன் அடையாளமாக அந்நியத் துணிகளுக்கு எரியூட்டுவது என்ற அளவிலேயே அந்தப் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது, வெள்ளையர் அரசின் ராஜத் துரோகக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, வெள்ளையர் நீதிமன்றத்தால் இரண்டு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பெற்ற வ.உ. சிதம்பரம் பிள்ளை மட்டும் சுதேசி இயக்கம் என்றால், அது விதேசிப் பொருள்களைப் புறக்கணிப்பது மட்டுமல்ல, சுதேசி என்ற அடிப்படையில் அந்நியர்களுக்குப் போட்டியாக உற்பத்திக் கேந்திரங்களை உருவாக்குதல், அந்நியர்களுக்குப் போட்டியாக வர்த்தக நிறுவனங்களை நடத்துதல் என்று நாட்டு மக்களுக்கு அந்த இயக்கத்தின் இன்னொரு பக்கத்தை, அணுகுமுறையை அடையாளம் காட்ட முயற்சித்தார். தனது சொத்தையே பணயம் வைத்து வெள்ளைக்காரர்களின் கப்பல் கம்பெனிகளுக்குப் போட்டியாக, சுதேசிக் கப்பல் கம்பெனி ஒன்றினை உருவாக்கினார்.
28

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/648424" இருந்து மீள்விக்கப்பட்டது