நொதிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: நொதிப்பு அல்லது நொதித்தல் (Fermentation) என்பது காபோவைதரேட்டுக்கள...
 
No edit summary
வரிசை 1:
நொதிப்பு அல்லது நொதித்தல் (Fermentation) என்பது [[காபோவைதரேட்டு]]க்களை [[அமிலம்]] அல்லது [[ஆல்ககோல்]] ஆக மாற்றும் செயல்முறையாகும். விளக்கமாகக் கூறுவதாயின் [[மதுவம்|மதுவம் அல்லது நுரைமம்]] (yeast) என்னும் [[உயிரினம்|உயிரினத்தால்]] காபோவைதரேட்டு ஆல்ககோலாக மாறுவதும், சில [[பாக்டீரியா]]க்கள் சில [[உணவு]] வகைகளில் தொழிற்பட்டு லக்டிக் அமிலம் உருவாவதும் நொதித்தல் என்னும் செயல்முறையாலாகும். இயற்கையாகவே பல உணவுகளில் குறிப்பிட்ட சாதகமான சூழ்நிலையில், இந்த நொதித்தல் செயல்முறை இருக்கின்ற போதிலும், நீண்டகாலமாக [[மனிதன்|மனிதர்கள்]] தமது தேவைக்காக இந்த நொதித்தல் செயல்முறையைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். இந்த நொதித்தல் செயல்முறைக்கு [[ஆக்சிசன்]] அவசியமற்று இருப்பதுடன், இச்செயல்முறையின்போது [[காபனீரொட்சைட்டு]]ம் வெளியேற்றப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/நொதிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது