ஐம்படைத் தாலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
==சொற்பொருள்==
ஐம்படை என்பது ஐந்து படைகள். இது ஐந்து ஆயுதங்கள் அல்லது எனப் பொருள் படும். காத்தற் கடவுளாகிய திருமாலின் கையில் உள்ள சங்கு, சக்கரம், வில், வாள், தண்டம் என்னும் ஐந்து ஆயுதங்களை இச்சொல் குறிக்கும். தாலி என்பதன் சொற்பிறப்புப் பற்றிய விளக்கம் எதுவும் ஐயத்துக்கு இடமின்றித் தெரிய வரவில்லை. தாலி என்னும் சொல் பலவகையான அணிகளைக் குறிக்கப் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் பயன்பட்டுள்ளது. ஐம்படைத் தாலி தவிர, புலிப்பல் தாலி, புலிநகத் தாலி, ஆமைத் தாலி போன்ற அணிகள் இவ்விலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றன. பொதுவாக இவை அனைத்தும் கழுத்தில் அணியப்படும் அணிகள். தற்காலத்தில் திருமணத்தில் மணமகன் மணப்பெண்ணுக்கு அணிவிக்கும் தாலியும் கழுத்தில் அணியப்படுவதே. தவிர இவை எல்லாமே அழகுக்காகவன்றி ஒருவகையில் காவலுக்காகவே அணியப்பட்டவை. "தாலம்" என்ற சொல் புல்வகையைச் சார்ந்த பனை போன்ற தாவரங்களைக் குறிப்பது. ஒரு காலத்தில் பனை ஓலையைச் சுருட்டி மஞ்சள் நூலில் கட்டிக் கழுத்தில் அணிந்தமையாலேயே தாலி என்னும் பெயர் ஏற்பட்டது என்ற கருத்தும் உண்டு.
 
==உசாத்துணைகள்==
* காந்தி, க., ''தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும்'', உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. 2008.
* புலியூர்க் கேசிகன் (தெளிவுரை), ''அகநானூறு - களிற்றியானை நிரை'', பாரி நிலையம், சென்னை. 2002 (முதற் பதிப்பு 1960)
* புலியூர்க் கேசிகன் (தெளிவுரை), ''புறநானூறு'', பாரி நிலையம், சென்னை. 2004 (முதற் பதிப்பு 1958)
* சிறீ சந்திரன், ஜெ., ''மணிமேகலை மூலமும் தெளிவுரையும்", வர்த்தமானன் பதிப்பகம், சென்னை. 2002.
* De Silva, Nimal., Pathirana, Hiranthi., Traditions of Hindu Jewellary, "The Sri Lanka Arcitect -Sept 2002 - Feb 2003", Sri Lanka Institute of Architects, Colombo. 2003.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஐம்படைத்_தாலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது