ஐம்படைத் தாலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
==சொற்பொருள்==
ஐம்படை என்பது ஐந்து படைகள். இது ஐந்து ஆயுதங்கள் அல்லது எனப் பொருள் படும். காத்தற் கடவுளாகிய [[திருமால்|திருமாலின்]] கையில் உள்ள [[சங்கு]], [[சக்கராயுதம்|சக்கரம்]], [[வில்]], [[வாள்]], தண்டம் என்னும் ஐந்து ஆயுதங்களை இச்சொல் குறிக்கும். தாலி என்பதன் சொற்பிறப்புப் பற்றிய விளக்கம் எதுவும் ஐயத்துக்கு இடமின்றித் தெரிய வரவில்லை. தாலி என்னும் சொல் பலவகையான அணிகளைக் குறிக்கப் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் பயன்பட்டுள்ளது. ஐம்படைத் தாலி தவிர, புலிப்பல் தாலி, புலிநகத் தாலி, ஆமைத் தாலி போன்ற அணிகள் இவ்விலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றன. பொதுவாக இவை அனைத்தும் கழுத்தில் அணியப்படும் அணிகள். தற்காலத்தில் திருமணத்தில் மணமகன் மணப்பெண்ணுக்கு அணிவிக்கும் தாலியும்[[தாலி]]யும் கழுத்தில் அணியப்படுவதே. தவிர இவை எல்லாமே அழகுக்காகவன்றி ஒருவகையில் காவலுக்காகவே அணியப்பட்டவை. "தாலம்" என்ற சொல் புல்வகையைச் சார்ந்த [[பனை]] போன்ற தாவரங்களைக் குறிப்பது. ஒரு காலத்தில் பனை ஓலையைச் சுருட்டி மஞ்சள் நூலில் கட்டிக் கழுத்தில் அணிந்தமையாலேயே தாலி என்னும் பெயர் ஏற்பட்டது என்ற கருத்தும் உண்டு. நோய்வராமல் தடுப்பதற்காக மந்திர ஓலைச் சுருளைக் கை, கால், கழுத்து போன்ற உறுப்புக்களில் அணிந்து கொள்வது பழங்காலத்தில் வழக்கில் இருந்ததாகத் தெரிகிறது. எனவே "தாலம்" என்ற சொல்லிலிருந்து காப்பணிகளைக் குறிக்கும் "தாலி" என்ற பொதுச் சொல் தோன்றியிருப்பதற்கான சாத்தியங்கள் உண்டு.
 
==தோற்றம்==
இன்று அணிகலன்கள் பெரும்பாலும் அழகுக்காகவே அணியப்படுகின்றன. இதனால், பல்வேறு வகையான பொருட்களைப் பயன்படுத்திக் கலை அம்சங்களுடன் இன்றைய அணிகலன்கள் செய்யப்படுகின்றன. ஆனால், [[பேய்]], [[பிசாசு]], இயற்கைச் சக்திகள் போன்றவற்றினால் ஏற்படக்கூடிய நோய்களிலிருந்து காத்துக்கொள்ளும் நோக்கத்துக்காகவே அணிகலன்கள் தோற்றம் பெற்றிருக்கக்கூடும் என்ற கருத்து உண்டு. நாகரிக வளர்ச்சியினால், அணிகலன்கள் அழகுப் பொருள்களாகவும் பயன்படத் தொடங்கின. எனினும், காப்புக்காக அணிகலன்களை அணியும் வழக்கமும் தொடர்ந்து இருந்தே வந்துள்ளது. இன்றும் பல பண்பாடுகளில் வழக்கில் உள்ளது. ஐம்படைத் தாலி என்பதும் காவலுக்காக அணியப்பட்ட அணிகலன்களில் ஒன்றாகும். தமிழ் இலக்கியங்களில், காப்புக்காக அணியப்படும் தாலிகள் தொடர்பான குறிப்புக்கள் புறநானூறு, அகநானூறு போன்ற சங்ககால நூல்களிலேயே காணப்பட்டாலும், ஐம்படைத் தாலி என்னும் பெயர் மணிமேகலையிலேயே முதன் முதலில் வருகின்றது.
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஐம்படைத்_தாலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது