கிரிகோர் மெண்டல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தேவையான உள்ளிணைப்புக்கள்
வரிசை 41:
== மெண்டலின் ஆராய்ச்சி மீட்டெடுப்பு ==
[[படிமம்:Mendelian inheritance 3 1.png|thumb|ஆட்சியுடைய, பின்னடைவான தோற்றவமைப்புக்கள். (1) பெற்றோர் சந்ததி. (2) F1 சந்ததி. (3) F2 சந்ததி.]]
20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை மெண்டலின் ஆராய்ச்சிகளின் முக்கியத்துவம் உணரப்படாமலேயே இருந்தது. 1900ல் [[Hugo de Vries]], [[Carl Correns]] மற்றும் [[Erich von Tschermak]] ஆகிய அறிஞர்கள் மெண்டலின் ஆராய்ச்சி முடிவுகளை மீட்டெடுத்தார்கள். அவர்கள் செய்து பார்த்த சோதனைகளில் மெண்டலின் ஆராய்ச்சி முடிவுகளை சரிபார்த்துக்கொள்ள முடிந்தது. அதன் பின்னரும் கூட, மெண்டலின் கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம் பற்றி [[William Bateson]] மற்றும் [[Karl Pearson]] ஆகியோருக்கு இடையில் கடும் விவாதங்கள் நிகழ்ந்தன. 1918ல், [[Ronald Fisher]] மெண்டலின் மரபியல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு நவீன பரிணாம உயிரியல் துறைக்கு வித்திட்டார்.
 
எனினும் மெண்டலின் ஆராய்ச்சி முடிவுகளின் நம்பகத்தன்மை அவ்வப்போது கேள்விக்குளாக்கப்பட்டு வருகிறது. புகழ்பெற்ற புள்ளிவிபரவியலாளரான ரொனால்ட் ஃபிசர் [[Ronald Fisher]] மெண்டலின் ஆய்வுகளில் கூறப்பட்டிருந்த F1 சந்ததியின் விகிதத்தை ஆய்வுசெய்து, அவை நம்ப முடியாத வகையில் 3 க்கு 1 என்ற விகிதத்தை மிக அண்மித்திருப்பதாக கருதினார். மெண்டல், உண்மைக்கு புறம்பான முறையில் தன் ஆராய்ச்சி முடிவுகளைத் திருத்தி எழுதினார் என்று சொல்ல முடியாது என்றாலும், அவரின் ஆராய்ச்சி முடிவுகள் ஆச்சரியப்படத்தக்க வகையில் எளிமையாக உள்ளன. பெரும்பாலும், அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் இவ்வளவு எளிமையாக கிடைத்து விடுவதில்லை. இது போக, அவர் பெரும்பாலும் ஒரே மரபணுவில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாகத் தாவரங்களில் விளையும் வேறுபாடுகளை மட்டும் கொடுத்திருந்தார். பல மரபணுக்களையும் அவர் கவனிதிருந்தார் என்றால், மரபணுக்களின் இணைப்புக்களின் காரணமாக முடிவுகள் வேறு மாதிரியாகவோ இவ்வளவு எளிமையாகவோ கிடைத்திருக்காமல் இருக்கலாம். இதனால், ஒருவேளை மெண்டல், தான் பரிந்துரைத்த மரபியல் கோட்பாடுகளுக்கு புறம்பாக வந்த ஆராய்ச்சி முடிவுகளை மறைத்திருக்கக் கூடுமோ என்ற ஐயப்பாடும் நிலவுகிறது.
 
== மெண்டலும் டார்வினும் ==
"https://ta.wikipedia.org/wiki/கிரிகோர்_மெண்டல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது