ஐம்படைத் தாலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
 
 
காப்பணியாகக் குழந்தைகள் அணியும் அணியாகக் [[புலிப்பல் தாலி]] பற்றிய குறிப்புக்கள் அகநானூறு, [[குறுந்தொகை]], [[சிலப்பதிகாரம்]] போன்ற முற்பட்ட நூல்களில் காணப்படுவது, புலிப்பல் தாலி என்னும் காப்பணி ஐம்படைத் தாலிக்கு முற்பட்டது என்ற கருத்துக் கொள்வதற்கு இடமளிக்கிறது. இதனால், புலிப்பல் தாலி அணியும் வழக்கத்தின் பிற்கால வளர்ச்சி நிலையிலேயே சமயச் சார்பு கொண்ட ஐம்படைத் தாலி அணியும் வழக்கம் ஏற்பட்டது எனச் சில அறிஞர்கள் கருதுகின்றனர்<ref>காந்தி, க., 2008. பக்: 200</ref>.
 
==அணிதலும், கழைதலும்==
ஆண் குழந்தைகளுக்கே பெற்றோர் ஐம்படைத் தாலி அணிவித்தனர் என்பதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் மூலம் அறிய முடிகின்றது. "கிருகியரத்தினம்" என்னும் வடமொழி நூல் பிறந்த ஐந்தாவது நாளில் குழந்தைகளுக்கு இதை அணிவிக்கவேண்டும் என்று கூறியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. எனினும் இது குறித்த தகவல்கள் எதுவும் தமிழ் நூல்களில் இல்லை. புறநானூற்றுப் பாடல் ஒன்றில் [[தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன்]] மிக இளம் வயதிலேயே போருக்குச் சென்றதைக் காட்டுமுகமாக, "தாலி களைந்தன்று மிலனே" என்று அவன் தாலியை இன்னும் கழையாத வயதினனாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இது ஒரு குறித்த வயதில் தாலியைக் கழைந்து விடுவது வழக்கம் என்பதை எடுத்துக் காட்டுகிறது. வாலிபப் பருவம் அடைந்தவுடன் தாலியைக் கழந்துவிட்டே கால்களில் [[கழல்]] அணியும் வழக்கம் இருந்தது என உணர முடியும். இதனால், ஆண்களின் வளர்ச்சி நிலைகளைக் குறியீடாகக் காட்டுவதற்கு அணிகள் பயன்பட்டதையும், ஐம்படைத் தாலியும் அவ்வாறான ஒரு வளர்ச்சி நிலையின் குறியீடாக விளங்கியமையும் அறிய முடிகின்றது.
 
==தற்காலத்தில் ஐம்படைத் தாலி==
தற்காலத்தில் தமிழ்நாட்டில் ஐம்படைத் தாலி அணியும் வழக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. மிகவும் அண்மைக்காலம் வரை செட்டிநாடு போன்ற தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இவ்வழக்கம் இருந்துள்ளது. ஆனாலும், இலங்கையில் இன்னும் பஞ்சாயுதம் என்ற பெயரில் இவ்வணி புழக்கத்தில் உள்ளது. [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்து]] நகைக் கடைகளில், முக்கிய அணி வகைகளுள் ஒன்றாகப் பல்வேறு வடிவமைப்புக்களைக் கொண்ட பஞ்சாயுதங்களை இன்றும் காண முடியும். இலங்கையில் தமிழர்கள் மட்டுமன்றிச் சிங்களவர்களும் பஞ்சாயுதம் அணியும் வழக்கத்தைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பழங்காலத்தைப் போலவே சிறுவர்களுக்கே இது அணிவிக்கப்படுகிறது. பதக்க வடிவில் பொன்னால் செய்யப்படும் இதனைப் பொன் சங்கிலியில் கோர்த்து அணிவிப்பர். குழந்தை பிறந்து பொதுவாக 31 ஆவது நாள் [[துடக்குக் கழிவு]]ச் சடங்கின் போது பஞ்சாயுதம் அணிவிப்பது வழக்கமாக உள்ளது.
.
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஐம்படைத்_தாலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது