சாமி சிதம்பரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "திராவிட இயக்கம்" (using HotCat)
வரிசை 4:
சாமி சிதம்பரம் [[தஞ்சாவூர் மாவட்டம்]] [[மயிலாடுதுறை]]க்கு அருகிலுள்ள கடகம் எனும் சிற்றூரில் பிறந்தார். இவரது பெற்றோர் - சாமிநாத மலையமான் - கமலாம்பாள் அம்மையார். 1923ல் “பண்டிதர்” பட்டம் பெற்றார். கரந்தைத் தமிழ்ச் சங்கத்திலும் தஞ்சாவூர் மாவட்டக் கழக உயர் நிலைப்பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகவும் பணியாற்றினார். [[பெரியார்|பெரியார் ஈ. வே. ராமசாமியின்]] கொள்கைகளால் கவரப்பட்டு அவரது [[சுயமரியாதை இயக்கம்|சுயமரியாதை இயக்கத்தில்]] சேர்ந்தார். 1930ல் சிவகாமி என்னும் கணவனை இழந்த பெண்ணை [[சுயமரியாதைத் திருமணம்|சுயமரியாதைத் திருமண]] முறையில் மணம் புரிந்தார். இத்திருமணத்துக்கு இருவீட்டார் தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பிருந்ததால், இது பெரியார் ஈ. வே. ராமசாமியின் சொந்த ஊரான [[ஈரோடு|ஈரோட்டில்]] இரண்டாவது சுயமரியாதை மாநாட்டுப் பந்தலில் நடந்தது. பெரியார் 1929-30ல் [[மலேசியா]] சென்ற போது சிதம்பரமும் உடன்சென்றார். 1932ல் ஐரோப்பியப் பயணத்திலிருந்து திரும்பிய பெரியார் [[ம. சிங்காரவேலு]]வின் [[பொதுவுடைமை]] சிந்தனைகளால் கவரப்பட்டு சுயமரியாதை இயக்கத்தை ஒரு பொதுவுடைமைக் கட்சியாக மாற்ற நினைத்த போது அதனை எதிர்த்தார். [[எஸ். ராமநாதன்|எஸ். ராமனாதனும்]] சிதம்பரத்துடன் சேர்ந்து எதிர்த்தால் பெரியார் சுயமரியாதை இயக்கத்தை மாற்றாமல் தனியே சுயமரியாதை சமதர்மக் கட்சி என்ற பெயரில் தனியே ஒரு கட்சியைத் தொடங்கினார். 1934ல் [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி]]யை [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரிட்டிஷ் அரசு]] தடை செய்ததால், பெரியார் பொதுவுடைமைக் கொள்கைகளுக்கு வெளிப்படையான ஆதரவைக் கைவிட்டார்.
 
சிதம்பரம் 1930களில் ஆண்டுகளுக்கு [[திராவிட இயக்க இதழ்கள்|திராவிட/சுயமரியாதை இயக்க இதழ்களில்]] உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். [[பகுத்தறிவு (இதழ்)|பகுத்தறிவு]], புரட்சி, [[குடியரசு (இதழ்)|குடியரசு]], திராவிடன், விடுதலை அவற்றுள் சில. இவை தவிர [[தினமணி]], வெற்றிமுரசு, சரஸ்வதி ஆகிய இதழ்களிலும் பணியாற்றியுள்ளார். 1936-38 காலகட்டத்தில் அறிவுக்கொடி என்னும் பத்திரிக்கையை [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] நடத்தினார். 1939 வரையான பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை “தமிழர் தலைவர்” என்னும் பெயரில் வெளியிட்டார். இந்நூல் இன்று வரை பெரியார் ஆய்வாளர்களால் பெரிதும் போற்றப்படுகிறது. 1940களில் பெரியாருடன் ஏற்பட்ட கொள்கை வேறுபாட்டால் [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகத்தை]] விட்டு வெளியேறினார். திராவிட இயக்கம் முன்வைத்த திராவிட-ஆரிய முரண் கொள்கையை மறுத்து இருவரும் ஒரே இனம் என்ற கருத்தை வலியுறுத்தினார். [[சிலப்பதிகாரம்]], [[திருக்குறள்]] போன்ற நூல்கள் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டவையல்ல என்றும் பிற்காலத்தியவை என்றும் நிறுவ முற்பட்டார். [[இளங்கோவடிகள்]] செங்குட்டுவனின் உடன்பிறந்தவர் இல்லை எனவும் சிலப்பதிகாரத்தில் கூறப்படும் [[சேரன் செங்குட்டுவன்|சேரன் செங்குட்டுவனின்]] வட நாட்டுப் படையெடுப்பு (கனக-விசயர்களை வெற்றி கொள்ளுதல்) தமிழர்கள் வடநாட்டவர் பால் கொண்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக திணிக்கப்பட்ட புனைவு என்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைத்தார். 1950 களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ இதழான ஜனசக்தி யில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.
 
==படைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சாமி_சிதம்பரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது