1975 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
== இறுதிப் போட்டிக்குத் தெரிவான அணிகள் ==
முதலாவது துடுப்பாட்ட உலகக் கிண்ண போட்டியின் இறுதிப்போட்டிற்கு அவுஸ்திரேலியா, மேற்கிந்திய அணிகள் தெரிவாகின. 1975 ஜுன் 21ம் திகதி இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் 60 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இப்போட்டி நடைபெற்றது.
 
== துடுப்பாட்டத்தில் மேற்கிந்திய அணி ==
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணி 8 விக்கட் இழப்புக்கு 291 ஓட்டங்கைளப் பெற்றுக்கொண்டது. மேற்கிந்திய அணியினர் 50 ஓட்டங்களைப் பெற்றபோது 3 விக்கட்டுக்களை இழந்திருந்தது. 4வது விக்கட்டுக்காக கிளைவ்லொயிட், களிச்சாரன் ஆகியோர் இணைந்து பெற்ற 149 ஓட்டங்கள் போட்டிற்கு புனர்வாழ்வினை வழங்கியது. இப்போட்டியில் கிளைவ்லொயிட் 102 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். (2 ஸிக்ஸர்ஸ் 12 பவுன்ரிகள் அடங்கும்.) பந்துவீச்சில் அவுஸ்திரேலியா பந்துவீச்சாளர் கெரிஹில்மா 48 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களைக் கைப்பற்றினர்.
 
== துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலியா அணி ==
பதிலுக்குத் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணியினரினால் 58.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 247 ஓட்டங்களையே பெறமுடிந்தது. குறுகிய ஓட்டங்களைப் பெற்று 292 ஓட்ட இலக்கையடைய முனைந்த அவுஸ்திரேலியா அணியினர் 5 விக்கட்டுக்கள் ரன்-அவுட் முறையில் வீழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். பந்துவீச்சில் மேற்கிந்திய அணியின் கீத்போயிஸ் 50 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
 
== முதலாவது துடுப்பாட்ட உலகக் கிண்ணம் மேற்கிந்தியாவுக்கு ==
17 ஓட்டடங்களினால் மேற்கிந்திய அணியினர் வெற்றியீட்டி முதலாவது உலகக் கோப்பையைத் தனதாக்கிக் கொண்டனர்.
 
== சிறப்பாட்டக்காரர் ==
இப்போட்டியில் மேற்கிந்திய அணித்தலைவர் கிளைவ்லொயிட் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.
 
 
== இலங்கை அணியின் நிலை ==
இப்போட்டித் தொடரில் இலங்கை அணியினராலும், கிழக்கு ஆபிரிக்கா அணியினாலும் எந்தவொரு போட்டியிலும் வெற்றிக் கொள்ள முடியவில்லை. இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியின்போது அவுஸ்திரேலியா பந்து வீச்சாளர்களான ஜெப்தோம்ஸன், லிலி ஆகியோரின் பந்துவீச்சில் இலங்கை அணியினைச் சேர்ந்த துலிப் மென்டிஸ், சுனில்வெத்தமுனி இருவரும் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
"https://ta.wikipedia.org/wiki/1975_துடுப்பாட்ட_உலகக்கிண்ணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது