1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
1999 உலகக்கிண்ணத்துக்கான இறுதிப்போட்டி ஜுன் 20. 1999 இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் பாக்கிஸ்தான், அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடைபெற்றது. நாணயச் சுண்டலில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.
 
பாக்கிஸ்தான் அணி 39 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றது. சஹீட் அன்வர் 15 ஓட்டங்களையும், அப்துல் ரஸ்ஸாக் 17 ஓட்டங்களையும், இஜாஸ் அஹமட் 22 ஓட்டங்களையும, இன்சமாம் உல் ஹக் 15 ஓட்டங்களையும், சஹீட் அப்ரிடி 13 ஓட்டங்களையும் பெற்றனர். ஏனைய வீரர்கள் 10க்கும் குறைவான ஓட்டங்களையே பெற்றனர். இப்போட்டியில் உதிரிகளாக 25 ஓட்டங்கள் பெறப்பட்டன. விக்கட்டுக்கள் பின்வருமாறு சரிந்தன. 1-21, 2-21, 3-68, 4-77, 5-91, 6-104, 7-113, 8-129, 9-129, 10-132.
 
பந்துவீச்சில் மெக்ராத் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களையும், பிளங்மின் 30 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டையும், பீ.ஆர். ரீபில் 29 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டையும், டி.எம். மோடி 17 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களையும், [[ஷேன் வோர்ன்]] 9 ஓவர்கள் பந்துவீசி ஓட்டமற்ற ஒரு ஓவரைக் கொடுத்து 33 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களையும் கைப்பற்றிக் கொண்டனர். அவுஸ்திரேலியா அணியின் சிறப்பான பந்துவீச்சு பாக்கிஸ்தான் அணி சிரமப்பப்பட்டது.
 
பதிலுக்குத் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 20.1 ஓவர்களில் 2 விக்கட் இழப்பிற்கு 133 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கட்டுக்களினால் பாக்கிஸ்தான் அணியை வெற்றியீட்டி. 1999ம் ஆண்டு உலகக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது. அவுஸ்திரேலியா ஆட்டத்தில் வோர்க் ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களையும். ஏ. ஸி. கில்கெரிஸ்ட் 54 ஓட்டங்களையும், பொன்டிங் 24 ஓட்டங்களையும், லீமன் 13 ஆட்டமிழக்காமல் ஓட்டங்களையும் பெற்றனர். அவுஸ்திரேலியாவின் விக்கட்டுக்கள் பின்வருமாறு சரிந்தன. 1-75, 2-112
 
பந்துவீச்சில் வசீம்அக்ரம், சக்லேன்முஸ்தாக் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டுக்களை கைப்பற்றினர். இந்த ஆட்டத்துக்கான நடுவர்களாகக் களத்தில் மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த எஸ். ஏ. பக்னரும், இங்கிலாந்தைச் சேர்ந்த டி. ஆர். ஷெப்பேர்ட்டும், மூன்றாவது நடுவராக வெங்கட்ராகவனும் பணியாற்றினர். ரஞ்சன் மடுகல்ல ஆட்ட நடுவராகக் கடமையாற்றினார். போட்டியில் சிறப்பாட்டக்காரராக ஷேன் வோர்ன் தெரிவானார்.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/1999_துடுப்பாட்ட_உலகக்கிண்ணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது