இரும விண்மீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 199:
 
==பல்நட்சத்திரங்கள்==
இரண்டு நட்சத்திரங்களுக்கும் கூடுதலாய் உள்ள தொகுதிகளை பல்நட்சத்திரத் தொகுதிகள் என்கிறோம். அல்கால் என்பது மிகக் குறிப்பிடத்தக்க மும்மை நட்சத்திரம் ஆகும். இது பெர்சியஸ் என்னும் நட்சத்திரக் கூட்டத்தில் உள்ளது. இந்த தொகுதியில் இருக்கும் இரண்டு நட்சத்திரங்கள் ஒன்றையொன்று மறைக்கின்றன. அல்காலின் செறிவு மாறுபாடு 1670 ஆம் ஆண்டில் ஜெமினியானோ மோண்டனாரி என்பவர் மூலம் பதிவு செய்யப்பட்டது. அல்கால் என்றால் {{lang-ar|الغول}}அரபு மொழியில் “''பூத நட்சத்திரம்'' ” என்பது பொருள். ஆல்பா செண்டாரி இன்னுமொரு புலப்படுகிற மும்மை நட்சத்திரம் ஆகும். இது செண்டாரஸ் என்னும் தெற்கு நட்சத்திரக் கூட்டத்தில் அமைந்துள்ளது. இது -0.01 என்கிற காட்சித் தோற்ற அளவுடனான நான்காவது மிகப் பிரகாசமான நட்சத்திரத்தைக் கொண்டிருக்கிறது. உயிர் வாழத்தக்க கிரகங்களைகிரகங்களைத் தேடும் முயற்சியில் இருமை நட்சத்திரங்கள் உதவி செய்யும் என்பதை இந்த அமைப்பு எடுத்துக் காட்டுகிறது. ஆல்பா செண்டாரி ஏ மற்றும் பி இரண்டும் நிலையான உயிர்வாழக் கூடிய பகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.<ref>{{cite web | url = http://carnegieinstitution.org/news_releases/news_0601_10.html | title = Planetary Systems can form around Binary Stars | publisher = Carnegie Institute | year = 2006}}</ref>
 
மூன்றுக்கும் அதிகமான நட்சத்திரங்களைக் கொண்ட தொகுதிகளும் உண்டு. கேஸ்டர் என்பது ஒரு ஆறு நட்சத்திரங்கள் கொண்ட தொகுதி ஆகும். இது தான் ஜெமினி நட்சத்திரக் கூட்டத்தில் பிரகாசம் மிகுந்த இரண்டாவது நட்சத்திரம் ஆகும். வானியல்ரீதியாக கேஸ்டர் ஒரு காட்சி இருமை நட்சத்திரமாக 1719 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. கேஸ்டரின் பாக நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் நிறமாலையியல் இருமைகளாகும். கேஸ்டர் நட்சத்திரத்திற்கு ஒரு மங்கலான சக நட்சத்திரம் உண்டு. இதுவும் ஒரு நிறமாலையியல் இருமை நட்சத்திரம் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/இரும_விண்மீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது