ஐம்படைத் தாலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
==தற்காலத்தில் ஐம்படைத் தாலி==
[[படிமம்:Jafna-Panchayutham.jpg|thumb|250px|பொன் சங்கிலியில் கோத்து அணியப்படும் யாழ்ப்பாணத்துப் பஞ்சாயுதப் பதக்கம் ஒன்று. கதாயுதத்திற்குப் பதிலாக சூலம் இருப்பதைக் கவனிக்கவும்.]]
தற்காலத்தில் தமிழ்நாட்டில் ஐம்படைத் தாலி அணியும் வழக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. மிகவும் அண்மைக்காலம் வரை செட்டிநாடு போன்ற தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இவ்வழக்கம் இருந்துள்ளது. ஆனாலும், இலங்கையில் இன்னும் பஞ்சாயுதம் என்ற பெயரில் இவ்வணி புழக்கத்தில் உள்ளது. [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்து]] நகைக் கடைகளில், முக்கிய அணி வகைகளுள் ஒன்றாகப் பல்வேறு வடிவமைப்புக்களைக் கொண்ட பஞ்சாயுதங்களை இன்றும் காண முடியும். இத்தகைய பஞ்சாயுத அணிகளில் கதாயுதத்திற்குப் பதிலாக ஈட்டி, சூலம் போன்ற ஆயுதங்கள் காணப்படுவதும் உண்டு. சூலம் சிவனுக்கு உரியது என்பதும், யாழ்ப்பாண மக்கள் சைவ மரபைப் பிந்பற்றுபவர்கள்பின்பற்றுபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே வேளை, சிலப்பதிகாரம் கொற்றவை என்னும் பழந் தமிழர் தெய்வத்தின் ஆயுதங்களாக, சூலம், வாள், வில், சங்கு, சக்கரம் ஆகியவற்றைக் குறிப்பிடுவதும் கவனிக்கத்தக்கது. இலங்கையில் தமிழர்கள் மட்டுமன்றிச் சிங்களவர்களும் பஞ்சாயுதம் அணியும் வழக்கத்தைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது<ref>டி சில்வா, நிமால்.; பத்திரன, கிராந்தி.; 2003. பக். 72</ref>. பழங்காலத்தைப் போலவே சிறுவர்களுக்கே இது அணிவிக்கப்படுகிறது. பதக்க வடிவில் பொன்னால் செய்யப்படும் இதனைப் பொன் சங்கிலியில் கோர்த்து அணிவிப்பர். குழந்தை பிறந்து பொதுவாக 31 ஆவது நாள் [[துடக்குக் கழிவு]]ச் சடங்கின் போது பஞ்சாயுதம் அணிவிப்பது வழக்கமாக உள்ளது.
.
 
"https://ta.wikipedia.org/wiki/ஐம்படைத்_தாலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது