டக்ளஸ் ஃபேர் பேங்க்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
rm copyvio text
வரிசை 17:
'''டக்ளஸ் ஃபேர் பேங்க்ஸ்'''
 
நடிகவேள் [[எம்.ஆர்.ராதாவை]] தமிழகத்தின் டக்ளஸ் என்று அழைப்பதுண்டு. யார் அந்த டக்ளஸ் என்று பலருக்குள்ளும் ஒரு கேள்வி எழுந்திருக்கக்கூடும். அது 1920. வாரன் ஜி.ஹார்டிங் அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மது விலக்கு அங்கு முழு வீச்சில் அமலாகியிருக்கிறது. 19-வது சட்டத்திருத்தத்தின் மூலம் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வந்துசேர்ந்திருந்தது. அமெரிக்காவின் முதல் வர்த்தக ரீதியிலான [[வானொலி]] நிலையம் காற்றில் தனது அலைவரிசையை முதன்முதலில் பரப்பத் துவங்கியிருந்தது. இந்தச் சூழலில்தான் பேசாப்படம் தனது உச்சக்கட்டப் புகழில் மக்களிடையே ஒருவிதக் கலைக் காய்ச்சலையே உண்டுபண்ணியிருந்தது.
 
பழைய நாடக [[இசை]] அரங்குகள் சில எஞ்சியிருந்த போதும், புதிய சினிமா மாளிகைகள் மிகுந்த எழுச்சியோடு உதயமாகத் தொடங்கின. முழுமையான மேற்கத்திய இசைக் குழுக்களின் வீரியமிக்க இசையுடனான அமெரிக்காவின் சினிமா முழு வீச்சில் மக்களிடையே பிரபலமாகி விட்டது. தங்களின் சினிமா நாயக-நாயகிகளின் மீதான வெறித்தனமான ஈடுபாடு ரசிகர்களை நோய்போலத் தொற்றிக் கொண்டு ஆட்டிப் படைத்தது. அதிலும் குறிப்பாக ஒரே ஒரு மனிதர் அமெரிக்கப் பேசாப்பட யுகத்தின் சக்கரவர்த்தியாக-பேரரசனாகவே கொடிகட்டிப் பறந்தார்.
[[படிமம்:FairbanksMarkofZorro.jpg|left|thumb|''The Mark of [[Zorro]]'']]
அவர் பெயரை உச்சரித்த மாத்திரத்திலேயே [[பெண்]] ரசிகைகளுக்கு கிறக்கம் வந்துவிடுகிறது என்று அன்றையப் பத்திரிகைகள் எழுதின. அவரின் காதல் சாகச நடிப்பும் வீரத்தனமான வெளிப்பாடும் ஆண்களையும் அவரின் ரசிகர்களாக்கி விட்டனவாம். அவர்தான் [[ஹாலிவுட்]] பேசாப் படயுகத்தின் மன்னன் எனப் போற்றப்படும் டக்ளஸ் ஃபேர்பாங்க்ஸ்
 
டக்ளஸ் 1883-ஆம் ஆண்டு மே 23 அன்று அமெரிக்காவின் கொலொராடோவிலுள்ள டென்வர் எனுமிடத்தில் ஹெசக்கியா சார்லஸ் உல்மான் என்பவரின் மகனாகப் பிறந்தார். உல்மான் நியூயார்க்கின் புகழ்மிக்க வழக்கறிஞராக இருந்தவர். சுரங்கத் தொழிலில் ஆர்வமிக்கவர். தாயார் எல்லா அடிலெய்டு மார்ஷ் வீக் ஒரு பேரழகி.
 
டக்ளஸ் தந்தை உல்மானுக்கு ஏற்கெனவே திருமணமாகி, குழந்தைகள் இருந்தன. எல்லா அவருக்கு முன்பே அறிமுகமாகியிருந்தவர். எல்லாவின் முதல் கணவர் டி.பி.நோயால் இறந்துவிட, அவரின் சட்டப்பூர்வ உரிமைகளை எல்லாவுக்கு உல்மான் பெற்றுத் தந்தார். அதன் பிறகு எல்லா அட்லாண்டா சென்று அங்கு நீதிபதியாக இருந்த எட்வர்ட் வில்காக்ஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவரோ எல்லாவைக் கொடுமைப்படுத்தி, தவறாக நடத்தத் தலைப்பட்டார். 1870களில் சட்டப்பூர்வ மணமுறிவு அபூர்வமாகவே வழங்கப்பட்டு வந்த நிலையில் உல்மான் தனது வாதத் திறமையால் எல்லாவுக்கு விவாகரத்து பெற்றுத்தந்தார். வழக்கில் வெற்றிபெற்ற அதே நேரத்தில் எல்லாவின் இதயத்தையும் வென்றவராக ஆகிவிட்டார் உல்மான். அது இருவரையும் தம்பதி களாக்கியது. 1881-ல் அவர்களுக்கு ராபர்ட் எனும் மகனும், 1883-ல் டக்ளசும் பிறந்தனர்.
 
உல்மான் நாடக ரசிகராக இருந்தார். அடிக்கடி நாடகங் களுக்குத் தன் மகன்களை அழைத்துச் செல்வார். மேடைக்குப் பின்னால் சென்று நாடக நட்சத்திரங்களோடு உரையாடுவார். ஊர் ஊராகச் சென்று கொண்டிருக்கும் அந்த நாளைய நாடகக்குழுக்களை அழைத்துத் தன் வீட்டில் தங்க வைத்து, விருந்து கொடுக்கிற ஆர்வமும் உல்மானிடம் இருந்தது. இதனால் கலை ஆர்வம் டக்ளசுக்கு இயல்பாகவே தொற்றிக் கொண்டது. ஷேக்ஸ்பியரின் நாடக வரிகளை மனப்பாடமாக ஒப்புவிக்க டக்ளசுக்கு அதிக சிரமம் ஏற்படவில்லை. எதிர்கால ஹாலிவுட்டின் அசல் அரசன் இவ்வாறு உருவாகத் தொடங்கினான்.
 
டக்ளஸ் தனது தந்தையுடன் மலையேறுவது வழக்கமானது. அவரது குழந்தைப் பருவம் பல வகைகளிலும் மகிழ்ச்சிகரமாகத்தான் சென்றது. ஆனால் அவரது தந்தை உல்மான் குடிப்பழக்கத்துக்கு அடிமை யானார். தொழிலில் பெரும் சரிவு ஏற்பட்டது. குடும்பத்தை விட்டுப் பிரிந்துபோக நேர்ந்தது.
 
டக்ளசுக்கு ஐந்து வயதுதான் முடிந்திருந்தது. அதற்குள் அவரது வாழ்க்கையில் இவ்வளவும் நடந்து முடிந்துவிட்டது. என்ன நடந்தாலும் டக்ளசிடம் அவரது தந்தையால் ஏற்பட்ட கலைத் தாகம் மட்டும் குறைத்து மதிப்பிடத்தக்கதாக இல்லை. அதன் காரணமாக டக்ளஸ் நடிப்புத் துறையைத் தேர்ந்தெடுத்தார். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து பெற்று அரசர்களோடும், அரசியரோடும், அதிபர்களோடும் தோளோடு தோள் உரசும் பெரு விருப்பம் அவரைக் கவ்வியிருந்தது.
 
தாயின் சிறகுக் கதகதப்பிலேயே அந்தப் பிள்ளைகள் வளர்ந்தன. தந்தை உல்மான் பிரிந்து போனபின் எல்லா அந்தக் குழந்தைகளை பெரும் பாடுபட்டு வளர்த்தார். எல்லாவின் முதல் கணவனுக்குப் பிறந்த ஜான் ஃபேர்பாங்க்ஸ் மற்றும் டக்ளஸின் அண்ணன் ராபர்ட் மற்றும் டக்ளஸ் ஆகியோர் மிகுந்த சிரமத்திற்கிடையிலும் நன்கு வளர்ந்தனர். தனது மூத்த கணவரின் கௌரவமிக்கதாகக் கருதப்பட்ட ஃபேர் பாங்க்ஸ் எனும் குடும்பப் பெயரையே எல்லா தன் மற்ற இரு குழந்தை களின் பெயர்களோடும் சேர்த்தார். டக்ளஸ் எல்டன் தாமஸ் உல்மான் ‘டக்ளஸ் ஃபேர்பாங்க்ஸ்’ ஆனார்.
 
டக்ளஸ் தனது 11 வயதில் மேடையேறத் தொடங்கினார். பிரபலமாக இருந்த எலிட்ச் கார்டன்ஸ் தியேட்டரில் தனது பதின் பருவத்தில் டக்ளஸ் தனது உணர்ச்சிப் பூர்வமான நடிப்பால் முக்கிய கவனம் பெற்றார். ஒரு நடிகராக நல்ல வரவேற்பைப் பெற்ற டக்ளஸ் அதனால் தனது உயர்நிலைப்பள்ளிப் படிப்பைக் கை கழுவ நேர்ந்தது. அதற்காக அவர் எந்தக் கவலையும் படவில்லை.
 
[[பகுப்பு:திரைப்படம்]]
 
"https://ta.wikipedia.org/wiki/டக்ளஸ்_ஃபேர்_பேங்க்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது