"அகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,210 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: பழந்தமிழர் வாழ்வியலில் '''அகம்''' என்பது, ஆணும், பெண்ணும...)
 
பழந்தமிழர் வாழ்வியலில் '''அகம்''' என்பது, [[ஆண்|ஆணும்]], [[பெண்]]ணும் ஒருவரையொருவர் கண்டு, காதலித்து, மணம்புரிந்து, இல்லறம் நடத்துவதோடு தொடர்புடைய வாழ்வின் பகுதி ஆகும். பழந்தமிழ் [[இலக்கியம்|இலக்கியங்கள்]] மக்களின் அகவாழ்க்கை பற்றி மிகவும் விரிவாகப் பேசுகின்றன. தமிழ் இலக்கண நூலான [[தொல்காப்பியம்]] இலக்கியங்களில் அகப்பொருளைக் கையாள்வது பற்றிய இலக்கணங்களை வகுப்பதுடன், அக்காலத்தின் அக வாழ்வின் பல்வேறு அம்சங்கள் பற்றியும் எடுத்துரைக்கின்றது.
 
==சொற்பொருள்==
அகம் என்பது காரணப் பெயர் என்றும், இது போக நுகர்ச்சி ஆதலாலும், அதனால் விளையும் பயனைத் தானே அறிதலாலும் அகம் எனப்பட்டது என்றும் தொல்காப்பிய உரையாசிரியரான இளம்பூரணர் கூறுகிறார். ஒரு ஆணும், ஒரு பெண்ணும் ஒருவரோடு ஒருவர் கூடும்போது பிறக்கும் இன்பம் அவர்கள் அகத்தால் (உள்ளத்தால்) உணரப்படுவது. இதனாலேயே அது அகம் எனப்பட்டது என்பர். வாழ்வின் அகம் சார்ந்த பகுதி "அகத்திணை" எனப்பட்டது. இலக்கியங்கள் இது பற்றிப் பேசும்போது அதை "அகப்பொருள்" என்றனர்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/654289" இருந்து மீள்விக்கப்பட்டது