"அகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

959 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
==கருத்துரு==
தமிழ் இலக்கணம் சொற்களினால் உணரப்படும் பொருளை மூன்று வகைகளாகப் பிரிக்கிறது. அவை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்பன. நிலம், காலம் என்பன தொடர்பானவை முதற்பொருளில் அடங்குகின்றன. இந்த இடத்திலும், காலத்திலும் காணப்படுவன கருப்பொருட்கள் எனப்படுகின்றன. மக்கள், விலங்குகள், உணவு, கருவிகள் முதலிய [[உயர்திணை]], [[அஃறிணை]]ப் பொருட்கள் இதனுள் அடங்கும். மக்களுக்கு உரிய பொருட்கள் அகம், புறம் என்பன. இவையிரண்டும் உரிப்பொருள் என்னும் பிரிவுள் அடங்குகின்றன. இதன்மூலம், மனித வாழ்வியலின் அம்சங்களை நிலம், காலம் என்பவற்றுடனும் அவற்றில் காணப்படும் பிற உலகப் பொருட்களுடனும் இயைபுபடுத்திக் காண்பதற்கான அடிப்படை உருவாக்கப்படுவதைக் காணலாம்.
 
==வகைகள்==
மனிதருடைய அகவாழ்க்கையில் பல்வேறு நிலைகள் காணப்படுகின்றன. பண்டைத் தமிழ் இலக்கியங்கள் இந்நிலைகளை நிலப் பிரிவுகளுடனும், காலத்துடனும், இயற்கையுடனும் தொடர்புபடுத்திக் கையாளுகின்றன. இவ்விலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு அகவாழ்வைப் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல், கைக்கிளை, பெருந்திணை என எழுவகையாக வகுத்து விளக்குகிறது தமிழ் இலக்கணம்.
 
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/654818" இருந்து மீள்விக்கப்பட்டது