ராக்ஃபெல்லர் மையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
 
'''ராக்ஃபெல்லர் மையம்''' அல்லது '''ராக்ஃபெல்லர் பிளாசா''' என்பது 19 வணிகக் கட்டிடங்களை உள்ளடக்கிய ஒரு கட்டிடத் தொகுதி ஆகும். [[நியூ யார்க் நகரம்|நியூ யார்க் நகரத்தின்]] 48 ஆவது தெருவிலும், 51 ஆவது தெருவிலும் அமைந்துள்ள இக் கட்டிடத் தொகுதி 22 [[ஏக்கர்]] (89,000 [[சதுர மீட்டர்]]) பரப்பளவில் உள்ளது. இந் நிலம் ஐந்தாம், ஆறாம் அவெனியூக்களுக்கு இடைப்பட்ட பகுதியை உள்ளடக்கியுள்ளது. [[நடுநகர மான்கட்டன்]] மையப் பகுதியில் உள்ள இக் கட்டிடத் தொகுதி, ஒரு காலத்தில் உலகின் முதற் பணக்காரராக இருந்த [[ராக்ஃபெல்லர்]] குடும்பத்தினரால் கட்டப்பட்டது. 1987 ஆம் ஆண்டில் இது [[ஐக்கிய அமெரிக்கா]]வின் தேசிய வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
 
==வரலாறு==
ராக்ஃபெல்லர் மையம் என்னும் பெயர், இளைய சான் டி. ராக்ஃபெல்லர் என்பவரது பெயரைத் தழுவியது. இவரே இது அமைந்துள்ள நிலத்தை 1928 ஆம் ஆண்டு கொலம்பியாப் பல்கலைக் கழகத்திடமிருந்து ஒற்றிக்குப் பெற்று 1930 ஆம் ஆண்டில் இதன் வளர்ச்சித் திட்டத்தைத் தொடங்கினார். இந்த இடத்தில் கூட்டு முயற்சி மூலம் பெருநகர ஒப்பேரா கழகத்துக்காக ஒப்பேரா மாளிகை ஒன்றை அமைப்பதற்கே ராக்ஃபெல்லர் முதலில் திட்டமிட்டார். எனினும், 1929 ஆம் ஆண்டின் பங்குச் சந்தை வீழ்ச்சியைத் தொடர்ந்து பெருநகர ஒப்பேராக் கழகம் திட்டத்தில் இருந்து பின்வாங்கியது. இதனால் ராக்ஃபெல்லருக்கு இரண்டு வழிகளே இருந்தன. ஒன்று திட்டத்தை முற்றாகக் கைவிடுவது. இரண்டாவது, அவர் மட்டுமே முதலிட்டுத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது. மூன்று முறை ஒவ்வொன்றும் 21 ஆண்டுகளுக்குப் புதுப்பிக்கத்தக்கதும் மொத்தம் 87 ஆண்டுகளுக்கும் பயன்படுத்தத் தக்கதுமான ஒழுங்குடன் முதலில் 24 ஆண்டுகள் ஒற்றிக்கு எடுத்த நிலத்தில் தனியாகவே திட்டத்தைத் தொடர ராக்ஃபெல்லர் முடிவெடுத்தார். இந்த ஒற்றிச் செலவுக்காக பெருநகர ஆயுள் காப்பீட்டுக் கம்பனியிடம் கடன் பெற்றார். தனது எண்ணெய் நிறுவனப் பங்குகளை விற்பதனால் பெறப்பட்ட பணம் பிற செலவுகளுக்குப் பயன்பட்டது.
 
 
தற்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தனியார் கட்டிடத் திட்டங்களில் மிகவும் பெரியது இதுவாகும். [[ஆர்ட் டெக்கோ]] பாணியில் அமைந்த 14 கட்டிடங்கள் 1930 ஆம் ஆண்டு மே 17 இல் தொடங்கப்பட்டது. 1039 நவம்பர் 1 ஆம் நாள் திட்டம் நிறைவேற்றப்பட்டது. இத் திட்டத்தின் தலைமைக் கட்டிடக் கலைஞர் [[ரேமண்ட் ஊட்]] (Raymond Hood) ஆவார். கட்டிட ஒப்பந்தகாரரும், மேலாண்மை முகவரும் [[சான் ஆர். தொட்]] (John R. Todd) என்பவர்.
 
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ராக்ஃபெல்லர்_மையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது