கான்கோர்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
சி Senthilvel32ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{|{{Infobox Aircraft Begin
|name= கான்கார்ட்
|image=File:Concorde.planview.arp.jpg
|caption=
}}{{Infobox Aircraft Type
|type= மீஒலிவேக பயணிகள் வானூர்தி
|manufacturer= [[பிரிட்டானிய வானூர்தி நிறுவனம்]] (பிஏசி, தற்போது பிஏஈ சிஸ்டெம்ஸ்) <br> [[ஏரோஸ்பேஷியேல்]] (தற்போது [[ஈஏடிஎஸ்]])
|designer=
|first flight= [[மார்ச் 2]], [[1969]]
|introduction= [[ஜனவரி 21]], [[1976]]
|retired= [[நவம்பர் 23]], [[2003]] <!-- final flight, empty, to Filton --->
|status= உபயோகத்தில் இல்லை
|primary user= [[பிரிட்டிஷ் ஏர்வேஸ்]]<!--Limit one (1) primary user. Top 4 users listed in 'primary user' and 'more users' fields based on number of their fleets. -->
|more users= [[ஏர் பிரான்ஸ்]] <br>பிரானிஃப் இண்டர்நேஷனல் ஏர்வேஸ் <br>[[சிங்கப்பூர் வான்வழி]]<!-- Limit is three (3) in 'more users' field, four (4) total users with primary user. Please separate with <br/>.-->
|produced=
|number built= 20 <ref>Towey 2007, p. 359.</ref><ref>{{cite news |url = http://news.bbc.co.uk/1/hi/uk/850899.stm |title = Ageing luxury jet |publisher=BBC News |date = 25 July 2000}}</ref>
|unit cost= £23&nbsp;[[மில்லியன்]] (1977)
|variants with their own articles=
}}
|}
 
'''கான்கார்ட்''' (Concorde) வானூர்தி [[சுழல் தாரை]] எந்திரம் கொண்ட ஒலியை விட வேகமாக செல்லும் பயணிகள் வானூர்தியாகும். இவ்விமானம் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தப்படி இருநாட்டு வானூர்தி அமைப்பகங்களாலும் தயாரிக்கப்பட்டது. இவ்வானூர்தி முதன் முறையாக 1969-ல் பறக்கவிடப்பட்டது. 1976-ஆம் ஆண்டு பயணிகள் விமான சேவைக்கு கொண்டுவரப்பட்டது. அதிலிருந்து 27 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்தது.
 
இவ்வானூர்தி [[லண்டன்]] [[கீத்ரு]] ([[பிரிட்டிஷ் ஏர்வேஸ்]]) விமான தளத்திலிருந்தும் [[பாரிஸ்]] [[சார்லசு தே கால்]] ([[ஏர் பிரான்ஸ்]]) விமான தளத்திலிருந்தும் அமெரிக்காவின் [[நியூ யார்க்]] மற்றும் [[வாசிங்டன், டி. சி.]] நகரங்களுக்கு தினமும் சென்று வந்து கொண்டிருந்தது. இதன் பயண நேரம் மற்ற வானூர்திகளின் பயண நேரத்தில் பாதி மட்டுமே ஆகும்.
 
மொத்தம் 20 கான்கார்ட் விமானங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. ஆதலால் இத்திட்டம் இருநாடுகளுக்கும் பெருத்த நட்டத்தை விளைவித்தது. மேலும் இருநாட்டு வானூர்தி நிறுவனங்களும் வானூர்திகளை வாங்க அரசாங்கமே நிதியுதவி அளித்தது. சூலை 25, 2000, அன்று [[ஏர் பிரான்சு வானூர்தி 4590|நடைபெற்ற விபத்தின்]] காரணமாகவும் மற்றும் சில காரணங்களுக்காகவும் கான்கார்ட் பயணிகள் போக்குவரத்து 26-நவம்பர்-2003 -யோடு நிறுத்தப்பட்டது.
 
கான்கார்ட் எனும் பெயரே இரு நாடுகளுக்கும் இடையே இருந்த வானூர்தி உருவாக்க உடன்படிக்கையைக் காட்டுகிறது. பிரிட்டனில் வழக்கமான வடிவமைப்பில் அல்லாத அனைத்து வானூர்திகளும் -கான்கார்ட்- என்றே அழைக்கப்படும். வான்வழிப் போக்குவரத்தில் ஓர் மைல்கல்லாகவும் முக்கியமான சின்னமாகவும் இவ்விமானம் கருதப்படுகிறது.
 
==உருவாக்கம்==
[[File:ConcordePrototype.JPG|thumb|right|ஐக்கிய இராச்சியத்தின் வேந்திய போர் அருங்காட்சியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் தயாரிப்புக்கு முந்தைய கான்கார்ட் வடிவம்]]
===கருத்துப் படிவம்===
 
1950-களில் [[பிரான்சு]], [[பிரிட்டன்]], [[அமெரிக்கா]], [[ரஷ்யா]] ஆகிய நாடுகள் ஒலி மிஞ்சு வேக பயணிகள் வானூர்திகள் தயாரிக்க தீவிர ஈடுபாடு கொண்டிருந்தன. பிரிட்டனின் பிரிஸ்டல் வானூர்தி நிறுவனமும் பிரான்சின் சட் வானூர்தி நிறுவனமும் அவ்வகை வானூர்திகளை வடிவமைத்துக் கொண்டிருந்தன. அவற்றின் வானூர்திகள் முறையே வகை-223 , சுப்பர் கேரவெல் எனவும் அழைக்கப்பட்டன. இவ்விரண்டு திட்டப்பநிகளுக்கும் அவற்றின் அரசாங்கங்களும் பெருமளவு நிதியுதவி செய்தன.<ref name="earlyhist">[http://www.concordesst.com/history/eh1.html#a "Early History."] ''concordesst.com''. Retrieved: 8 September 2007.</ref> பிரிட்டனின் வடிவமைப்பு சுமார் 100 பேரை சுமந்து செல்லும் முக்கோண வடிவிலான மெல்லிய-இறக்கை கொண்டது.<ref name = 'deltawing'>{{cite journal |url = http://md1.csa.com/partners/viewrecord.php?requester=gs&collection=TRD&recid=A6825061AH&q=Concorde+Delta&uid=788872723&setcookie=yes |title = The development of the slender delta concept |journal=Aircraft Engineering |author=Maltby, R.L. |volume = 40 |year = 1968}}</ref> இது அட்லாண்டிக் கடலின் ஒரு கரையிலிருந்து மற்ற கரைக்கு பறக்குமாறு வடிவமைக்கப்பட்டது. பிரான்சு நடுத்தர-தூரம் செல்லும் வகையில் வடிவமைத்துக் கொண்டிருந்தனர்.<ref name="earlyhist"/>
 
1960-களின் தொடக்கத்திலேயே இருவித வடிவமைப்புகளும் உற்பத்திக்கு தயாராய் இருந்தன. ஆனால், உற்பத்தி செலவு மிக அதிகமாக இருந்ததால் பிரிட்டன் சர்வதேச ஒத்துழைப்பு கோரியது.<ref name="earlyhist"/> பிரான்சு மட்டுமே இதில் ஆர்வமாக இருந்தது. இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தமாக அல்லாமல் இருநாடுகளுக்கிடையேயான சர்வதேச உடன்பாடாகவே ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் எந்தக் காரணத்தினாலும் ஒப்பந்தத்தில் விலக நேர்ந்தால் விலகும் நாடு மற்ற நாட்டுக்கு பெரும் தொகையை தருமாறு ஒப்பந்தம் எழுதப்பட்டது.<ref name="earlyhist"/> இச்சரத்து பிரிட்டனின் விருப்பத்துக்கேற்ப சேர்க்கப்பட்டது. ஒப்பந்தம் 28-நவம்பர்-1962 ல் கையெழுத்தானது. இடைப்பட்ட காலத்தில் வானூர்திகள் வடிவமைத்த இரு நிறுவனங்களும் புதிய நிறுவனங்களுடன் சேர்க்கப்பட்டு புதிய பெயரிடப்பட்டன. ஆக, [[கான்கார்ட்]] ஒப்பந்தம் பிரிட்டிஷ் வானூர்தி நிறுவனத்துக்கும் (British Aircraft Corporation) ஏரோச்பேஷியேல் (Aérospatiale) இடைப்பட்டது ஆகும்.<ref name="earlyhist"/> இக்கூட்டமைப்பு முதலில் நெடு வீச்சு வானூர்தியும் சிறு வீச்சு வானோர்தியும் தயாரிக்க திட்டமிட்டிருந்தது. ஆனால் சிறு வீச்சு வானூர்திக்கு வாங்குவோரிடம் வரவேற்பு இல்லாததால் நெடு வீச்சு வானூர்தி மட்டும் உற்பத்தி செய்வதென முடிவு செய்யப்பட்டது. அக்காலத்தில் இருந்த பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனங்களிடமிருந்து 100-க்கும் மேற்பட்ட நெடு-வீச்சு விமானங்கள் செய்ய ஆணைகள் கிடைத்தன.
 
===பெயரிடல்===
[[File:Concorde on Bristol.jpg|thumb|கான்கார்டின் இறுதிப்பயணம், 26 நவம்பர் 2003]]
 
இரு நாடுகளுக்கு இடையேயான உடன்படிக்கையையும் இணக்கத்தையும் ஒற்றுமையையும் குறிக்கும் வகையில் விமானத்துக்கு [[கான்கார்ட்]] என பெயரிடப்பட்டது. பிரெஞ்சு மொழியில் concorde (IPA: [kɔ̃kɔʁd]), ஆங்கிலத்தில் அதன் நிகர் வார்த்தை concord (IPA: /ˈkɒŋkɔrd/).
 
===சோதனை===
 
[[File:Startende Concorde.jpg|thumb|right|கிளம்பும் கன்கார்ட்]]
1965-பிப்ரவரியில் மூல முன் மாதிரிகள் கட்டுமானம் தொடங்கியது. ஒரு விமானம் (001) பிரான்சிலும் மற்றொரு விமானம் (002) பிரிட்டனிலும் கட்டப்பட்டன. 2,மார்ச்-1969 ல் கான்கார்-001 சோதனை முறையில் பறக்க விடப்பட்டது. இதன் விமானி ஆந்த்ரே துர்காட்<ref>{{cite web |url = http://news.google.co.uk/newspapers?id=KXoyAAAAIBAJ&sjid=GLkFAAAAIBAJ&pg=6573,360672&dq=concorde&hl=en |title = Pilot Says Concorde Flight "Perfect" |publisher=Montreal Gazette |date = 1 March 1969}}</ref> ஆவார். முதல் ஒலி மிஞ்சு வேக பயணம் 1-அக்டோபரில் நிகழ்ந்தது.<ref>{{cite news |url = http://select.nytimes.com/gst/abstract.html?res=F30C1EFC3454127B93C0A9178BD95F4D8685F9 |title = Concorde Tops Speed of Sound for 9 Minutes on a Test Flight |work=New York Times |date = 2 October 1969}}</ref> ஐக்கிய ராச்சியத்தின் கான்கார்ட் விமானம் ஏப்ரல்-9,1969 ல் சோதனை முறையில் பறக்க விடப்பட்டது. இதன் விமானி பிரையன் ட்ரப்சா ஆவார்.<ref>{{cite news |url = http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/march/2/newsid_2514000/2514535.stm |title = 1969: Concorde flies for the first time |publisher=BBC News |accessdate = 8 July 2007 | date=2 March 1969}}</ref><ref>{{cite news |url = http://pqasb.pqarchiver.com/chicagotribune/access/584606362.html?dids=584606362:584606362&FMT=ABS&FMTS=ABS:AI&type=historic&date=Apr+10%2C+1969&author=&pub=Chicago+Tribune&desc=Concorde+002+Makes+1st+Flight&pqatl=google |title = Concorde 002 Makes 1st Flight |work=Chicago Tribune |date = 10 April 1969 | first=Edward | last=Rohrbach}}</ref> இவ்விமானத் திட்டம் வளர்சியடைந்ததில் கான்கார்ட்-001 செயல்முறை விளக்க மற்றும் விற்பனை முறை பயணத்தை 4-செப்டம்பர்,1971 அன்று மேற்கொண்டது.<ref>{{cite news |url =http://pqasb.pqarchiver.com/chicagotribune/access/597531692.html?dids=597531692:597531692&FMT=CITE&FMTS=CITE:AI&type=historic&date=Sep+05%2C+1971&author=&pub=Chicago+Tribune&desc=Concorde+001+Makes+Its+First+Atlantic+Crossing&pqatl=google |title = Concorde 001 Makes Its First Atlantic Crossing |work=Chicago Tribune |date = 5 September 1971}}</ref><ref>{{cite web |url =http://news.google.co.uk/newspapers?id=VCY0AAAAIBAJ&sjid=2uAIAAAAIBAJ&pg=2521,1962837&dq=concorde&hl=en |title = Anglo-French Concorde Lands in Brazil to begin Week of Demonstration Flights |publisher=Bangor Daily News |date = 7 September 1971}}</ref> அப்பயணமே முதல் அட்லாண்டிக் கடல் தாண்டிய பயணமாகும். செயல்முறை விளக்க பயணத்தை கன்கார்ட்-002 2,சூன்-1972 ல் மேற்கொண்டது. இதன் பயணம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றது.<ref>{{cite news |url = http://select.nytimes.com/gst/abstract.html?res=F70D10F73B591A7493C1A9178DD85F468785F9 |title = Concorde Prototype Begins 10-Nation Tour; Britain Shows Optimism For Supersonic Aircraft |work=New York Times |date = 3 June 1972 | first=Michael | last=Stern}}</ref> இவ்வகையான பயணங்கள் விமானம் செய்ய 70-க்கும் மேற்பட்ட ஆணைகளை ஈர்த்தது. ஆயினும் பல்வேறு காரணங்களால் அவ்வாணைகள் திரும்பப் பெறப்பட்டன. [[1973 எண்ணெய் நெருக்கடி]]யும் விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் பொருளாதார நெருக்கடிகளும் பாரிசு வானூர்தி கண்காட்சியில் கான்கார்டின் போட்டி விமானமான சோவியத்தின் [[டுபோலேவ் டு-144]] (Tupolev Tu-144) தீநேர்வும் சுற்றுச்சூழல் கவலைகளும் தயாரிப்பு ஆணைகள் திரும்பப் பெறப்பட காரனாமாயின. 1976 வாக்கில் பிரிட்டன், பிரான்சு, சீனா, ஈரான் ஆகிய நாடுகளே வாங்கக்கூடிய நாடுகளாக தோன்றின.<ref>{{cite web |url = http://news.google.co.uk/newspapers?id=XJcUAAAAIBAJ&sjid=9a0DAAAAIBAJ&pg=4991,607322&dq=second+generation+concorde&hl=en |title = Concordes limited to 16 |publisher=Virgin Islands Daily News |date = 5 June 1976}}</ref> ஆயினும் இறுதியில் பிரிட்டன் மற்றும் பிரான்சு நாடுகளின் வான்போக்குவரத்து நிறுவனங்கள் மட்டுமே இவ்விமானத்தை வாங்கி பயன்படுத்தின. அதில் அந்தந்த நாடுகளின் அரசாங்கங்கள் பெருமளவு லாபத்தை, விமான நிறுவனங்களுக்கு வழங்கிய கடன் பொருட்டு, எடுத்துக் கொண்டன.<ref>{{cite web |url = http://www.britishairways.com/concorde/faq.html#6 |title = Payments for Concorde |publisher=British Airways |accessdate = 2 December 2009}}</ref>
 
1971-ல் அமெரிக்கா [[போயிங் 2707]] உருவாக்கத்தை நிறுத்தியது. பிரான்சு மற்றும் ஐக்கிய ராச்சியத்திலிருந்த தொழில்துறை கண்காணிப்பாளர்களின் கருத்துப்படி, "ஒலி மாசுபாட்டின் அடிப்படையிலான எதிர்ப்புகள் அமெரிக்காவால் தூண்டிவிடப்பட்டன அல்லது ஊக்குவிக்கப்பட்டன. ஏனெனில் அமெரிக்காவால் கான்கார்டுக்கு இணையான ஒரு போட்டி விமானத்தை அவர்களால் தயாரிக்க முடியவில்லை".<ref>{{cite news |url = http://select.nytimes.com/gst/abstract.html?res=F50D16F93C54137A93C0A81789D85F478785F9 |title = Britain and France have wasted billions on the Concorde |work=New York Times |first = Anthony |last = Lewis |date = 12 February 1973}}</ref> மற்ற நாடுகள், இந்தியா, மலேசியா போன்றவை ஒலி மாசுபாட்டை காரணம் காட்டி கான்கார்ட் ஆணைகளை விலக்கி கொண்டது இங்கு குறிப்பிடத்தக்கது.<ref>{{cite news |url = http://select.nytimes.com/gst/abstract.html?res=F70813F83F5511728DDDAE0994DA415B888BF1D3 |title = Malaysia lifting ban on the use Of its Airspace by the Concorde |work=New York Times |date = 17 December 1978}}</ref><ref>{{cite web |url = http://news.google.co.uk/newspapers?id=xTMsAAAAIBAJ&sjid=48sEAAAAIBAJ&pg=6855,2298265&dq=india+concorde&hl=en |title = News from around the world |publisher=Herald-Journal |date = 13 January 1978}}</ref>
 
செயல்விளக்க மற்றும் சோதனை முறைப் பயணங்கள் 1974-லிலிருந்து செய்யப்பட்டன. கான்கார்டின் சோதனை முறை பயணங்கள் இன்னும் விஞ்சப் படாத பலவித சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. மூல முன்மாதிரி, தயாரிப்பு முன்மாதிரி, முதல் தயாரிப்பு விமானம் ஆகியவை மொத்தமாக 5335 மணி நேரங்கள் விண்ணில் பறந்தன. அதில் 2000-க்கும் மேற்பட்ட விமான பறவை நேரம் ஒலி மிஞ்சு வேகத்தில் நிகழ்த்தப்பட்டது. 1977-ல் ஒரு விமானம் செய்ய £23 மில்லியன் ($46 மில்லியன்) செலவானது. இது முன்னர் அனுமானிக்கப்பட்ட தொகையை விட ஆறு மடங்கு அதிகம் ஆகும்.<ref>{{cite news |url = http://www.telegraph.co.uk/news/uknews/1352927/Is-this-the-end-of-the-Concorde-dream.html |title = Is this the end of the Concorde dream? |work=Daily Telegraph |first = Paul |last = Marston |date = 16 August 2000 |quote = ...the estimated development costs of £160&nbsp;million. Anglo-French taxpayers ended up paying out £1.3&nbsp;billion by the time Concorde entered passenger service in 1976. | location=London}}</ref>
 
[[File:concorde g-boab in storage arp.jpg|thumb|right| அனைத்து கான்கார்ட் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டபின் லண்டன் கீத்ரோ விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் கான்கார்ட்]]
 
==வடிவமைப்பு==
 
===முக்கிய அம்சங்கள்===
[[File:ConcordeCockpitSinsheim.jpg|thumb|right|Concorde cockpit layout]]
[[File:Concorde fuel trim.svg|thumb|upright|Fuel pitch trim]]
கான்கார்ட், நான்கு [[ஒலிம்பஸ்]] எந்திரங்களைக் கொண்ட [[முக்கோண இறக்கை]] கொண்ட வானூர்தியாகும். ஒலிம்பஸ் எந்திரங்கள் முதலில் அவ்ரோ வல்கன் குண்டுவீசும் போர்விமானத்துக்காக தயாரிக்கப்பட்டவையாகும். கான்கார்ட் வானூர்தியே முதன் முதலில் மின் கட்டுப்பாட்டு முறையில் கட்டுப்படுத்துமாறு வடிவமைக்கப்பட்ட பயணிகள் வானூர்தியாகும். அது கலப்பு மின் சுற்றுககளை பயன்படுத்தியது. பியர்ரி சாத்ர் இத்திட்டத்தின் முதன்மை வடிவமைப்பாளர். சர் ஆர்கிபால்த் ரஸ்ஸல் அவருக்கு துணையாளாய் இருந்தார்.
 
கான்கார்ட் பின்வரும் தொழில்நுட்பங்களை கொண்டிருந்தது:
 
உயர் வேகத்துக்கு:
 
*இரட்டை முக்கோண வடிவ இறக்கை
*மாறுபடும் காற்று உட்கொள்ளும் வடிவமைப்பு - எண்மருவி கணினிகளால் கட்டுப்படுத்தப்படுவது
*சிக்கன வகையில் பறந்து செல்லும் திறன்
*மின் கட்டுப்பாட்டில் இயங்கும் உந்து-எந்திரங்கள்
*குனியும்-மூக்கு பகுதி - தரை இறங்கும் போது ஓடுபாதையை தெளிவாகக் காணும்பொருட்டு
 
எடை-குறைப்புக்கும் மேம்பட்ட செயல்திரனுக்கும்:
 
*மாக் 2.04 (2,170 கிமீ/மணி) வேகத்தில் சிக்கன தொடர் பயணம் - இவ்வேகத்தில் சிக்கனமாக எரிபொருள் உட்கொள்ளும் (ஒலி மிஞ்சு வேகத்தில் குறைந்த இழுவை இவ்வேகத்தில் செயல்படும்; எனினும் இதற்கும் அதிகமான வேகத்தில் சுழல்தாரை எந்திரம் மீத்திறனுடன் செயல் புரியும்.)
*அலுமினியம் முதன்மைப் பொருளாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
*முழுவதும் தானியங்கு விமானியும், தானியங்கு வேகமாற்றியும் கொண்டது.
*முழுவதும் மின் கட்டுப்பாட்டால் செயல்படும் விமான கட்டுப்பாட்டு அமைப்புகள்.
*உயர்-அழுத்த நீர்ம கட்டுப்பாட்டு அமைப்புகள்
*சிக்கலான காற்றுத் தரவு கணினி உடையது. இக்கணினி காற்றியக்கவியல் அளவீடுகளை (மொத்த அழுத்தம், நிலை அழுத்தம்) தானியங்கு முறையில் கண்காணிக்கவும் தேவையான செயலிகளுக்கு அனுப்பவும் செய்யும்.
*முழுவதும் மின்-கட்டுப்பாட்டு முறையில் இயங்கும் மின்-வழி-தடை. (brake-by-wire)
*குருக்கச்சு சுழற்சியை நேர்த்தியாக்க, விமான உடற்பகுதியில் எரிபொருள் இருக்கும் இடம் புவியீர்ப்பு மையம் நிலைப்படுமாறு கட்டுப்படுத்தப்படுகிறது.
*சிலை வடிப்பு முறையில் ஒற்றை உலோக கட்டையிலிருந்து விமானத்தின் பகுதிகள் செய்யப்பட்டன. இதன் மூலம், தனித்தனி பகுதிகளின் எண்ணிக்கை குறைந்தது. அதே வேலையில் அவற்றின் உறுதி அதிகரித்தது, எடை குறைந்தது.
*துணைத் திறனகம் இல்லை. கான்கார்ட் பெரும் விமான நிலையங்களில் மட்டும் இயக்கப்படுமாதலால் அங்கே தரை புறப்படுவிப்பு வாகனங்கள் இருக்கும்.
 
==அழுத்த மையத்தின் நகர்வு==
 
எந்தவொரு விமானமும் அதனதன் நெருக்கடி [[மேக் எண்|மாக் எண்ணை]] விட அதிக வேகத்தில் செல்லத் துவங்கும்போது அவ்விமானத்தின் அழுத்த மையம் பின்னோக்கி நகரும். அவ்வாறு நகர்வதால் விமானத்தின் மூக்கு கீழ்செல்லுமாறு திருப்புவிசை செயல்படும். ஆகவே இந்த நகர்வை பெருமளவு கட்டுப்படுத்தம் வண்ணம் பொறியாளர்கள் இவ்விமான இறக்கையை வடிவமைத்தனர். இருப்பினும் 2 மீட்டர் அளவுக்கு இந்த நகர்வு இருந்தது. இது இறக்கைகளில் நேர்த்திக் கட்டுப்பாடுகள் அமைப்பதன் மூலம் கட்டுப்படுத்தப்படலாம். ஆனால், விமானம் மீயொலி வேகத்தில் பறக்கும் காரணத்தால் அத்தகைய வடிவமைப்பு மிக அதிக இழுவையை உருவாக்கியிருக்கும். ஆகையால், எரிபொருள் இருக்கும் இடத்தை முடுக்கத்தின் போது மாற்றுவதன் மூலம் நிறை மையம் மாற்றப்பட்டது. அவ்வாறு நிறை மையம் மாற்றப்படுவதன் மூலம் நேர்த்திக் கட்டுப்பாடு செய்யப்பட்டது.
 
==குறிப்புதவி==
{{reflist|2}}
 
 
==வெளி இணைப்புகள்==
{{commons|concorde|கான்கார்ட்}}
* [http://www.britishairways.com/concorde/index.html பிரிட்டிஷ் ஏர்வேஸ் கான்கார் பக்கம்]
* [http://www.braniffpages.com/concorde.html Braniff Airways Concorde page]
* [http://www.designmuseum.org/design/concorde Design Museum (UK) Concorde page]
* [http://www.nms.ac.uk/our_museums/museum_of_flight/concorde.aspx Concorde Experience at the National Museum of Flight, Scotland]
* [http://heritageconcorde.com/?page_id=3624 Save Concorde Alpha-Foxtrot]
* [http://www.life.com/image/first/in-gallery/24961/supersonic-tribute-to-concorde Supersonic: Tribute to Concorde] - a slideshow by ''[[Life magazine]]''
 
[[en:Concorde]]
{{Link FA|af}}
{{Link FA|hr}}
 
[[af:Concorde]]
[[ar:كونكورد]]
[[be:Канкорд]]
[[be-x-old:Канкорд]]
[[bs:Concorde]]
[[bg:Конкорд (самолет)]]
[[ca:Concorde]]
[[cs:Concorde]]
[[da:Concorde]]
[[de:Concorde]]
[[el:Κονκόρντ]]
[[es:Concorde]]
[[eo:Konkordo (aviadilo)]]
[[eu:Concorde]]
[[fa:کنکورد]]
[[fr:Concorde]]
[[gu:કોનકોર્ડ]]
[[ko:콩코드 (비행기)]]
[[hi:कॉनकॉर्ड]]
[[hr:Concorde]]
[[id:Concorde]]
[[ia:Concorde (aeroplano)]]
[[os:Конкорд]]
[[is:Concorde]]
[[it:Concorde]]
[[he:קונקורד]]
[[kn:ಕಾಂಕಾರ್ಡ್]]
[[ka:კონკორდი]]
[[lt:Concorde]]
[[li:Concorde]]
[[hu:Concorde]]
[[ml:കോൺകോർഡ് (വിമാനം)]]
[[ms:Concorde]]
[[nl:Concorde (vliegtuig)]]
[[ja:コンコルド]]
[[nap:Concorde]]
[[no:Aérospatiale-BAC Concorde]]
[[pms:Concorde]]
[[pl:Concorde]]
[[pt:Concorde]]
[[ro:Concorde]]
[[ru:Aérospatiale-BAC Concorde]]
[[scn:Concorde]]
[[sk:Concorde]]
[[sl:Concorde]]
[[sr:Конкорд (авион)]]
[[fi:Concorde]]
[[sv:Concorde]]
[[th:คองคอร์ด]]
[[tr:Concorde]]
[[uk:Конкорд]]
[[vi:Concorde]]
[[zh:协和飞机]]
 
[[பகுப்பு:வானூர்திகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கான்கோர்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது