ஏகலைவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
ஏகலைவன் ...
 
ஏகலைவன் என்பவன் வேடர் இனத்தைச் சேர்ந்தவன். வித்தையில் ஆர்வமுள்ள இவன் துரோணரிடம் வந்து தன்னைச் சீடனாக ஏற்று மன்னர்களுரிய சகல வித்தைகளையும் கற்றுத் தர வேண்டுகிறான். ""க்ஷத்தியர்களுக்குரிய வித்தையை வேடனான உனக்கு கற்றுத் தரமாட்டேன், என மறுத்து விட்டார் துரோணர். வேடனுக்கு தேவை விலங்குகளை வேட்டையாடும் அம்பெய்யும் கலை தான். மற்றவை எதற்கு என்பது துரோணரின் வாதம். ஏகலைவனுக்கு மிக்க வருத்தம். ஆனாலும், முயற்சியுடையவன் எதிலும் வெற்றி பெற்றே தீருவான். தன்னை துரோணர் ஜாதி துவேஷம் காட்டி ஒதுக்கி விட்டாரே என அவன் அவர் மீது கோபப்படவில்லை.
 
மரங்களுக்கு தீ வைக்கவில்லை. அவரது ஜாதிக்காரர்களை அடித்து உதைக்க வேண்டும் என்று எண்ணவில்லை. அவன் துரோணரைப் போலவே ஒரு மெழுகு சிலை செய்தான். அந்த சிலையை உயிருள்ள துரோணராகக் கருதி, அவரைத் தன் மானசீக குருவாக ஏற்று, துரோணர் அவரது சீடர்களுக்கு கற்றுக் கொடுக்கும் அத்தனை வித்தையையும் கற்றுத் தேறி விட்டான். பல ஆண்டுகள் கடந்தன. ஏகலைவனை மறந்தே போய் விட்டார். துரோணரின் முகமும் இவனுக்கு மறந்து விட்டது. ஒருநாள் நாய் ஒன்று வாயைத் திறக்க முடியாமல் அங்கே வந்து நின்றது. அதன் வாயில் அம்புத்தையல் போடப்பட்டிருந்தது. இதைப் பார்த்த அர்ஜூனன் ஆச்சரியப்பட்டு, ""குருவே! தாங்கள் இப்படி ஒரு அற்புத வித்தையை கற்றுத்தரவே இல்லையே. இது நேர்த்தியான ஒன்றாக உள்ளதே, என்றான்.
"https://ta.wikipedia.org/wiki/ஏகலைவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது