பண்பாட்டு மானிடவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி r2.5.2) (தானியங்கிமாற்றல்: es:Antropología social; cosmetic changes
வரிசை 1:
சமூக பண்பாட்டு மானிடவியல் எனவும் அழைக்கப்படும் '''பண்பாட்டு மானிடவியல்''' (''Cultural anthropology''), பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட நான்கு [[மானிடவியல்]] துறைகளுள் ஒன்றாகும். ஓரளவுக்கு இது, "[[பண்பாடு]]" "[[இயற்கை]]" என்னும் இரண்டுக்குமிடையிலான எதிர்த் தன்மையை அடிப்படையாகக் கொண்டு முன்னர் எழுந்த மேலை நாட்டு எழுத்தாக்கங்களுக்கு எதிரான விளைவு எனலாம். மேற்சொன்ன அடிப்படையில் சில மனிதர்கள் "இயற்கை நிலையில்" வாழ்வதாகக் கொள்ளப்பட்டது. மானிடவியலாளர்களோ பண்பாடு என்பது "மனித இயற்கை" என வாதிடுகின்றனர். அத்துடன், எல்லா மக்களும் தங்கள் அனுபவங்களை வகைப்படுத்தவும், அவ் வகைப்பாடுகளைக் குறியீட்டு அடிப்படையில் ஆக்கிக்கொள்ளவும், அத்தகைய குறியீட்டு வடிவங்களை மற்றவர்களுக்குக் கற்பிக்கவும் தகுதி உள்ளவர்களாக இருக்கின்றார்கள் என்கின்றனர் அவர்கள். பண்பாடு என்பது கற்றுக்கொள்ளப்படுவதால் வெவ்வேறு இடங்களில் வாழ்பவர்கள் வெவ்வேறு பண்பாடுகளை உடையவர்களாக இருக்கிறார்கள். பண்பாட்டினூடாகப் பரம்பரையியல் முறைகளுக்குப் புறம்பாக மக்கள் தாங்கள் வாழுமிடங்களுக்கு ஏற்புடையவர்களாகத் தங்களை ஆக்கிக் கொள்கிறார்கள் என்றும் அதனால் வெவ்வேறு சூழல்களில் வாழுகின்ற மக்கள் மாறுபட்ட பண்பாடுகளை உடையவர்களாக உள்ளார்கள் என்றும் மனிதவியலாளர்கள் எடுத்துக்காட்டுகிறார்கள். பெரும்பாலான மனிதவியற் கோட்பாடுகள் "இடஞ்சார்ந்த" மற்றும் "உலகம் தழுவிய" நிலைப்பாடுகளுக்கிடையேயான இழுநிலைபற்றிய மதிப்பீடு மற்றும் ஆர்வம் காரணமாகத் தூண்டப்பட்டவையே.
 
== சுருக்க வரலாறு ==
நவீன சமூக-பண்பாட்டு மனிதவியல் 19 ஆம் நூற்றாண்டின் "[[இன ஒப்பாய்வியல்|இன ஒப்பாய்விய]]"லிலிருந்து தோற்றம் பெற்றதே. [[இன ஒப்பாய்வியல்]] (Ethnology} மனித சமூகங்களின் ஒழுங்கமைந்த ஒப்பீட்டில் ஈடுபாடு கொண்டுள்ளது. [[எட்வர்ட் பர்னட் டெய்லர்|ஈ. பி. டெய்லர்]], [[ஜேம்ஸ் பிரேசர்|ஜே. ஜி. பிரேசர்]] போன்ற அறிஞர்கள், சமயப் பரப்புக் குழுவினர், பயணிகள் அல்லது குடியேற்ற நாட்டு அலுவலர்கள் திரட்டிய தகவல்களின் அடிப்படையிலேயே தங்கள் ஆய்வுகளை நடத்தினர். உலகின் வெவ்வேறு பகுதிகளில் வாழுகின்ற மக்கள் சில சமயம் ஒரே மாதிரியான நம்பிக்கைகளையும் செயற்பாடுகளையும் கொண்டிருப்பது ஏன் என்று அறிவதில் இன ஒப்பாய்வியலாளர் விசேட ஆர்வம் காட்டினர். [[19 ஆம் நூற்றாண்டு|19 ஆம் நூற்றாண்டின்]] இன ஒப்பாய்வியலாளர் கருத்து அடிப்படையில் இரு பிரிவினராகப் பிரிந்து இருந்தனர். [[கிராப்டன் எலியட் சிமித்]] (Grafton Elliot Smith) போன்றவர்கள், வெவ்வேறு குழுக்கள் மறைமுகமாகவேனும் ஏதோவொரு வகையில் ஒருவரிடமிருந்து மற்றவர் கற்றுக்கொண்டுள்ளனர், அதாவது [[பண்பாட்டுக் கூறு]]கள் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குப் பரவுகின்றன என்று வாதிட்டனர். வெவ்வேறு குழுவினருக்கு ஒரே மாதிரியான நம்பிக்கைகளையும் செயற்பாடுகளையும் சுதந்திரமாக உருவாக்கிக்கொள்ளக்கூடிய தகுதி உண்டு என்று மற்றவர்கள் கூறினர். மேற்படி "சுதந்திரமான புத்தாக்கம்" என்பதற்கு ஆதரவான [[லூயிஸ் ஹென்றி மோர்கன்]] போன்ற சிலர் இன்னும் மேலே சென்று [[பண்பாட்டுப் படிமலர்ச்சி]]யில் (cultural evolution) வெவ்வேறு குழுக்கள் ஒரே கட்டங்களினூடு செல்வதாலேயே இம்மாதிரியான ஒரே மாதிரித் தன்மை காணப்படுகின்றது என்றனர்.
 
[[20 ஆம் நூற்றாண்டு]] மனிதவியலாளர், எல்லா மனித சமூகங்களும் ஒரே கட்டங்களினூடாக அதே ஒழுங்கில் வளர்ச்சியடைகின்றன என்னும் கருத்தைப் பெரும்பாலும் நிராகரிக்கின்றனர். [[ஜூலியன் ஸ்டெவார்ட்]] (Julian Steward) போன்ற சில 20 ஆம் நூற்றாண்டின் இன ஒப்பாய்வியலாளர், ஒரே மாதிரியான சூழலில் ஒரேமாதிரியாகப் பழக்கப்படுவதாலேயே இவ்வாறான ஒருமைத் தன்மை உண்டாகின்றது என்கின்றனர். [[குளோட் லெவி-ஸ்ட்ராவுஸ்]] (Claude Lévi-Strauss) போன்ற வேறு சிலர், மேற்படி ஒரே மாதிரித் தன்மை மனித சிந்தனை அமைப்பின் அடிப்படை ஒற்றுமையைப் பிரதிபலிப்பதாக வாதிட்டனர்([[structuralism]]பார்க்கவும்).
வரிசை 12:
இன்று சமூக-பண்பாட்டு மானிடவியலில் இனவரைவியலே இன்னும் ஆதிக்கம் செலுத்துகிறது. இருந்தும், பல தற்கால சமுக-பண்பாட்டு மானிடவியலாளர், இடஞ்சார் பண்பாடுகளை கட்டுப்பட்டவையாகவும், தனித்தவையாகவும் கொள்ளும், இனவரைவியலின் முன்னைய மாதிரிகளை நிராகரிக்கிறார்கள். இந்த மானிடவியலாளர்கள், எவ்வாறான வழிகளில் வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் வாழ்க்கையை உணர்கிறார்கள் அல்லது விளங்கிக் கொள்கிறார்கள் என்பதையே இன்னும் கவனத்தில் எடுத்துக்கொண்டாலும், இவ்வாறான வழிகள்பற்றி, இடஞ்சார் சூழல் அடிப்படையில் மட்டும் விளங்கிக்கொள்ள முடியாது என்றும், ஒருவர் இதுபற்றி பிரதேசச் சூழலில் மட்டுமல்லாமல் உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார சூழல் அடிப்படையிலும் ஆராயவேண்டுமென்றும் வாதிடுகிறார்கள். Notable proponents of this approach are [[அர்ஜுன் அப்பாதுரை]], [[ஜேம்ஸ் கிளிபர்ட்]], [[ஜேன் கொமாரோப்]], [[ஜோன் கொமாரோப்]], [[ஜேம்ஸ் பர்குசன்]], [[அகில் குப்தா]], [[ஜோர்ஜ்]], [[சிட்னி மிண்ட்ஸ்]], [[மைக்கேல் தௌசிக்]], [[ஜேன் விண்செண்ட்]], மற்றும் [[எரிக் வூல்ப்]].
 
== தொடர்புள்ள தலைப்புக்கள் ==
* [[கலை மானிடவியல்]]
* [[ஊடக மானிடவியல்]]
வரிசை 35:
* [[நகர்ப்புற மானிடவியல்]]
 
== இவற்றையும் பார்க்கவும் ==
 
* [[எஸ்கிமோ]]
வரிசை 43:
* [[நாடோடி]]கள்
* [[அமெரிக்கர்]]
 
 
[[பகுப்பு:மானிடவியல்]]
வரி 57 ⟶ 56:
[[en:Cultural anthropology]]
[[eo:Kultura antropologio]]
[[es:Antropología culturalsocial]]
[[et:Kultuuriantropoloogia]]
[[fa:انسان‌شناسی فرهنگی]]
"https://ta.wikipedia.org/wiki/பண்பாட்டு_மானிடவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது