திலாப்பியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 71:
 
== வாழ்க்கைக் குறிப்புகள் ==
[[File:Fish types - Tamil Nadu210.ogv|150px|சிலேபிகெண்டை(Tilapia)|thumb|right]]
 
திலாப்பியா விரைவிலேயே பருவமடைந்து விடும் மீன் வகையாகும். சுமார் 30-40 கிராம் எடையை எட்டும் போதே பருவமடைந்து விடும். உடனடியாக இனப் பெருக்கத்தில் ஈடுபடும். தகுந்த தட்பவெப்பம் நிலவினால் பெண் திலாப்பியா பருவமடைந்த பிறகு ஆண்டொன்றுக்கு 8-12 தடவை முட்டையிடும். ஒவ்வொரு முறையும் 1000 முதல் 2000 முட்டைகளை இடும். பல மீன் வகைகளை ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை குறைவே என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே சமயத்தில் பத்திருபது இலட்சம் முட்டைகளை இடும் மீன்களும் உள்ளன. ஆனால், அப்படிப்பட்ட மீன்கள் ஆண்டிற்கு ஒரு முறையோ, அல்லது இரு முறையோதான் இனவிருத்தி செய்யும். முட்டைகளும் அளவில் சுமார் 1 மில்லி மீட்டரோ அதற்கு குறையாகவோ இருக்கும். திலாப்பியா முட்டையோ 3-4 மி.மீ இருக்கும். பொரித்து வரும் குஞ்சுகளும் பெரிதாக இருக்கும். பெற்றோர் மீன்களால் அவை நன்கு கவனிக்கப்படுவதால், அவற்றில் பெரும்பான்மை உயிர் தப்பி பெரிய மீன்களாகும். அதிக எண்ணிக்கையில் முட்டையிடும் மற்ற மீனினங்கள் பொதுவாக குஞ்சு பொரிப்பதையோ, குஞ்சு வளர்ச்சியையோ பொருட்படுத்துவதல்லி. எனவே சில குஞ்சுகளே உயிர் தப்பி பெரிய மீன்களாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/திலாப்பியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது