அட்லாண்டிக் சுவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 28:
{{போர்த்தகவல்சட்டம் நார்மாண்டி படையெடுப்பு}}
 
'''அட்லாண்டிக் சுவர்''' (''Atlantic Wall''; [[இடாய்ச்சு]]: ''Atlantikwall'') என்பது [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது [[மேற்கு ஐரோப்பா|மேற்கு]] வடக்கு ஐரோப்பாவில் [[நாசி ஜெர்மனி]] தனது கட்டுப்பாட்டிலிருந்த நாடுகளின் கடற்கரைகளில் கட்டிய அரண் நிலை அமைப்பினைக் குறிக்கிறது. [[பிரிட்டன்|பிரிட்டனிலிருந்த]] [[நேச நாடுகள்|நேச நாட்டுப்]] படைகள் நாசி கட்டுப்பாட்டு ஐரோப்பா மீது [[ஓவர்லார்ட் நடவடிக்கை|படையெடுப்பதைத்]] தடுப்பதற்காக இந்த அரண்நிலைகள் அமைக்கப்பட்டன.
 
[[சென் நசேர் திடீர்த்தாக்குதல்]] நிகழ்ந்ததன் நேரடி விளைவாக மார்ச் 23, 1942ல் [[ஹிட்லர்]] தனது “தலைவர் அரசாணை” (Führer Directive) எண் 40ஐப் பிறப்பித்தார். இந்த ஆணையில் மேற்கு ஐரோப்பியக் கடற்கரையில் ஒரு பலமான அரண் நிலை தொடர் அமைப்பினை உருவாக்க உத்தரவிட்டார். ஏப்ரல் 13, 1942ல் முதலில் கடற்படை மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் தளங்களைப் பாதுக்காக்கும் அரண்நிலைகளை உருவாக்கும்படி உத்தரவிட்டார். 1943 இறுதி வரை கடற்படைத் தளங்களையும், துறைமுகங்களையும் சுற்றி மட்டுமே அரண்நிலைகள் அமைக்கப்பட்டன. பின்னர் படிப்படியாக பிற கடற்கரைப் பகுதிகளுக்கும் அவை விரிவு படுத்தப்பட்டன. [[சிக்ஃபிரைட் கோடு|சிக்ஃபிரைட் கோட்டினை]] உருவாக்கிய [[டாட் அமைப்பு]] அட்லாண்டிக் சுவரையும் வடிவமைத்து உருவாக்கியது. ஜெர்மனியால ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்களும் [[போர்க்கைதி]]களும் இச்சுவரினைக் கட்ட கட்டாயத் தொழிலாளர்களாகப் பயன்படுத்தப்பட்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/அட்லாண்டிக்_சுவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது