1951–52 இந்தியப் பொதுத் தேர்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 47:
 
==பின்புலம்==
இத்தேர்தலில் 401 தொகுதிகளில் இருந்து 489 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவற்றுள் 314 ஒற்றை உறுப்பினர் தொகுதிகள். 86 தொகுதிகளிலிருந்து தலா இரண்டு உறுப்பினர்களும் ஒரு தொகுதியிலிருந்து மூன்று உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் தவிர 2 [[ஆங்கிலோ-இந்தியர்]]களும் மக்களவைக்கு நேரடியாக நியமனம் செய்யபட்டனர். இக்காலகட்டத்தில் இந்திய விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய இந்திய தேசியக் காங்கிரசு முன்னணிக் கட்சியாக விளங்கியது. 1946ல் அமைந்த நேருவின் முதல் இந்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த இரு அமைச்சர்கள் இத்தேர்தலின் போட்டியிட தனிக்கட்சி தொடங்கியிருந்தனர். [[சியாமா பிரசாத் முகர்ஜி]] [[பாரதிய ஜனசங்கம்|ஜனசங்கத்தையும்]] டாக்டர் [[அம்பேத்கர்]] பட்டியல் சாதியினரின் கூட்டமைப்பு (பின்னாளில் இந்தியக் குடியரசுக் கட்சி) ஆகிய கட்சிகளையும் தொடங்கி தனித்துப் போட்டியிட்டனர்.
 
காங்கிரசுக்கு முக்கிய எதிர்கட்சியாக [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி]] (சிபிஐ) இருந்தது. 1947-51 காலகட்டத்தில் ஆயுதப்புரட்சியின் மூலம் அதிகாரத்தைப் பிடிக்க கம்யூனிஸ்டுகள் முயன்றனர். [[தெலுங்கானா]], [[மலபார்]], [[மேற்கு வங்காளம்]] ஆகிய பகுதிகளில் அரசுக்கு எதிராக கம்யூனிஸ்டுகள் தொடங்கிய புரட்சிகளை மத்திய மாநில அரசுகள் முறியடித்து அடக்கி விட்டன. இதனால் 1951ல் வன்முறை வழியைக் கைவிட்டு தேர்தல் ஜனநாயகத்தை சிபிஐ தேர்ந்தெடுத்தது. இவை தவிர [[ஆச்சார்யா கிருபாளினி]]யின் கிசான் மசுதூர் பிரஜா (உழவர், உழைக்கும் மக்கள்) கட்சி [[ஜெயப்பிரகாஷ் நாராயணன்]] மற்றும் [[ராம் மனோகர் லோகியா]]வின் சோசலிசக் கட்சி ஆகியவையும் காங்கிரசை எதிர்த்தன. ஆனால் காங்கிரசின் பெரும் பலத்தின் முன் இவை பலவீனமாகவே இருந்தன.
 
==முடிவுகள்==
"https://ta.wikipedia.org/wiki/1951–52_இந்தியப்_பொதுத்_தேர்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது