இந்திய மாநில ஆளுநர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: ஆளுநர்: ஆளுநர் என்ற சொல் gouverneur என்ற ஃப்ரென்ச் மொழிச் சொல்லிலி...
வரிசை 1:
ஆளுநர்:
{{இந்திய அரசியல்}}
 
ஆளுநர் என்ற சொல் gouverneur என்ற ஃப்ரென்ச் மொழிச் சொல்லிலிருந்து பிறந்த governor என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாகும். ஆளுநர் என்றால் ஆட்சி செய்பவர் என்ற பொருள் ஆகும். இந்திய அரசியலில் ஆளுநர் என்ற சொல், இந்தியக் குடியரசுத் தலைவரைப் போல் மாநில அளவில் உள்ள ஒரு ஆட்சி செய்பவரைக் குறிக்கிறது. இந்திய அரசமைப்புச்சட்ட விதி 153-ன் படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருப்பார். இந்த விதி, ஒரே ஒரு நபர் இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட மாநிலஙளில் ஆளுநராக இருக்க முடியும் என்பதைக் கட்டுப்படுத்தாது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில், நடுவன் அரசு எடுக்கும் முடிவின் படி இந்தியக் குடியரசுத் தலைவரால் பணியமர்த்தப்படும் இந்த ஆளுநரே அந்தந்த மாநிலங்களின் அரசுத் தலைவர் ஆவார். ஆளுநருக்கு உதவ, மாநில அளவில், ஒரு முதல் அமைச்சர் அல்லது முதல்வர், தன் தலைமையின் கீழ் இயங்கும் அமைச்சரவையுடன் செயல்படுகிறார்.
 
முதல் அமைச்சர்:
'''இந்திய மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் ஆட்சிப் பகுதிகளின் துணை ஆளுநர்கள்'''
ஆளுநர்கள் [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும்|இந்தியாவின் மாநிலங்களிலும்]] துணை ஆளுநர்கள் இந்தியாவின் ஆட்சிப்பகுதிகளிலும் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெற்று கடமையாற்றுகின்றனர். ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை [[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசுத்தலைவரால்]] நியமிக்கப்படுகின்றார்.
 
இந்திய அரசமைப்புச்சட்ட விதி 163-ன் படி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு அமைச்சரவை இருக்கும். இந்த அமைச்சரவையின் தலைமை அமைச்சரே முதல் அமைச்சர் அல்லது முதல்வர் ஆவார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950-ன் படி தேர்தல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள், அவர்களின் தலைவராகத் தேர்ந்தெடுக்கும் ஒருவரே இப்படி முதல் அமைச்சர் ஆகிறார். இப்படித் தேர்ந்தெடுக்கப்படும் முதல் அமைச்சர் பின்பு தன் அமைச்சரவையை உருவாக்குகிறர். இந்த அமைச்சரவைதான் அம் மாநில அரசை இயக்குகிறது.
==ஆளுநர்கள்==
 
ஆளுநரின் பதவிகள் மாநில அளவில் சம்பிரதாயப் பதவிகளாகவே கருதப்படுகின்றது. ஆட்சியில் ஆளுநரோ துணை ஆளுநரோ பங்கெடுப்பதில்லை மாறாக இவை அம்மாநில முதலைமச்சர் மற்றும் அவரது அமைச்சரவையைச் சேர்ந்த அமைச்சர்களிடமே அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
 
===ஆளுநரின் செயல் அதிகாரங்கள்===
 
* ஆளுநர் மாநிலத்தில் செயலாட்சியரை நியமிப்பதற்கு மற்றும் நீக்குவதற்கு அதிகாரம் பெற்றவர்.
* ஆளுநர் மாநிலங்களில் உள்ள சட்டமன்றக் கீழவை மற்றும் மேலவைகளில் சட்டமியற்றும் அதிகாரம் கொண்டவர்.
* ஆளுநர் வரையரைக்குட்படுத்தபட்ட அதிகாரங்களின் படி மாநிலங்களில் அதிகாரங்களை செலுத்தலாம்.
* ஆளுநரின் ஊதியம் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றது.
 
==துணை நிலை ஆளுநர்கள்==
 
இந்திய அரசின் ஆட்சிப் பிரதேசங்களில் துணை நிலை ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். [[தில்லி]], [[அந்தமான் நிக்கோபார் தீவுகள்|அந்தமான் மற்றும் நிக்கோபார்த் தீவுகள்]] மற்றும் [[புதுவை]] ஆகிய பகுதிகளில் துணை நிலை ஆளுநர்கள் பதவி வகிக்கின்றனர். துணை ஆளுநர்கள் மாநில ஆளுநர்களைப் போன்ற படிநிலையைக் கொண்டவர்கள்.
 
==ஆட்சிப் பொறுப்பாளர்கள்==
 
இந்தியாவிலுள்ள ஆட்சிப் பிரதேசங்களில் [[தில்லி]], [[அந்தமான் நிக்கோபார் தீவுகள்|அந்தமான் மற்றும் நிக்கோபார்த் தீவுகள்]] மற்றும் [[புதுவை]] தவிர பிற இடங்களில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் ஆட்சிப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகின்றார்.
 
{{இந்திய மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் ஆட்சிப் பகுதிகளின் துணை ஆளுநர்கள்}}
 
[[பகுப்பு:இந்திய அரசு]]
 
[[en:Governors of states of India]]
[[hi:राज्यपाल]]
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_மாநில_ஆளுநர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது