தாரா சிக்கோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Xqbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 21:
|}}
 
'''தாரா சிக்கோ''' (''Dara Shikoh'', '''தாரா ஷிக்கோ''', {{lang-fa|''' دارا شكوه '''}}, [[மார்ச் 20]], [[1615]] – [[ஆகத்து 30]], [[1659]]) [[முகலாயப் பேரரசு|முகலாய]]ப் பேரரசன் [[ஷாஜகான்|ஷாஜகானுக்கும்]] [[மும்தாஜ் மகால்|மும்தாஜ் மகாலுக்கும்]] பிறந்த மூத்த மகனும், முடிக்குரிய இளவரசனும் ஆவான். [[பாரசீகம்|பாரசீக]] மொழியில் தாரா ஷிகோ என்றால் “புகழ் வாய்ந்தவன்” என்று பொருள். மன்னர் ஷாஜஹானும், உடன்பிறந்த ஜஹனாரா பேகமும் முகலாய ஆட்சிக்கு வாரிசாக தாரா சிக்கோவைத்தான் எண்ணியிருந்தார்கள். ஆனால், ஒரு கொடூரப் போருக்கு பின்னர், தாரா ஷிகோவை அவனுடைய இளைய சகோதரன் [[அவுரங்கசீப்]] தோற்கடித்து தலையை கொய்தான்<ref>"India was at a crossroads in the mid-seventeenth century; it had the potential of moving forward with Dara, or of turning back to medievalism with Aurangzeb." {{cite book |title=The Mughal Throne : The Saga of India's Great Emperors |last=Eraly |first=Abraham |authorlink= |year=2004 |publisher=Phoenix |location=London |isbn=0-75381-758-6 |pages=336}}<br />"Poor Dara!....thy generous heart and enlightened mind had reigned over this vast empire, and made it, perchance, the garden it deserves to be made". William Sleeman (1844), [http://www.archive.org/stream/ramblesrecollect02sleeuoft/ramblesrecollect02sleeuoft_djvu.txt E-text of ''Rambles and Recollections of an Indian Official''] p.272</ref><ref>[http://www.britannica.com/EBchecked/topic/151421/Dara-Shikoh Dara Shikoh] [[Britannica.com]].</ref><ref>[http://books.google.com/books?id=H-k9oc9xsuAC&pg=PA194&dq=Dara+Shikoh&as_brr=0#PPA195,M1 Dara Shikoh] ''Medieval Islamic Civilization: An Encyclopedia'', by Josef W. Meri, Jere L Bacharach. Routledge, 2005. ISBN 0-415-96690-6. ''Page 195-196''.</ref>.
 
பொருளடக்கம்
 
1. முடிக்கான போராட்டமும் மரணமும்
2. அறிவு வேட்கை
3. கலைகளின் புரவலர்
4. மேற்கோள்கள்
 
முடிக்கான போராட்டமும் மரணமும்
 
1657-ஆம் ஆண்டு ஷாஜகான் உடல் நோய்வாய்ப்பட்ட சமயம், அரியணையை கைப் பற்ற அவரின் நான்கு புதல்வர்களிடையே கடும் போராட்டம் ஏற்பட்டது. இவர்களில் தாரா சிக்கோவிற்கும், ஔரங்கசீபிற்குமே அதிக வாய்ப்பிருந்தது. இப்போராட்டத்தின் முதற்கட்டமாக, பெங்காலின் மன்னனாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டான் ஸாஜஹானின் இரண்டாவது மகன் ஷா ஷூஜா. மற்றொரு பக்கம், தாரா சிக்கோ, ஷாஜகானின் மூன்றாவது மகனான ஔரங்சீபின் மீது படையெடுத்தான்.
 
உடல் தேறிய ஷாஜகானின் ஆதரவு இருந்தபோதிலும், ஆக்ராவிற்கு 13 கிலோமீட்டர் தொலைவிலிலுள்ள அமோகர் போர்க் களத்தில் 1658 ஜூன் 8-ஆம் தேதி தாரா சிக்கோவை ஔரங்சீப் தோற்கடித்தான். தோல்விக்கு பிறகு ஆதரவு தேட முயன்ற தாரா சிக்கோ, சிலரின் வஞ்சக சூழ்ச்சியால் கைது செய்யப்பட்டு ஔரங்கசீபிடம் ஒப்படைக்கப்பட்டான். சங்கிலியால் பிணைக்கப்பட்டு, தலை நகரில் அழுக்கேறிய யானையின் மீது கைதியாக இழுத்துச் செல்லப்பட்ட தாரா சிக்கோ, ஔரங்கசீபின் அடிவருடிகளால் 1659 ஆகத்து 30-ஆம் தேதி கொடூர முறையில் கொல்லப்பட்டான். ஔரங்கசீப், இறந்துப் போன உடலிலிருந்து தலையை வெட்டி, அவரது தந்தையிடம் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
 
அறிவு வேட்கை
 
தாரா சிக்கோ, மென்மையும், இறையுணர்வும் நிறைந்த சூஃபி அறிஞராக திகழ்ந்தார். அவர் இந்துக்கள், முஸ்லீம்களிடையே மத நல்லிணக்கத்தையும், கூடி வாழ்தலையும் வலியுறுத்தினார். தீவிர அடிப்படைவாதியான ஔரங்கசீபை தாரா சிக்கோ வெற்றிக் கொண்டிருந்தால், இந்தியா எவ்வளவு மாறுபாடு அடைந்திருக்குமென்று வரலாற்று ஆய்வாளர்கள் ஊகம் கூறுகின்றனர். தாரா சிக்கோ லாஹூர் நகரின் புகழ்ப் பெற்ற காதிரி சுஃபி ஞானியான மையன் மிர் அவர்களின் மாணாக்கராவார். இதற்கு மையன் மிரின் சீடரான முல்லா ஷா பதக்ஷி உதவினார்.
 
தாரா சிக்கோ, இந்து மதத்திற்கும், இஸ்லாம் மதத்திற்குமிடையே உள்ள பொதுத்தன்மையை காண மிகுந்த முயற்சி மேற்கொண்டார். இந்த முயற்சியின் விளைவாக, இஸ்லாமிய அறிஞர்கள் படிப்பதற்கென்று, 50 சமசுகிருத உபநிடதங்களை பாரசீகத்திற்கு மொழிப்பெயர்த்தார். அவரது மிகவுமறிந்த படைப்பான மஜ்ம-உல்-பஹ்ரெயின் (இரு பெருங்கடல்களின் சங்கமம்), சூஃபியிசத்திற்கும், இந்து மதத்தின் ஒரு தெய்வ கோட்பாட்டிற்குமிடையே உள்ள பொதுத்தன்மையை காண முயன்றுள்ளது.
 
கலைகளின் புரவலர்
 
தனது சகோதரன் ஔரங்கசீப் முகஞ்சுழித்தாலும், தாரா சிக்கோ, நுண் கலைகள், இசை, நாட்டியம் ஆகியவைகளின் புரவலராகத் திகழ்ந்தார். சொல்லப் போனால், அவரது ஓவியங்கள் விவரமாகவும், ஓவியக் கலைஞர்களின் ஓவியங்களுக்கு நிகரானதாகவும் திகழ்கின்றன. 1630 –களில் துவங்கிஅவர் இறக்கும் வரை படைத்த எழுத்துக்களும், ஓவியங்களும் சேகரிக்கப்பட்டு தாரா சிக்கோவின் தொகுப்பு என்றழைக்கப்படுகிறது. இந்த தொகுப்பை அவரது மணைவி நதிரா பானுவிற்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. அவர் இறந்தபின், தாரா சிக்கோவின் தொகுப்பு முகலாய அரசு நுலகத்திற்குள் எடுத்துக் கொள்ளப்பட்டது. தாரா சிக்கோவின் படைப்புகளின் மீதான அவரது அடையாளங்களை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், எல்லா படைப்புகளும் இரையாகவில்லை. தாரா சிக்கோவின் பெயரைத் தாங்கி அவரது பல படைப்புகள் இன்னும் காலத்தை வென்று நிற்கின்றன.
 
<ref>"India was at a crossroads in the mid-seventeenth century; it had the potential of moving forward with Dara, or of turning back to medievalism with Aurangzeb." {{cite book |title=The Mughal Throne : The Saga of India's Great Emperors |last=Eraly |first=Abraham |authorlink= |year=2004 |publisher=Phoenix |location=London |isbn=0-75381-758-6 |pages=336}}<br />"Poor Dara!....thy generous heart and enlightened mind had reigned over this vast empire, and made it, perchance, the garden it deserves to be made". William Sleeman (1844), [http://www.archive.org/stream/ramblesrecollect02sleeuoft/ramblesrecollect02sleeuoft_djvu.txt E-text of ''Rambles and Recollections of an Indian Official''] p.272</ref><ref>[http://www.britannica.com/EBchecked/topic/151421/Dara-Shikoh Dara Shikoh] [[Britannica.com]].</ref><ref>[http://books.google.com/books?id=H-k9oc9xsuAC&pg=PA194&dq=Dara+Shikoh&as_brr=0#PPA195,M1 Dara Shikoh] ''Medieval Islamic Civilization: An Encyclopedia'', by Josef W. Meri, Jere L Bacharach. Routledge, 2005. ISBN 0-415-96690-6. ''Page 195-196''.</ref>.
 
1657-ஆம் ஆண்டு ஷாஜஹான் உடல் நோய்வாய்ப்பட்ட சமயம், அரியணையை கைப் பற்ற அவரின் நான்கு புதல்வர்களிடையே கடும் போராட்டம் ஏற்பட்டது. இவர்களில் தாரா ஷிகோவிற்கும், ஔரங்கசீபிற்குமே அதிக வாய்ப்பிருந்தது. இப்போராட்டத்தின் முதற்கட்டமாக, பெங்காலின் மன்னனாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டான் ஸாஜஹானின் இரண்டாவது மகன் ஷா ஷூஜா. மற்றொரு பக்கம், தாரா ஷிகோ, ஷாஜஹானின் மூன்றாவது மகனான ஔரங்சீபின் மீது படையெடுத்தான்.
"https://ta.wikipedia.org/wiki/தாரா_சிக்கோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது