"1 தெசலோனிக்கர் (நூல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

303 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
சேர்க்கை
சி (சேர்க்கை)
 
சி (சேர்க்கை)
[[Image:Minuscule 699 (GA) folio 18.jpg|thumb|"1 தெசலோனிக்கர்" என்னும் தலைப்பிட்ட கிரேக்க சிற்றெழுத்துப் படி, எண் 699. காலம்: கி.பி. 11ஆம் நூற்றாண்டு]]
 
{{புதிய ஏற்பாடு நூல்கள்}}
'''1 தெசலோனிக்கர்''' அல்லது '''தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம்''' (''First Letter [Epistle] to the Thessalonians'')
==1 தெசலோனிக்கர் திருமுகம்: பவுல் எழுதிய முதல் மடல்==
 
புனித [[பவுல் (திருத்தூதர்)|பவுல்]] எழுதியவற்றுள் இதுவே முதலாவது [[திருமுகங்கள்|திருமுகம்]]. அவர் இதனைக் கி.பி. 51ஆம் ஆண்டில் எழுதினார். தொடக்ககால மடலாக இருப்பதால் இதில் [[இறையியல்]] வளர்ச்சி மிகுதியாக இடம் பெறவில்லை. இருப்பினும், [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|உயிர்பெற்றெழுதல்]], ஆண்டவரின் இறுதி வருகை ஆகியவை பற்றிய இதன் கருத்துக்கள் முக்கியமானவை.
 
==1 தெசலோனிக்கர் எழுதப்பட்ட சூழலும் நோக்கமும்==
தாமே அங்குச் செல்ல முடியாத நிலையில் பவுல் தமக்குப் பதில் திமொத்தேயுவை அனுப்பினார். திமொத்தேயு தெசலோனிக்கா சென்று திரும்பி வந்தபோது நல்ல செய்தி கொண்டு வந்தார். அதாவது அங்குள்ள சீடர்கள் இன்னல்களுக்கிடையே தளரா ஊக்கத்துடன் கிறிஸ்தவராகத் தொடர்ந்து நிலைத்திருக்கின்றனர் என்பதை அவர் பவுலிடம் தெரிவித்தார். அத்துடன், இறந்துபோனவர்கள் குறித்து அவர்கள் கவலை கொண்டிருக்கிறார்கள் என்பதையும் எடுத்துரைத்தார்.
 
நல்ல செய்தி அறிந்து மகிழ்ந்த பவுல் தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் தெசலோனிக்கரின் தவறான கண்ணோட்டங்களையுக்கண்ணோட்டங்களைக் களையவும் விரும்பிக் கொரிந்திலிருந்து இத்திருமுகத்தை எழுதினார்.
 
==மடலின் உள்ளடக்கம்==
 
இத்திருமுகத்தில் பவுல் தெசலோனிக்க மக்களுடன் கொண்டிருந்த உறவு, அவர்கள்மேல் கொண்டிருந்த அக்கறை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறார்; அங்குள்ள கிறிஸ்தவர்களை ஊக்கப்படுத்துகிறார்; அவர்கள் [[இயேசு கிறித்து|கிறிஸ்துவிடம்]] கொண்டிருந்த அன்புக்காகவும் நம்பிக்கைக்காகவும் நன்றி கூறுகிறார்; அவர்களுடன் இருந்தபோது அவர் வாழ்ந்த வாழ்வை நினைவூட்டுகிறார்; கிறிஸ்துவின் வருகை குறித்த ஐயப்பாட்டிற்கு விடையளிக்கிறார்; "கிறிஸ்துவின் வருகைக்குமுன் இறந்தவர்கள், [[இயேசு கிறித்து|கிறிஸ்து]] வரும்போது நிலைவாழ்வில் பங்குபெறுவார்களா? எப்போது கிறிஸ்து வருவார்?" போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லும் நேரத்தில் கிறிஸ்துவின் வருகையை நம்பிக்கையுடன் எதிர்பார்த்து அமைதியாக உழைக்கப் பணிக்கிறார்.
 
[[இயேசு கிறித்து|கிறிஸ்து]] திரும்ப வருதல் எந்த நாளில் நிகழும் எனத் தெரியாததால், அவரது வருகைக்காக எப்போதும் தயாராயிருக்குமாறு வேண்டுகிறார்.
 
{{பவுல் எழுதிய திருமுகங்கள்}}
 
 
==1 தெசலோனிக்கர் திருமுகத்திலிருந்து ஒரு பகுதி==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/671689" இருந்து மீள்விக்கப்பட்டது