பாரிசின் விடுவிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
+
வரிசை 23:
'''பாரிசின் விடுவிப்பு''' (''Liberation of Paris'') [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] [[மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்) |மேற்குப் போர்முனையில்]] நடந்த ஒரு சண்டை. [[ஓவர்லார்ட் நடவடிக்கை]]யின் ஒரு பகுதியான இதில் [[நாசி ஜெர்மனி]]யின் ஆக்கிரமிப்பிலிருந்த [[பிரான்சு|பிரான்சின்]] தலைநகர் [[பாரிசு|பாரிசை]] [[நேச நாடுகள்|நேச நாட்டுப்]] படைகள் தாக்கிக் கைப்பற்றின. இது '''பாரிசு சண்டை''' என்றும் அறியப்படுகிறது.
 
==பின்புலம்==
1940ம் ஆண்டு பிரான்சை நாசி ஜெர்மனி தாக்கிக் [[பிரான்சு சண்டை|கைபற்றியது]]. அடுத்த நான்காண்டுகள் பிரான்சு ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்தது. இக்காலகட்டத்தில் அங்கு பல உள்நாட்டு எதிர்ப்பு இயக்கங்கள் உருவாகி ஜெர்மானியர்களுக்கு எதிராகப் போராடி வந்தன. ஜூன் 6, 1944ம் தேதி நேச நாட்டுப் படைகள் பிரான்சு மீது கடல் வழியாகப் [[ஓவர்லார்ட் நடவடிக்கை|படையெடுத்தன]]. இரு மாதங்கள் கடும் சண்டைக்குப் இன்னர் [[செய்ன் ஆறு|செய்ன் ஆற்றுக்கு]] மேற்கிலிருந்த ஜெர்மானியப் படைகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டு, பிரான்சின் பல பகுதிகள் நேச நாட்டு வசமாகின. ஆகஸ்ட் மாதத்தில் [[ஃபலேசு இடைப்பகுதி]] சண்டைக்குப் பின்னர், பாரிசைக் கைப்பற்றுவது சாத்தியமானது.
 
வரி 28 ⟶ 29:
 
ஆனால் நாடுகடந்த சுதந்திர பிரெஞ்சு அரசாங்கம் மற்றும் படைகளின் தலைவர் ஜெனரல் [[சார்லஸ் டி கோல்]] இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அரசியல் காரணங்களுக்காகவும், ஒரு பெரும் பரப்புரை வெற்றியினை (propoganda victory) பெறுவதற்காகவும் பாரிசினை உடனுக்குடன் கைப்பற்ற விரும்பினார். பிரெஞ்சு எதிர்ப்புப் படையினருள் கம்யூனிஸ்டுகள், கோலிஸ்டுகள் என பல கோஷ்டிகள் இருந்தன. இவற்றுள் யார் பாரிசை விடுவிக்கிறார்களோ, அவர்களுக்கு பிரெஞ்சு மக்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். பொருக்குப் பின்னால் ஏற்படப்போகும் பிரெஞ்சு அரசினைக் கட்டுப்படுத்தும் வாய்ப்பும் கிட்டுமென்பதால், பாரிசை விடுவிக்க பிரெஞ்சு எதிர்ப்புப் படைகள் முனைந்தன.
 
==விடுவிப்பு==
இட்லரின் உத்தரவின் பேரில் பாரிசினைத் தகர்க்க அதன் ஜெர்மானிய தளபதி வோன் சோல்டிட்சு முயற்சிகளைத் தொடங்கினார். இதனால் எச்சரிக்கையடைந்த பிரெஞ்சு எதிர்ப்புப் படை, பாரிசினை மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கியது.
ஆகஸ்ட் 15ம் தேதி பாரிசில் எதிர்ப்பு படைகள் ஒரு முழு வேலை நிறுத்ததைத் தொடங்கின. மூன்று நாட்களுக்குப் பின் இது ஒரு முழுப் புரட்சியாக மாறியது. ஆகஸ்ட் 19ம் தேதி பிரெஞ்சு எதிர்ப்புப் படைகள் பாரிசு நகர் முழுவதும் ஜெர்மானியப் பாதுகாவல் படைகளைத் தாக்கின. பாரிசு நகர வீதிகளில் சாலைத் தடைகள் உருவாக்கபப்ட்டன, மரங்கள் வெட்டப்பட்டு சாலைகளின் குறுக்கே இடப்பட்டன. சாலையோர நடைபாதைகள் தோண்டப்பட்டு அக்கற்களைக் கொண்டு சாலைத் தடைகளைப் பலப்படுத்தப் பட்டன. பாரிசில் எதிர்ப்புப் படையினரின் இடைக்கால அரசு அறிவிக்கப்பட்டு, ஜெர்மானியர்களை எதிர்க்க ஆயுதங்களை ஏந்துமாறு பொதுமக்களுக்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. ஆகஸ்ட் 19ம் தேதி [[சுவீடன்|சுவீடியத் தூதரின்]] உதவியுடன் இரு தரப்பினரும் இடையே தற்காலிகப் போர் நிறுத்ததிற்கு ஒப்புக்கொண்டனர்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பாரிசின்_விடுவிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது