யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
==தோற்றுவாய்==
 
யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கங்களின் தோற்றுவாய் பண்டைக்காலத் தமிழர் உணவுப் பழக்கங்களாகவே இருக்கும் எனலாம். இது குறித்த ஆய்வுகள் எதுவும் நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனாலும், பல நூற்றாண்டுகளாகவே யாழ்ப்பாணத்துக்கு, தென்னிந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நேரடிக் குடியேற்றங்கள் இருந்து வந்துள்ளதுடன், பண்பாட்டுத் தொடர்புகளும், வணிகத் தொடர்புகளும் தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளன. இதனால், [[தமிழ் நாடு]] தவிர்ந்த பிற தென்னிந்தியப் பண்பாட்டுக் கூறுகளையும், யாழ்ப்பாண உணவுப் பழக்கங்களில் காண முடிகின்றது. இதைவிட, இலங்கையின் பெரும்பான்மை இனமான சிங்களவரின் பண்பாட்டுத் தாக்கங்கள் சிலவும் இருக்கவே செய்கின்றன. பிற்காலத்தில் பல நூற்றாண்டுகளாக யாழ்ப்பாணத்தை ஆண்டுவந்த [[இலங்கையில்யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி|போத்துக்கீசர்]], [[இலங்கையில்யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சி|ஒல்லாந்தர்]], [[இலங்கையில்யாழ்ப்பாணத்தில் ஆங்கிலேயர் ஆட்சி|ஆங்கிலேயர்]] போன்றவர்களின் காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட உணவு வகைகளும், பழக்க வழக்கங்களும் கூட யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கங்களில் கலந்துள்ளதைக் காணமுடியும்.
 
இவற்றைவிட யாழ்ப்பாணத்துப் புவியியல் அமைப்பு, வளங்கள், பல்வேறு வகையான வேளாண்மை உற்பத்திகளுக்கான வாய்ப்புக்கள், உணவுப்பொருள் தொடர்பான வணிகம் என்பனவும், யாழ்ப்பாணத்து [[நில உடைமை]] மற்றும் [[நிலப்பயன்பாடு|நிலப்பயன்பாட்டு]] நிலைமைகளும் உணவுப் பழக்கவழக்கங்களில் தாக்கங்களை உண்டாக்கும் காரணிகளாக இருக்கின்றன. இவற்றுடன், சமய நம்பிக்கைகளும் இன்னொரு முக்கிய காரணியாகும்.
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாணத்து_உணவுப்_பழக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது