யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
இவற்றைவிட யாழ்ப்பாணத்துப் புவியியல் அமைப்பு, வளங்கள், பல்வேறு வகையான வேளாண்மை உற்பத்திகளுக்கான வாய்ப்புக்கள், உணவுப்பொருள் தொடர்பான வணிகம் என்பனவும், யாழ்ப்பாணத்து [[நில உடைமை]] மற்றும் [[நிலப்பயன்பாடு|நிலப்பயன்பாட்டு]] நிலைமைகளும் உணவுப் பழக்கவழக்கங்களில் தாக்கங்களை உண்டாக்கும் காரணிகளாக இருக்கின்றன. இவற்றுடன், சமய நம்பிக்கைகளும் இன்னொரு முக்கிய காரணியாகும்.
 
காலத்துக்குக் காலம் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆட்சிளர்களின், [[வேளாண்மை]] மற்றும் [[வணிகம்]] தொடர்பான [[கொள்கை]]களும், போர் முதலியவற்றினால், ஏற்றுமதி செய்யும் நாடுகளிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யமுடியாதிருந்த நிலைமைகளும்கூட உள்ளூர் உணவுப் பழக்கங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உண்டாக்கியுள்ளன.
 
==அன்றாட உணவுப்பழக்க வேறுபாடுகளுக்கான பின்னணிகள்==
வரிசை 19:
* சமூக அந்தஸ்த்து
* வாழிடச் சூழல்
 
==அன்றாட உணவு வகைகள்==
 
யாழ்ப்பாணத்தின் முதன்மை உணவு, ஏனைய ஆசிய நாடுகளில் இருப்பதைப் போல, [[அரிசி]]ச் [[சோறு]] ஆகும். அரிசி, யாழ்ப்பாணக் குடாநாட்டில் குறைந்த அளவிலும், தலை நில வன்னிப் பகுதியில் பெருமளவும் நீண்டகாலமாகவே செய்கை பண்ணப்பட்டு வந்தது. ஐரோப்பியப் படைகளின் ஆக்கிரமிப்பும், அக்காலங்களில் அடிக்கடி ஏற்பட்ட [[காலரா]] முதலிய கொள்ளை நோய்களும், [[வன்னி]]க் குடியேற்றங்களைப் பெருமளவில் இல்லாது ஒழித்ததுடன், பெருமளவில் அரிசியை இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும் அரிசியே தொடர்ந்தும் விருப்பத்துக்குரிய உணவாக இருந்து வந்தது.
 
உலக யுத்தக்காலத்தில், அரிசிக்கு வெளிநாட்டுச் சந்தைகளில் நிலவிய தட்டுப்பாடு காரணமாக, அப்போதைய ஆங்கிலேய அரசு, [[கோதுமை]]யை அறிமுகப்படுத்தியது. இது அரிசியின் முதன்மை நிலையை மாற்றாவிட்டாலும், பின்வந்த காலங்களின் யாழ்ப்பாண உணவு முறைகளில் நிலையான தாக்கங்களை ஏற்படுத்தியது எனலாம். யாழ்ப்பாணத்தவர்களால் ''[[பாண்]]'' (bread) என்று அழைக்கப்படும் கோதுமை உணவு அப்பிரதேச உணவில் முக்கிய இடம் பெற்றது அதன் பின்னரேயாகும். அது மட்டுமன்றி, [[சிற்றுண்டி]]கள் செய்வதில் பயன்பட்ட அரிசி மாவுக்கும், [[குரக்கன்]] முதலிய சிறு தானியங்களுக்கும், மாற்றாகக் கோதுமை மா (மாவு) பயன்படத் தொடங்கியது.
 
யாழ்ப்பாணத்து உணவு வகைகளைப் பின்வருமாறு வகுக்கலாம்.
 
* முதன்மை உணவு:
** சோறும் கறியும்
 
* அன்றாடம் பயன்படக்கூடிய துணை உணவு வகைகள்
 
** [[இடியப்பம்]]
** [[பிட்டு]]
** [[அப்பம்]]
** [[தோசை]]
** அவித்த கிழங்கு வகைகள்
** [[பாண்]] (கோதுமை ரொட்டி)
 
* பனம் பண்டங்கள்
 
** [[ஒடியல்]] மா உணவுகள்
** [[ஒடியற் கூழ்]]
 
* பருகுவதற்கானவை
 
** பழஞ்சோற்றுத் தண்ணீர்
** பால் / மோர்
** [[கருப்பநீர்]]
** [[இளநீர்]]
** [[தேநீர்]]
** [[காப்பி]]
** [[கஞ்சி]]
 
* பழவகைகள்
 
** [[மாம்பழம்]]
** [[பலாப்பழம்]]
** [[வாழைப்பழம்]]
** [[தோடம்பழம்]]
 
* இனிப்பு வகைகள் மற்றும் பிற சிற்றுண்டிகள்
 
** பயத்தம் பணியாரம்
** மோதகம் / கொழுக்கட்டை
** அரியதரம்
** அவல்
** சுண்டல்
** பால்ரொட்டி
** முருக்கு
 
==உணவுக்கான மூலப்பொருட்களும் சேர்மானங்களும்==
 
* அரிசி மற்றும் சிறுதானிய வகைகள்
* பருப்புவகை
* காய்கறிகள்
* கீரை வகைகள்
* எண்ணெய் வகை
* சுவையூட்டற் பொருட்கள்
* இனிப்பூட்டற் பொருட்கள்
* வாசனைப் பொருட்கள்
 
 
[[பகுப்பு: யாழ்ப்பாணம்]]
[[பகுப்பு: உணவு]]
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாணத்து_உணவுப்_பழக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது