யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 26:
உலக யுத்தக்காலத்தில், அரிசிக்கு வெளிநாட்டுச் சந்தைகளில் நிலவிய தட்டுப்பாடு காரணமாக, அப்போதைய ஆங்கிலேய அரசு, [[கோதுமை]]யை அறிமுகப்படுத்தியது. இது அரிசியின் முதன்மை நிலையை மாற்றாவிட்டாலும், பின்வந்த காலங்களின் யாழ்ப்பாண உணவு முறைகளில் நிலையான தாக்கங்களை ஏற்படுத்தியது எனலாம். யாழ்ப்பாணத்தவர்களால் ''[[பாண்]]'' (bread) என்று அழைக்கப்படும் கோதுமை உணவு அப்பிரதேச உணவில் முக்கிய இடம் பெற்றது அதன் பின்னரேயாகும். அது மட்டுமன்றி, [[சிற்றுண்டி]]கள் செய்வதில் பயன்பட்ட அரிசி மாவுக்கும், [[குரக்கன்]] முதலிய சிறு தானியங்களுக்கும், மாற்றாகக் கோதுமை மா (மாவு) பயன்படத் தொடங்கியது.
 
==யாழ்ப்பாணத்து உணவு வகைகளைப் பின்வருமாறு வகுக்கலாம்.வகைகள்==
 
* '''===முதன்மை உணவு''': யாழ்ப்பாணத்து முதன்மை உணவு சோறும் கறியும் ஆகும். யாழ்ப்பாணத்தவர், நெல்லை அவித்துக் (புழுக்கி) குற்றிப் பெறப்படும் புழுங்கல் அரிசிச் சோற்றையே அதிகம் விரும்புகிறார்கள். இதைத் தவிர, நெல்லை அவிக்காமல் குற்றும்போது கிடைக்கும், சிவப்புப் பச்சை அரிசி, வெள்ளைப் பச்சை அரிசி<ref>இங்கே ''பச்சை என்பது அவிக்காதது (புழுக்காதது) என்பதைக் குறிக்கிறது நிறத்தை அல்ல.</ref> என்பவற்றிலும் சோறு ஆக்குவது உண்டு. தமிழ் நாட்டில் செய்வதுபோல, அரிசியிலிருந்து, புளியோதரை, சாம்பார்சாதம், தயிர்சாதம் என்னும் உணவு வகைகள் யாழ்ப்பாணத்தில் பெரும்பாலும் செய்யப்படுவதில்லை.
 
சோற்றுடன் சேர்த்துச் சாப்பிடும் கறி வகைகள் மரக்கறி வகைகளாகவோ, மாமிச உணவு <ref>யாழ்ப்பாணத்தில் சைவ உணவு வகைகளை ''மரக்கறிச் சாப்பாடு'' என்றும், அசைவ உணவு வகைகளை ''மச்சச் சாப்பாடு'' என்றும் குறிப்பிடுவது வழக்கம்.</ref>வகைகளாகவோ இருக்கலாம்.
 
====கறிவகைகள்====
சோற்றுடன் சேர்த்துச் சாப்பிடுவதற்காக காய்கறிகள், இலைவகைகள், மீன், மாமிசம் போன்றவற்றைப் பயன்படுத்தி ஆக்கப்படுபவை கறிகள் எனப்படுகின்றன. யாழ்ப்பாணத்துக் கறிவகைகளைப் பலவகையாகப் பகுத்துக் காணமுடியும். இவற்றுள் முக்கியமானவை பின்வருமாறு.
* '''பருப்புக் கடையல்''': தோல் அகற்றப்பட்ட, பயறு, மசூர்ப்பருப்பு, துவரம்பருப்பு போன்றவற்றில் ஒன்றைக் குறைந்த நீரில் அவித்துத் [[தேங்காய்ப் பால்]], [[உப்பு]] மற்றும் சேர்மானங்களுடன், சிறிது நீர்ப்பற்றுள்ளதாகச் செய்யப்படும் கறி இது. சைவச் சாப்பாட்டில் இது முக்கிய இடம் வகிக்கும் ஒரு கறியாகும்.
* '''குழம்பு''': [[கத்தரிக்காய்]], [[வாழைக்காய்]], [[உருளைக்கிழங்கு]],[[பூசனிக்காய்]], [[பாகற்காய்]] போன்ற காய், [[கிழங்கு]] வகைகளில் ஒன்றை முதன்மையாகச் சேர்த்து, தேங்காய்ப் பால், [[மிளகாய்த்தூள்]], [[பழப்புளி]], உப்பு போன்ற சேர்மானங்களுடன் ஆக்கப்படுவது இது. மிளாகாய்த் தூளுக்குரிய சிவப்பு நிறத்தில், கூழ் போன்ற நிலையில் இருக்கும். [[உறைப்பு]]ச் சுவை கொண்டது.
* '''வரட்டல் தூள் கறி''' (கூட்டுக்கறி): குழம்பு ஆக்குவதற்கான சேர்மானங்களே இதற்கும் பயன்படுகின்றன. ஆனால், கறி [[கூழ்]] நிலையில் இல்லாமல் மேலும் வரண்டு, பசை போன்ற கூட்டில் காய்கறிகள் சேர்ந்த நிலையில் இருக்கும். இதுவும் உறைப்புச் சுவை கொண்டதே.
* '''பால் கறி''' (வெள்ளைக் கறி): இதுவும் ஒரு வரட்டல் நிலையிலேயே இருந்தாலும், இதற்கு மிளகாய்த்தூள் சேர்க்கப்படுவதில்லை.
* '''கீரைக் கடையல்''': [[கீரை]]யை அவித்துத் தேங்காய்ப்பாலுடன் கடைந்து செய்யப்படும் இதற்குப் பெரும்பாலும் புளிக்காக எலுமிச்சம் பழச் சாறு சேர்ப்பார்கள்.
* '''வறை''': சேர்மானங்களை தேங்காய்ப் பூவுடன் சேர்த்து, சிறிதளவு எண்ணையுடன் சேர்த்து வறுப்பதன் மூலம் கிடைப்பது வறை ஆகும். இலை வகைகள், [[புடோல்]] போன்ற சில காய் வகைகள் போன்றவை [[வறை]] செய்வதற்குப் பயன்படுகின்றன. ''[[சுறா]]'' போன்ற அசைவ உணவுகளிலும் வறை செய்யப்படுவதுண்டு.
* '''துவையல்''': பருப்புப் போன்றவற்றைத் தேங்காய்ப்பூவுடனும், வேறு சேர்மானங்களுடனும் சேர்த்துத் துவைத்து ஆக்குவது துவையல்.
* '''சம்பல்''': தேங்காய்ப்பூ, புளி, உப்பு, வெங்காயம் என்பவற்றுடன், மிளகாய் அல்லது வேறேதாவது சேர்த்து அம்மியில் அரைப்பதன் மூலம் அல்லது உரலில் இட்டு இடிப்பதன் மூலம் ''சம்பல்'' செய்யப்படுகின்றது. மிளகாய் சேர்த்துச் செய்வது மிளாகய்ச் சம்பல். இஞ்சி சேர்க்கும்போது இஞ்சிச் சம்பல் எனப் பலவகைச் சம்பல்கள் பெறப்படுகின்றன. சம்பல் என்ற சொல்லுக்குப் பதிலாக யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் முன்னர் பச்சடி என்றே குறிப்பிட்டு வந்தார்கள். இன்று சம்பல் என்னும் சொல்லே பரவலாக வழங்கப்படுகின்றது. சிங்கள மொழியில் இதனைச் ''சம்போல'' என்பார்கள்.
* '''பொரியல்''':வாழைக்காய், மரவள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு போன்றவற்றைச் சீவல்களாக்கி எண்ணெயில் நன்றாகப் பொர்ப்பதன் மூலம் பொரியல்கள் பெறப்படுகின்றன. அசைவ உணவுகளான, மீன், இறைச்சி என்பவற்றிலும் பொரியல்கள் செய்யப்படுகின்றன.
* '''சொதி''': நீரினால் ஐதாக்கப்பட்ட தேங்காய்ப்பால், உப்பு, வெங்காயம் என்பவற்றைக் கொதிக்கவைத்து, அத்துடன் பழப்புளி அல்லது எலுமிச்சம் சாறு சேர்ப்பதன் மூலம் சொதி ஆக்கப்படுகின்றது.
 
ஒரு முழுமையான மதிய உணவு என்னும்போது மேலே குறிப்பிட்ட எல்லாவகை உணவுகளும் காணப்படுவதுண்டு. எனினும் அண்றாட உணவுகளில் பெரும்பாலானோர் இவ்வாறான முழுமையான உணவை உண்பதில்லை. விசேட நாட்களில் மட்டும் இவ்வாறு பல்வேறுபட்ட கறிகளுடன் உணவு ஆக்கப்படுவதுண்டு.
* '''அன்றாடம் பயன்படக்கூடிய துணை உணவு வகைகள்'''
 
===துணை உணவு வகைகள்===
** [[இடியப்பம்]]
** [[பிட்டு]]
வரி 41 ⟶ 55:
** [[பாண்]] (கோதுமை ரொட்டி)
 
* '''===பனம் பண்டங்கள்'''===
** [[ஒடியல்]] மா உணவுகள்
** [[ஒடியற் கூழ்]]
 
* '''===பருகுவதற்கானவை'''===
** பழஞ்சோற்றுத் தண்ணீர்
** பால் / மோர்
வரி 54 ⟶ 68:
** [[கஞ்சி]]
 
* '''===பழவகைகள்'''===
** [[மாம்பழம்]]
** [[பலாப்பழம்]]
வரி 60 ⟶ 74:
** [[தோடம்பழம்]]
 
* '''===இனிப்பு வகைகள் மற்றும் பிற சிற்றுண்டிகள்'''===
** பயத்தம் பணியாரம்
** மோதகம் / கொழுக்கட்டை
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாணத்து_உணவுப்_பழக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது