யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 62:
 
===துணை உணவு வகைகள்===
காலைச் சாப்பாட்டிற்கும், சில சமயங்களில் இரவுச் சாப்பாட்டிற்கும் எடுத்துக்கொள்ளப்படுகின்ற உணவு வகைகள் துணை உணவு வகைகள் அல்லது சிற்றுண்டிகள் எனப்படலாம். இந்த விடயத்திலும் தமிழ் நாட்டுக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையே வேறுபாடு காணப்படுகின்றது. தமிழ் நாட்டிலே, இட்லி, தோசை முதலியன முக்கியமான காலை உணவாக இருக்கும் அதே வேளையில், யாழ்ப்பாணத்தில் இடியப்பம், பிட்டு முதலியவையே பெரும்பாலும் உண்ணப்படுகின்றன. அப்பம், தோசை முதலியவற்றையும் யாழ்ப்பாணத்தவர் இடையிடையே உண்பது உண்டு. இட்லி மிக அரிதாகவே உட்கொள்ளப்படுகின்றது.
** [[இடியப்பம்]]
* [[இடியப்பம்]]: இடியப்பம் முன்னர் அரிசி மாவில் மட்டுமே செய்யப்பட்டது. கோதுமை மாவின் அறிமுகத்தின் பின்னர், தனிக் கோதுமை மாவிலோ, அரிசியுடன் கலந்தோ இடியப்பம் அவிக்கும் வழக்கம் ஏற்பட்டது. கோதுமை மா மலிவான விலையில் கிடைத்ததும், கோதுமை கலந்த இடியப்பம் மென்மையாக இருந்ததும், கோதுமை இடியப்பம் பிரபலமாகக் காரணமாக அமைந்தது. இடியப்பம் பொதுவாகச் சொதி, சம்பல் ஆகியவற்றுடன் உண்ணப்படுகின்றது. எனினும், வேறு சைவ, அசைவக் கறி வகைகளுடனும் இடியப்பத்தை உண்பதுண்டு.
** [[பிட்டு]]
* [[பிட்டு]]: பிட்டு அரிசி மாவில் மட்டுமன்றி, குரக்கன் மா, ஒடியல் மா போன்றவற்றிலும், அவிக்கப்பட்டு வந்தது. இப்பொழுது, கோதுமை கலந்து அவிக்கப்படுவது உண்டு. பிட்டு எந்தக் கறியுடனும் உண்ணப்படக்கூடியது. பிட்டுக்குப் பால் சேர்த்துப் பால் பிட்டு எனவும், சீனி சேர்த்து சீனிப் பிட்டு எனவும் உண்பது உண்டு.
** [[அப்பம்]]
* [[அப்பம்]]: ஒரு நாள் முன்னரே அரிசியை ஊறவைத்து இடித்து நீருடன் கலந்து புளிக்கவிட்டு அப்பம் சுடுவார்கள். வெறுமனே சுடப்படும் அப்பம் ''வெள்ளையப்பம்'' என்றும், சுடும்போது நடுவிலே தேங்காய்ப் பால் ஊற்றிச் சுடப்படும் அப்பம் ''பாலப்பம்'' என்றும் அழைக்கப்படுகின்றது.
** [[தோசை]]
* [[தோசை]]: யாழ்ப்பாணத்துக் கிராமப் புறங்களிலே சுடப்படுகின்ற தோசை சிறிது வேறுபட்டது. தோசை மாவுக்குச் சிறிது மஞ்சள் சேர்த்துக் கடுகு, மிளகாயும் தாளித்துச் சேர்ப்பார்கள்.
** அவித்த கிழங்கு வகைகள்
** [[பாண்]] (கோதுமை ரொட்டி)
 
===பனம் பண்டங்கள்===
** [[ஒடியல்]] மா உணவுகள்
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாணத்து_உணவுப்_பழக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது