இலங்கை தேசிய வாக்கெடுப்பு, 1982: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 69:
==தேர்தல் ஆணையாளர்==
சனாதிபதியால் மக்கள் தீர்ப்புக்கான அறிவிப்பு விடுக்கப்பட்ட பின் மக்கள் தீர்ப்பு தேர்தலை நடத்தும் பொறுப்பு தேர்தல் ஆணையாளரைச் சார்ந்தது. 1978ம் ஆண்டு அரசியலமைப்பு சட்டவிதிகள், 1981 - 7ம் இலக்க பாராளுமன்ற சட்டமூலம் என்பவற்றுக்கு இணங்க இத்தேர்தல் நடத்தப்படுதல் வேண்டும்.
 
=='ஆம்' 'இல்லை'==
1981 - 7ம் இலக்க பாராளுமன்ற சட்டமூலத்துக்கிணங்க மக்கள் தீர்ப்புக்காக விடப்படும் பிரேரணை வினா வடிவில் முன்வைக்கப்படுதல் வேண்டும். அவ்வாறாயின் வாக்காளர் அப்பிரேரணைக்கு விருப்பமாயின் 'ஆம்' எனவும் விருப்பமில்லையெனில் 'இல்லை' எனவும் வாக்கினை வழங்குதல் வேண்டும்.
 
வாக்குச் சீட்டில் 'ஆம்' 'இல்லை' என்ற சொற்கள் மும்மொழியிலும் அச்சிடப்பட்டிருக்கும். 'ஆம்' என்ற சொல்லுடன் 'விளக்கு' அடையாளமும் 'இல்லை' என்ற சொல்லுடன் 'குடம்' என்ற அடையாளமும் அச்சிடப்பட்டிருத்தல் அவசியமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_தேசிய_வாக்கெடுப்பு,_1982" இலிருந்து மீள்விக்கப்பட்டது