வழங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 34:
== சர்வர் வன்பொருள் ==
[[படிமம்:DL380sREAR.jpg|thumb|ஒரு சர்வர் அலமாரியின் பின்புறம்]]
சர்வர் பயன்பாட்டைச் சார்ந்து, சர்வர்களுக்கான வன்பொருள் தேவைகள் மாறுபடுகின்றன.பொதுவாக ஒரு மேஜை கணிணிக்கு தேவைப்படும் சிபியூ வேகத்தை விட சர்வருக்கு அதிகளவிலான வேகம் தேவைபடுகிறது. ஒரு வலையமைப்பில் இருக்கும் பல பயனர்களுக்கு தேவையான சேவைகளை வழங்க சர்வர்களுக்கு, வேகமான வலையமைப்பு இணைப்புகள் மற்றும் உயர்ந்தளவிலான இன்புட்/அவுட்புட் வெளியீடுகள் போன்ற வசதிகள் தேவைப்படுகின்றன. பொதுவாக சர்வர்கள் ஒரு வலையமைப்பிற்குள் பயன்படுத்தப்படுவதால், ஒரு மானிட்டரோ அல்லது இன்புட் சாதனமோ இல்லாமல் [[தலையில்லா]] நிலையில் (headless mode) அவை செயல்படுத்தப்படலாம். சர்வர் செயல்பாட்டிற்கு தேவையில்லாத செயல்முறைகள் பயன்படுத்தப்படுவதில்லை. [[பயனர் வரைநிலை இடைமுகம்]] (Graphical user interface - GUI) தேவையில்லை என்பதாலும், அது வேறிடத்திற்கு ஒதுக்க கூடிய ஆதாரங்களை இழுத்துவிடும் என்பதாலும், பல சர்வர்கள் பயனர் வரைநிலை இடைமுகத்தைக் கொண்டிருப்பதில்லை. அதே போல ஆடியோ மற்றும் [[யூஎஸ்பி]] (USB) இடைமுகங்களும் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
 
 
பொதுவாக சர்வர்கள் தடையில்லாமல் நீண்ட நேரம் செயல்பட வேண்டும் என்பதாலும், அவற்றின் செயல்பாடு கட்டாயம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதாலும் சிறந்த மற்றும் நீடித்த வன்பொருள்களின் தேவை அதிஅவசியமாகிறது.வர்த்தக கணினி பாகங்களில் இருந்து தான் சர்வர்கள் உருவாக்கப்படுகின்றன என்றாலும், [[பழுது ஏற்படாமல் நீடித்த உழைப்பிற்காக]] [[மிக முக்கியமான]] சர்வர்களுக்கு பிரத்யேக சிறப்பு வன்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன.
உதாரணமாக, வேகமான உயர்திறன் ஹார்டுடிஸ்குகள், வெப்பத்தை வெளியேற்ற பெரிய உள்விசிறிகள் (computer fans) அல்லது நீர்குளிர்விப்பு முறை (water cooling), மின்தடையின் போதும் சர்வரின் செயல்பாடு தடையில்லாமல் செயல்பட தடையற்ற மின் விநியோக கருவிகள் போன்றவை சர்வர்களில் இணைக்கப்பட்டிருக்கும். இந்த சாதனங்கள் முறையே விலைக்கேற்ப உயர்ந்த திறனையும், நம்பகத்தன்மையையும் அளிக்கின்றன. வன்பொருள் ரிடன்டன்சி (ஒன்று பழுதானால், தானாகவே மற்றொன்று அதன் பணியைச் செய்யும் வகையில் பவர்சப்ளைகள் மற்றும் ஹார்டுடிஸ்டுகள் போன்ற சாதனங்கள் ஒன்றுக்கு மேற்பட்டவை இணைக்கப்பட்டிருப்பது) பரவலாக பயன்படுத்தப்படுகிறது. பழுதுகளைக் கண்டறிந்து, சரிப்படுத்தும் ஈசிசி நினைவக சாதனங்களும் (ECC memory devices) பயன்படுத்தப்படுகின்றன; ஈசிசி அல்லாத நினைவகம் (non-ECC memory) தரவு இழப்புகளை (data loss) ஏற்படுத்தக்கூடும்.
 
"https://ta.wikipedia.org/wiki/வழங்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது