நார்மாண்டி படையிறக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{underconstruction}} {{Infobox military conflict |conflict=நார்மாண்டி படையிறக்கம் |partof=[[ஓவர்லார்ட...
 
+
வரிசை 28:
இந்தக் குறியீடு [[நார்மாண்டி படையெடுப்பு]] மற்றும் [[ஓவர்லார்ட் நடவடிக்கை]], டி-டே போன்ற நிகழ்வுகளில் இருந்து வேறுபட்டது. பிரான்சு மீதான ஒட்டு மொத்த படையெடுப்பு நிகழ்வு [[ஓவர்லார்ட் நடவடிக்கை]] எனப்படுகிறது. இது ஜூன் 6 முதல்-ஆகஸ்ட் 25ல் [[பாரிசின் விடுவிப்பு|பாரிசு வீழ்ந்தது]] வரை நடந்த மொத்த நடவடிக்கைகளைக் குறிக்கிறது. இதன் ஆரம்பக கட்ட தரையிறக்கம் ”நார்மாண்டி படையிறக்கம்”/”நெப்டியூன் நடவடிக்கை”, இது நிகழ்ந்த ஜூன் 6, 1944 [[டி-டே]] என்றழைக்கப்படுகிறது. நார்மாண்டி படையெடுப்பு என்பது இந்த படையிறக்கமும் அதன் பின்னர் நார்மாண்டிப் பகுதியினைக் கைப்பற்ற ஜூலை மாத பாதி வரை நடந்த சண்டைகளையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
 
நார்மாண்டியில் படையிறக்கம் இரு கட்டங்களாக நடைபெற்றது. வான்வழியாக 24,000 [[டோங்கா நடவடிக்கை|பிரிட்டானிய]] மற்றும் [[நார்மாண்டியில் அமெரிக்க வான்வழிப் படையிறக்கம்|அமெரிக்க]]ப் படையினர் ஜுன் 5 பின்னிரவிலும், ஜூன் 6 அதிகாலையிலும் தரையிறங்கினர். பின் ஜூன் 6 காலை 6.30 மணியளவில் தரைப்படைகள் கடல்வழியாகத் தரையிறங்கத் தொடங்கின. தரையிறக்கம் நிகழ்ந்த 80 கிமீ நீளமுள்ள நார்மாண்டி கடற்கரை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை [[யூட்டா கடற்கரை|யூட்டா]], [[ஒமாகா கடற்கரை|ஒமாகா]], [[கோல்ட் கடற்கரை|கோல்ட்]], [[ஜூனோ கடற்கரை|ஜூனோ]] மற்றும் [[சுவார்ட் கடற்கரை|சுவார்ட்]]. இவ்வைந்து கடற்கரைகளிலும் ஜூன் 6 இரவுக்குள் 1,60,000 படையினர் தரையிறங்கினர். இந்த நடவடிக்கையில் 5000 கப்பல்களும் 1,75,000 மாலுமிகளும் ஈடுபட்டிருந்தனர். இதுவே போர் வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரும் நீர்நிலப் படையெடுப்பாகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நார்மாண்டி_படையிறக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது