ஆர்மோனியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''ஆர்மோனியம்''' என்பது, சாவிப்பலகை வகையைச் சேர்ந்த ஒரு இசைக்...
 
No edit summary
வரிசை 1:
'''ஆர்மோனியம்''' என்பது, [[சாவிப்பலகை]] வகையைச் சேர்ந்த ஒரு இசைக்கருவி ஆகும். துருத்தி போல் அமைந்த அமைப்பைக் கைகளால் அல்லது கால்களால் இயக்கும்போது, கருவியின் உள்ளே அமைந்த உலோக நாக்குகளின் மேலாகக் காற்றுச் செல்வதனால் ஒலி உருவாகிறது. இவ்வாறு ஒலி உருவாக்கும் கருவிகளில் சிலவற்றில் துருத்தியின் இயக்கம் காற்றை உலோக நாக்குகளின் மீது செலுத்தி அவற்றை அதிரவைத்து ஒலி எழுப்புகின்றன. இவை அமுக்கத் துருத்திவகை எனப்படுகின்றன. வேறு சிலவற்றில் துருத்தியை இயக்கும்போது வெளியிலிருந்து உறிஞ்சப்படும் காற்று உலோக நாக்குகளைத் தடவிச் செல்லும்போது ஒலி எழுகின்றது. இவை உறிஞ்சு துருத்திவகை என்று அழைக்கப்படுகின்றன. ஐரோப்பிய நாடுகளில் மேற்சொன்ன இரு வகைக் கருவிகளையுமே ஆர்மோனியம் என்கின்றனர். வட அமெரிக்காவில் அமுக்கவகைக் கருவியே ஆர்மோனியம் எனப்படுகிறது. [[இந்தியா]], [[இலங்கை]] போன்ற நாடுகளில் பயன்படும் ஆர்மோனியங்கள் பொதுவாகக் கைகளால் இயக்கப்படுபவை. அமுக்க வகையைச் சார்ந்தவை.
 
==வரலாறு==
பிரெஞ்சு நாட்டவரான [[அலெக்சாண்டர் தெபைன்]] என்பவர் 1840 ஆம் ஆண்டில், முதன் முதலாக இதனை உருவாக்கினார். 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மேலை நாடுகளில் இதன் பயன்பாடு உச்ச நிலையில் இருந்தது. இது வசதியாகவும் மலிவாகவும் இருந்ததனால், அக்காலத்தில், சிறிய தேவாலயங்களிலும் சிற்றாலயங்களிலும் இதனை விரும்பிப் பயன்படுத்தினர். எடுத்துச் செல்வதற்கு இலகுவாக இருந்த இக்கருவி அக்கால ஐரோப்பிய வல்லரசுகளின் [[குடியேற்ற நாடு]]களுக்கும் பரவியது.
 
 
[[பகுப்பு:இசைக் கருவிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆர்மோனியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது