ஆர்மோனியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Traditional harmonium played in manhattan apartmentHarmonium2.JPGjpg|right|thumb|250px|இடத்துக்கிடம் எடுத்துச் செல்லக்கூடிய மரத்தாலானமேல்நாட்டு ஆர்மோனியம்]]
'''ஆர்மோனியம்''' (Harmonium) என்பது [[விசைப்பலகை]] வகையைச் சேர்ந்த ஒரு இசைக்கருவி ஆகும். துருத்தி போல் அமைந்த அமைப்பைக் கைகளால் அல்லது கால்களால் இயக்கும்போது, கருவியின் உள்ளே அமைந்த உலோக நாக்குகளின் மேலாகக் காற்றுச் செல்வதனால் ஒலி உருவாகிறது. இவ்வாறு ஒலி உருவாக்கும் கருவிகளில் சிலவற்றில் துருத்தியின் இயக்கம் காற்றை உலோக நாக்குகளின் மீது செலுத்தி அவற்றை அதிரவைத்து ஒலி எழுப்புகின்றன. இவை அமுக்கத் துருத்திவகை எனப்படுகின்றன. வேறு சிலவற்றில் துருத்தியை இயக்கும்போது வெளியிலிருந்து உறிஞ்சப்படும் காற்று உலோக நாக்குகளைத் தடவிச் செல்லும்போது ஒலி எழுகின்றது. இவை உறிஞ்சு துருத்திவகை என்று அழைக்கப்படுகின்றன. ஐரோப்பிய நாடுகளில் மேற்சொன்ன இரு வகைக் கருவிகளையுமே ஆர்மோனியம் என்கின்றனர். வட அமெரிக்காவில் அமுக்கவகைக் கருவியே ஆர்மோனியம் எனப்படுகிறது. [[இந்தியா]], [[இலங்கை]] போன்ற நாடுகளில் பயன்படும் ஆர்மோனியங்கள் பொதுவாகக் கைகளால் இயக்கப்படுபவை. அமுக்க வகையைச் சார்ந்தவை.
 
==வரலாறு==
[[Image:Traditional harmonium played in manhattan apartment.JPG|right|thumb|250px|இடத்துக்கிடம் எடுத்துச் செல்லக்கூடிய மரத்தாலான ஆர்மோனியம்]]
பிரெஞ்சு நாட்டவரான [[அலெக்சாண்டர் தெபைன்]] என்பவர் 1840 ஆம் ஆண்டில், முதன் முதலாக இதனை உருவாக்கினார். 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மேலை நாடுகளில் இதன் பயன்பாடு உச்ச நிலையில் இருந்தது. இது, பெரிய தேவாலயங்களில் பயன்படுத்தப்பட்ட [[குளாய் ஆர்கன்]]களை விட அளவில் சிறியனவாகவும், மலிவாகவும் இருந்ததனால், அக்காலத்தில், சிறிய தேவாலயங்களிலும் சிற்றாலயங்களிலும் இதனை விரும்பிப் பயன்படுத்தினர். எடுத்துச் செல்வதற்கு இலகுவாக இருந்த இக்கருவி அக்கால ஐரோப்பிய வல்லரசுகளின் [[குடியேற்ற நாடு]]களுக்கும் பரவியது.
 
வரி 8 ⟶ 9:
 
1930 களில் மின்னணு ஆர்கன்களின் அறிமுகத்துடன் மேலை நாடுகளில் ஆர்மோனியத்துக்கான வரவேற்புக் குறையத் தொடங்கியது. [[அம்மன்ட் ஆர்கன்]] (Hammond organ) எனப்படும் மின் ஆர்கன், குளாய் ஆர்கன்களின் ஒலிப் பண்பைக் கொடுக்கக்கூடியதாக இருந்ததுடன், விலை, அளவு ஆகியவற்றில் ஆர்மோனியத்துடன் ஒப்பிடக் கூடியனவாகவும் இருந்தன. பெருமளவில் ஆர்மோனியத்தைத் தயாரித்து வந்த கடைசி மேல் நாட்டு நிறுவனமான எசுட்டே கம்பனி தனது உற்பத்தியை 1950களின் நடுப்பகுதியில் நிறுத்திக் கொண்டது. தற்காலத்தில் மேலை நாடுகளிலுள்ள ஆர்மோனியங்கள் பெரும்பாலும் ஆர்வலர்களிடமே உள்ளன. எனினும், இந்தியா போன்ற [[தென்னாசியா|தென்னாசிய]] நாடுகளில் ஆர்மோனியம் இன்னும் ஓரளவு பயன்பாட்டில் உள்ளது.
 
மேலை நாட்டு அமைப்பை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், தென்னாசிய ஆர்மோனியங்கள் அப்பகுதிகளின் தேவைகளுக்கு ஏற்பப் பல மாற்றங்களைப் பெற்றன. தென்னாசிய இசைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட சுரங்களை ஒரே நேரத்தில் வாசிக்க வேண்டிய தேவை இல்லாததனால் இரண்டு கைகளையும் விசைப்பலகைகளை இயக்க இரண்டு கைகளையும் பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை. அத்துடன் தென்னாசிய இசைக் கலைஞர்கள் நிலத்தில் இருந்தே நிகழ்ச்சிகளை நடத்துவதால், மேலை நாட்டு ஆர்மோனியங்களில் இருந்ததுபோல் கால்கள் போன்ற கீழ் அமைப்புக்கள் எதுவும் தேவையாக இருக்கவில்லை. துருத்தியும், மறு கையால் இயக்குவதற்கு வசதியாகக் கருவியின் பின்புறத்தில் அமைக்கப்பட்டது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஆர்மோனியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது