ஆர்மோனியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Harmonium2.jpg|right|thumb|250px|காலால் துருத்தியை இயக்கக்கூடியவாறு அமைந்த மேல்நாட்டு ஆர்மோனியம்]]
'''ஆர்மோனியம்''' (Harmonium) என்பது [[விசைப்பலகை]] வகையைச் சேர்ந்த ஒரு இசைக்கருவி ஆகும். துருத்தி போல் அமைந்த அமைப்பைக் கைகளால் அல்லது கால்களால் இயக்கும்போது, கருவியின் உள்ளே அமைந்த உலோக நாக்குகளின் மேலாகக் காற்றுச் செல்வதனால் ஒலி உருவாகிறது. இவ்வாறு ஒலி உருவாக்கும் கருவிகளில் சிலவற்றில் துருத்தியின் இயக்கம் காற்றை உலோக நாக்குகளின் மீது செலுத்தி அவற்றை அதிரவைத்து ஒலி எழுப்புகின்றன. இவை அமுக்கத் துருத்திவகை எனப்படுகின்றன. வேறு சிலவற்றில் துருத்தியை இயக்கும்போது வெளியிலிருந்து உறிஞ்சப்படும் காற்று உலோக நாக்குகளைத் தடவிச் செல்லும்போது ஒலி எழுகின்றது. இவை உறிஞ்சு துருத்திவகை என்று அழைக்கப்படுகின்றன. ஐரோப்பிய நாடுகளில் மேற்சொன்ன இரு வகைக் கருவிகளையுமே ஆர்மோனியம் என்கின்றனர். வட அமெரிக்காவில் அமுக்கவகைக் கருவியே ஆர்மோனியம் எனப்படுகிறது. [[இந்தியா]], [[இலங்கை]] போன்ற நாடுகளில் பயன்படும் ஆர்மோனியங்கள் பொதுவாகக் கைகளால் இயக்கப்படுபவை. அமுக்க வகையைச் சார்ந்தவை.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆர்மோனியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது