ஆர்மோனியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
19 ஆம் நூற்றாண்டில் [[கர்நாடக இசை]], பார்சி, மராட்டி இசைகள் போன்ற பல்வேறு இந்திய இசை நிகழ்ச்சிகளில் ஆர்மோனியம் முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட தேசிய எழுச்சியினால் ஆர்மோனியமும் ஒரு வெளிநாட்டுப் பொருளாகப் பார்க்கப்பட்டு, அதற்கு எதிர்ப்பு உருவானது. அத்தோடு பல்வேறு நுட்பக் காரணங்களும் ஆர்மோனியத்துக்கு எதிராக அமைந்தன. கர்நாடக, [[இந்துத்தானி இசை]]களுக்கு இன்றியமையாத [[கமகம்|கமகங்களை]] ஆர்மோனியத்தில் வாசிப்பது கடினம். இதில் 12 சுரத்தானங்களே இருப்பதால் 16 சுரத்தானங்களைக் கொண்ட இந்திய இசையை வாசிப்பதில் சிக்கல்கள் உள்ளன. கன ராகங்கள் எனப்படும் சங்கராபரணம், பைரவி, கல்யாணி போன்ற இராகங்களை ஆர்மோனியத்தில் வாசிக்க முடியாது. அத்துடன் இது எழுப்பும் ஒலியும் அதிகம்.
 
இவ்வாறான பல காரணங்களால், அகில இந்திய வானொலி தனது நிகழ்ச்சிகளில் ஆர்மோனியத்துக்குத் தடை விதித்தது. இத்தடை அப்போதைய இந்தியப் பிரதமர் [[சவகர்லால் நேருவின்நேரு]]வின் ஆணைக்கு இணங்கவே விதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது<ref>http://www.brahmintoday.org/magazine/2009_issues/bt70-1204_harmonium.php</ref>. சிறந்த கவிஞராகவும், கர்நாடக இசை நுட்பங்களை அறிந்தவராகவும், விடுதலைப் போராட்ட வீரராகவும் விளங்கிய [[சுப்பிரமணிய பாரதி|சுப்பிரமணிய பாரதியாரும்]] ஆர்மோனியத்தை எதிர்த்துக் கட்டுரை எழுதியுள்ளார்<ref>http://www.tamilvu.org/slet/lA450/lA450ktu.jsp?id=101&sid=10100&pno=0</ref>.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்மோனியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது