"இலங்கை தொடருந்து போக்குவரத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

804 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
==நிலஅளவை==
கம்பனியின் பொறியியலானரான தோமஸ்ட்ரோன் (Thomas Drane) என்பவர் இலங்கைக்கு வந்து நிலஅளவைகளை மேற்கொண்டு கொழும்பிலிருந்து கண்டிவரையில் பாதையமைப்பதற்கு 850,000 ஸ்டர்லிங் பவுண் செலவாகும் என மதிப்பீடு செய்தார். இத்தொகை மிக அதிகமானது எனக் கருதப்பட்டதால் 258,000 பவுண் செலவில் கொழும்பிலிருந்து அம்பேபுஸ்ஸ வரை (54 கி.மீ) மாத்திரம் ரயில் பாதையை அமைப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.
 
எனினும், கொழும்பிலிருந்து கண்டிவரை 800,000 பவுண் என்ற குறைந்த தொகையில் ரயில் பாதையை அமைப்பதற்கு கம்பனியும் இலங்கை அரசும் 1856ல் உடன்படிக்கை செய்துகொண்டன. இத்தொகையும் அதிகம் எனக் கருதிய கோப்பிச் செய்கையாளர்கள், ரயில் பாதை தொடர்பாக மீளாய்வொன்றைச் செய்யுமாறு இங்கிலாந்து அரசாங்கத்திடம் மனுச் செய்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/681130" இருந்து மீள்விக்கப்பட்டது