"இலங்கை தொடருந்து போக்குவரத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,181 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
==கப்டன் மூர்ஸம் சிபாரிசு ==
இதன் விளைவாக, செலவு குறைந்த மாற்றுப் பாதைகளின் சாத்தியம் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காகக் கப்டன் மூர்ஸம் என்பவர் 1857ல் இங்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரின் ஆய்வின்படி கொழும் - கண்டி ரயில் பாதைக்கான 6 மாற்று வழிகள் சிபாரிசு செய்யப்பட்டன. அவற்றில் ஒன்றுக்கான சராசரிச் செலவு 856,557 பவுண்கள் எனவும் மதிப்பிடப்பட்டது.
 
கருங்கல் குன்றுகளினூடாகச் சுரங்கப் பாதைகள் அமைத்தல் மலை அடிவாரங்களில் பாறைகளை குடைதல், பள்ளத்தாக்குகளுக்கு மேல் செங்குத்தான காப்பரண்களை அமைத்தல், நீர் நிரம்பியுள்ள சேற்று நிலங்களை நிரப்புதல், பாலங்களை நிர்மானித்தல் போன்ற பல்வேறு சிரமமான வேலைகள் நிறைவேற்றப்படவேண்டி இருந்ததால் செலவைக் குறைப்பது சாத்தியமல்ல என்பது சுட்டிக்காட்டப்பட்டது. எனவே சிபாரிசு செய்யப்பட்ட மாறு வழிகளுள் ஒன்று தெரிவு செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/681134" இருந்து மீள்விக்கப்பட்டது