பரராசசேகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பரராசசேகரன்''' என்பது, [[யாழ்ப்பாண இராசதானி]]யை ஆண்ட [[ஆரியச் சக்கரவர்த்திசக்கரவர்த்திகள்]]கள் வம்சத்தைச் சேர்ந்த மன்னர்கள், தங்களுக்கு மாறிமாறி வைத்துக்கொண்ட [[அரியணைப் பெயர்]]களுள் இரண்டில் ஒன்றாகும். மற்றப் பெயர் செகராசசேகரன் என்பதாகும்.
 
[[யாழ்ப்பாண வைபவமாலை]]யோ, [[வையாபாடல்|வையாபாடலோ]] அல்லது [[கைலாசமாலைகைலாயமாலை]]யோ யாழ்ப்பாணத்து அரசர்களின் அரியணைப் பெயர்கள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. பின்வந்த ஆய்வாளர்கள், மேற்படி நூல்களையும், பிற்காலத்தில் போத்துக்கீசரால் எழுதப்பட்ட நூல்களையும் வேறு ஆவணங்களையும் கருத்தில் கொண்டு யாழ்ப்பாணத்து அரசர்கள் அரியணைப்பெயர்களைக் கொண்டிருந்தனர் என்ற முடிவுக்கு வந்தனர்.
 
இவ்வம்சத்தின் இரண்டாவது மன்னனில் தொடங்கி, 1450 இல் [[சப்புமால் குமாரயா]] என்பவன் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியது வரை ஐவர் பரராசசேகரன் என்னும் பெயரைத்தாங்கி ஆட்சி புரிந்துள்ளனர் என்கிறார் [[யாழ்ப்பாணச் சரித்திரம் (நூல்)|யாழ்ப்பாணச் சரித்திரம்]]<ref>இராசநாயகம் செ.,''Ancient Jaffna'', Colombo, 1926, AED மறுபதிப்பு: புதுடில்லி, 1993 </ref>என்னும் நூலை எழுதிய [[செ. இராசநாயகம்]]. பதினேழு ஆண்டுகளின் பின் மீண்டும் இவ்வம்சம் ஆட்சிக்கு வந்தது. 1620 இல் போத்துக்கீசர் முற்றாக யாழ்ப்பாணத்தை அடிப்படுத்தும் வரை மேலும் ஐவர் இப் பெயருடன் ஆட்சி செய்துள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/பரராசசேகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது